நடுவணரசு, 96 வயதான ‘பாஜக’ மூத்த தலைவரும், முன்னாள் பிரதமரும் ஆன அத்வானி அவர்களுக்குப் ‘பாரத ர்த்னா’ விருது வழங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், இந்தியாவின் இந்நாள் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு ‘வாழ்த்து’ச் சொல்லியிருக்கிறார்.
‘நம் காலத்தின் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரான அவர்[அத்வானி], இந்தியாவின் வளர்ச்சிக்குச் செய்த பங்களிப்பு மகத்தானது’ என்பதே அது.
அத்வானியை வாழ்த்தியதற்காக மோடியை நாம் பாராட்டுவோம்.
ஆனால்.....
மேற்கண்ட தகுதியை அத்வானி பல ஆண்டுகளுக்கு முன்னரே பெற்றிருந்தது, பத்தாண்டுகளாகப் பிரதமர் பதவி வகிக்கும்[சில மாதங்களே எஞ்சியுள்ளன] நம் பிரதமருக்கு இப்போதுதான் தெரிந்தததா[மோடியின் பரிந்துரை இல்லாமல் அத்வானிக்கு விருது அறிவிக்கப்பட வாய்ப்பில்லை] என்றொரு கேள்வி நம் மனதை உறுத்துகிறது?
முன்னதாகவே இந்த விருதை அவருக்கு இவர் பரிந்துரைத்திருந்தால், விருது பெற்ற மகிழ்ச்சியில் இயன்ற அளவு அதிக உற்சாகத்துடன் நாட்டுக்கான மேலும் பல நல்ல பணிகளை அவர் செய்திருப்பார்.
ஆகையினால், பிரதமர் மோடி அவர்களிடம் நாம் ஒளிவுமறைவில்லாமல் சொல்ல நினைப்பது.....
96 வயது என்பது ஏறத்தாழ முற்றும் துறந்த முனிவர் ஆகிவிட்ட நிலைதான். ஆயுட்காலம் ஏறத்தாழ முடிவடைகிற காலக்கட்டத்தில் அத்வானிக்கு இந்த விருதை வழங்கவிருப்பது, விருதில் இடம்பெற்றுள்ள வாசகங்களை அவர் எழுத்தெண்ணிப் படித்துப் படித்துப் படித்துப் பொழுதுபோக்குவார் என்று எண்ணித்தானே பிரதமர் அவர்களே?
* * * * *