அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 1 பிப்ரவரி, 2024

புத்தி பேதலித்த[?] இஸ்லாம் பெண்! புகழ்ந்து கொண்டாடும் இந்து மதச் சங்கிகள்!!

‘ஷப்னம் ஷேக்’ என்னும் முஸ்லிம் பெண் மும்பையிலிருந்து 1425 கிலோ மீட்டர் நடைப் பயணம் செய்து அயோத்திக்கு வந்து, குரங்குக் கடவுள் அனுமனைத் தரிசித்தாராம்; கற்புக்கரசன்[?] ராமனைத் தரிசிக்க உள்ளாராம்.

இதைக் கொட்டை எழுத்தில் செய்தியாக வெளியிட்டுக் குதூகளித்திருக்கிறது சங்கிப் பத்திரிகையான ‘தினமலர்-ஜன31,2024 13:16[.https://m.dinamalar.com/detail.php?id=3539290].

இந்தப் பெண்ணின் நடைப் பயணம் பற்றி, ‘இந்து’ இதழ் [https://www.hindutamil.in/news/india/1186376-a-muslim-woman-walks-1-425-km-from-mumbai-to-ayodhya.html] முன்னதாகவே புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுப் புகழ்ந்திருக்கிறது.

இந்த[‘ஷப்னம் ஷேக்’]  அளித்த பேட்டியில், நான் முஸ்லிமாக இருந்தாலும், எனக்கு ராமர் மீது அசைக்க முடியாத பக்தி” என்று ராமனுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

அசைக்க  முடியாத பக்தியாம்!

ராமனின் உச்சிக் கொண்டையா, பட்டை நாமமா, கழுத்தணிகளா, உடுத்த பட்டாடையா, கையில் ஏந்திய பெரிய ‘வில்’லா இவற்றில் பக்திகொள்ளத் தூண்டியது எது? எவை?

அசைக்க முடியாத அத்தனை உறுதியான பக்தியைப் பெறும் அளவுக்கு அல்லா நிகழ்த்தாத அதிசயங்களை ராமன் நிகழ்த்தியிருக்கிறாரா?

இந்த அரை லூசுப் பெண் எதை வைத்து இப்படிப் பேசியிருக்கிறார்?

ராமன், சாதி மத பேதமின்றி அனைவருக்கும் பொதுவான கடவுள் என்றும் பாராட்டியிருக்கிறார் இவர். மனிதர்களுக்குள்ளே சாதி மத பேதங்கள் உருவாவதை ராமமூர்த்தி தடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்ப இவர் மறந்தது ஏன்?

காவிக் கொடி ஏந்தி நடைப்பயணம் மேற்கொண்டாராம். பார்த்தவர்கள் பாராட்டினார்களாம்.

எதற்கு?

கட்டுப்பாடுகள் மிகுந்த இஸ்லாம் மதப் பெண் ஒரு பிரபல இந்துக் கடவுளைத் தேடிப்போய் வணங்குவதன் மூலம் மதம் கடந்த மனித நேயம் வளர்க்கிறார் என்பதற்காகவா[கூடுதலாக ஒரு கடவுளை வணங்குவதால் மனித நேயம் வளருமா?]

“ஆம்” என்றால்.....

பாராட்டியவர்களில் இந்து மதத்தைச் சேர்ந்த எவரேனும் ஒருவர், போபாலில் அமைந்துள்ள பிரபல ‘தாஜ் - உல் -மசூதி’க்குச் சென்று அல்லாவை வழிபட ஒரு நடைப் பயணம் மேற்கொள்வாரா?

மேற்கொள்வாரா?? எப்போது?!