அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 18 ஜனவரி, 2024

ராமபிரான் பிறந்த கதையும் இறந்த சுவாரசியக் கதைகளும்!!!

யோத்தி மன்னன் தசரதனின் வாரிசாக[மகனல்ல>தனிக்கதை] ஸ்ரீராமர் 12 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்த கதையைப் பலரும் அறிந்திருக்கக்கூடும்.

ராமர் இறந்த கதை எத்தனைப் பேருக்குத் தெரியும்? அது வெகு கவர்ச்சிகரமானது.

ராமர் பிறந்த கதையைப் போலவே இறந்த கதைகளும்[பல புராணங்களில் இடம்பெற்றுள்ளன[புராணங்கள் சொல்லும் நிகழ்வுகள் ஆதாரமற்றவை என்பதை அறிக]. 

//வெகு காலம் அயோத்தியை ஆண்ட ஸ்ரீராமர் சரயு நதியில்  நீராடியபோது  இந்த மண்ணில்லிருந்து மறைந்தார். மறைந்த அதே கணத்தில், அவர் அனந்த சேஷர்[ஆதிசேடன் என்னும் பாம்பு] மீது நீட்டிப்படுத்த நிலையில் காட்சியளித்துப் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.// இதை ஒரு தெய்வீக நிகழ்வு என்று ‘பத்ம புராணம்’ போன்ற மத நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்தத் தெய்வீக நிகழ்வு ராமரின் மரணம் என்று வர்ணிக்கப்படுகிறது. இது ஒரு கதை.

ஒரு நாள் ஒரு முனிவர் ராமரிடம் வந்து, அவரிடம் தனி அறை கேட்டார். அவரும் ராமரும் உரையாடும் அறைக்குள் யாரும் நுழைய வேண்டாம் என்று கூறினார். ஸ்ரீராம், லக்ஷ்மணனை அறையின் கதவைப் பாதுகாக்கும்படி கட்டளையிட்டார், உரையாடலின்போது யாராவது அறைக்குள் நுழைந்தால் அவர் கொல்லப்படுவார் என்றும் கூறினார். ராமாயணத்தின் சில பதிப்புகளில், இந்தத் துறவி வேறு யாருமல்ல, கால தேவன்[யமன்]என்று கூறப்படுகிறது. ஆக, யமனே ராமரைத் தேடிவந்து அழைத்துப்போனான் என்பது மற்றொரு கதை.

பகவான் ராமரின் மரணம் பற்றி வேறொரு புராணக் கதை இப்படிச் செல்கிறது..... 

பிறப்பவர்கள் மரணத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை ராமர் புரிந்துகொண்டார். "யமன், என்னிடம் வரட்டும். நான் எனது சொர்க்க வாசஸ்தலமான வைகுண்டத்திற்குத் திரும்பும் நேரம் இது" என்று அவர் கூறினார். ஆனால், மரணத்தின் கடவுளான யமன், ராமரின் அரண்மனையின் கதவுகளைக் காத்த அனுமனுக்குப் பயந்து அயோத்திக்குள் நுழையத் துணியவில்லை.

யமனின் பிரவேசத்தை அனுமதிக்க, அனுமனின் கவனத்தைத் திசை திருப்பி[தனிக் கதை] யமனுடன் பயணித்தார் ராமர் என்பது பிறிதொரு கதை.

கிட்டத்தட்ட 1,750,000 ஆண்டுகள் மனித உருவுடன் பூமியில் வாழ்ந்து, வைகுண்டம் சென்றார் ராமர் என்பது இன்னுமொரு கதை. 

ராமர் தன் 125ஆவது வயதில் இறந்தார்; 88 வயதுவரை மட்டுமே வாழ்ந்தார் என்று சொல்லப்பட்ட கதைகளும் மக்களிடையே பரவியிருந்தன.

ராமர் கதையை முதன்முதலாக எழுதியவர் வால்மீகி முனிவர்.

பல  தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் நோக்கத்துடன்தான் இதை எழுதினார் என்பர். தேவரிஷி நாரதரின் வேண்டுகோளுக்கு இணங்க இதை இயற்றினார் என்றும் சொல்லப்படுகிறது.

விஷ்ணுபுராணம் ராமரை விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் என்கிறது.

மகாபாரதத்திலும் இவர் கதை குறிப்பிடப்பட்டுள்ளது.

பௌத்த & ஜைன நூல்களிலும் பதிவாகியுள்ளது.

ராமர் பிறந்த நேரம் பற்றிய ஜோதிடக் குறிப்புகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

ராமரின் மரணம் குறித்த இத்தனைக் கதைகளில்[ராமரின் பிறப்பு உட்பட] எத்தனைக் கதைகள் நம்பத்தகுந்தவை?

‘அத்தனையும் ஆதாரமற்றவை; புராணங்கள் புளுகி வைத்தவை’ என்று நினைத்தால் நீங்கள் புத்திசாலி.

‘இவை கற்பனைக் கதைகள் அல்ல; கடவுள் ராமரின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்கள்[சாவிலும் விதம் விதமான விந்தைகள் புரிந்தவர் ராமர் என்பது உங்களின் நம்பிக்கையாக இருக்கலாம்]தான் என்று நீங்கள் நம்புகிறவராக இருந்தால், திருந்தவே திருந்தாத, திருத்தவும் இயலாத மூட பக்திமான் நீங்கள் என்பது உறுதியாகிறது.

இன்னும் பத்து நாட்களில்[28.01.2024] அயோத்தியில் நிகழவுள்ள ஸ்ரீராமர் கோயில் குடமுழுக்கு வைபோகத்தில் கலந்து சிறப்பிப்பதற்கான முழுத் தகுதி உங்களுக்கு உள்ளது.

இன்றே, இக்கணத்திலிருந்தே அயோத்திப் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை நீங்கள் செய்யத் தொடங்களாம்.

வாழ்க ராமர் நாமம்! வளர்க ஸ்ரீராம பக்தி!!

                         *   *   *   *   *

***https://www.speakingtree.in/allslides/end-of-satyuga-how-did-lord-rama-die