‘டிசீஸ் எக்ஸ்[Disease X]’ என்பது ஒரு புதிய தொற்று ஆகும்.
“X நோயானது ஒரு 'X' என்ற நோய்க் கிருமி காரணமாகத் தோன்றலாம்[கண்டறியப்பட்ட பிறகு பெயர் வைப்பார்கள்]. இது விலங்கில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம்; இது ஓர் ‘ஆர்என்ஏ’ வைரஸாக இருக்கலாம்” என்று மருத்துவர் நேஹா என்பவர் தெரிவித்துள்ளார்.
இப்போது மனிதர்களைத் தாக்கிக்கொண்டிருப்பதல்ல இந்த நோய்; எதிர்காலத்தில் ஒரு தொற்றுநோயாகத் தாக்கக்கூடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
அதாவது, இது இப்போதைக்கு ஓர் ‘அனுமான’ நோய்.
பிப்ரவரி 2018இல், உலகச் சுகாதார அமைப்பு(WHO) எதிர்காலத்தில் தொற்றுநோயைத் தூண்டக்கூடிய அறியப்படாத ஓர் அனுமான நோய்க்கிருமிக்குப் பதிலாக ‘நோய் X’ என்ற பெயரை உருவாக்கியது.
300க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் 2022இல் சந்தித்தார்கள். இன்னும் முழுமையாக அறியப்படாத இந்தத் தொற்று நோய் குறித்து ஆராய்வது அவர்கள் சந்திப்பின் நோக்கம் ஆகும்.
இந்த நோய் தாக்கினால், இதன் விளைவு ‘கோவிட் 19’ஆல் நேர்ந்ததைவிட 20 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்பது அவர்கள் ஆராய்ந்து வெளியிட்ட தகவல் ஆகும்.
WHOவும் இது குறித்து எச்சரித்துள்ளது.
உலகப் பொருளாதார மன்றத்தில் விவாதம் நிகழ்த்தப்பட்ட நிலையில், இது சமூக ஊடகங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டது.
இதனால் பாதிப்பு ஏற்படுவது உறுதியானால், சோதனைகள் நிகழ்த்துவது, தடுப்பூசிகள் கண்டறிவது போன்ற பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ள நேரிடும்.
‘ரெம்டெசிவிர்’ என்பது ஒரு வைரஸ் எதிர்ப்பு மருந்தாகும், இதை X நோய்க்குப் பயன்படுத்த இயலுமா என்பது குறித்த ஆய்வும் நிகழ்த்தப்படுகிறது.
ஆகஸ்ட் 2023இல், UK அரசாங்கம் X பற்றி ஆராய்வதற்காக ஓர் ஆய்வு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
கீழ்க்காண்பவை நோயின் அறிகுறிகளாக இருக்க வாய்ப்புள்ளது.
திடீர்க் காய்ச்சல், தசைப்பிடிப்பு, மயக்கம், கழுத்துவலி, முதுகுவலி, தலைவலி, வீங்கிய கண்கள், வெளிச்சத்தை உணரும் திறன் பாதிப்பு போன்றவை.
குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, பிற வயிற்றுத் தொல்லைகள், தொண்டைப் புண், மனக் குழப்பம் போன்றவையும் அறிகுறிகளாக இருக்கலாம்.
கல்லீரல் பாதிப்பும்[[பெரிதாதல்] ஓர் அறிகுறி ஆகலாம்.
மேலும் சில அறிகுறிகள்:
சீரற்ற இதயத் துடிப்பு, வீங்கிய நிணநீர்க் கணுக்கள், வாய், தொண்டை ஆகியவற்றில் கொப்புளங்கள்.
மேற்கண்ட இந்த அறிகுறிகள்[அடேங்கப்பா, இத்தனை அறிகுறிகளா?] தோன்றி நான்கைந்து நாட்களில், நோயாளிகளின் பல உறுப்புகள் செயலிழக்கலாம்; இரண்டாவது வாரத்தில், சில நோயாளிகள் இறப்பைச் சந்திக்கலாம்.
x நோயால் தாக்கப்பட்டு ஒன்பது அல்லது பத்து நாட்கள்வரை சாகாமல் தப்பிப் பிழைத்தவர்கள் இதிலிருந்து குணமடையத் தொடங்குவார்கள்[!?] என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
எக்ஸ் தாக்கினால் இறப்பவர் எண்ணிக்கை 50 மில்லியனாக இருக்கலாம்.
இது குறித்த ஆய்வுகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
* * * * *