உண்மையைச் சொன்னா, தன்னைச் சுத்திச் சுத்தி வந்து ஆணை அலையவிடுவது ஒரு பொண்ணுக்கு மிகவும் பிடிக்கும். அவன் மீது அடிக்கடிக் கடைக்கண் பார்வையை வீசிக் குழப்பிவிடுவது[”என்னைக் காதலிக்கிறாளா, இல்லையா?”], அவன் தன் பின்னால் சுத்துவதைப் பார்த்தும் பார்க்காதது போல் ரசிப்பது. அவன் தன்னைக் கடந்து போகும்போது, முகத்தில் மெல்லிய புன்னகையைப் படரவிடுவது, ஒரு கட்டத்தில், அவனைக் காணாமல் தவிப்பது, காணும்போதெல்லாம் வெட்கித் தலை குனிவது போன்ற செயல்களில் பெண் ஈடுபடுவாள். இது அனைத்துப் பெண்களுக்கும் பொதுவான குணம்[பலவீனம்?].
சுருங்கச் சொன்னால், பெண் எப்போதுமே தன் உள்ளத்து உணர்ச்சிகளைக் குறிப்பால் உணர்த்துவாள்; வார்த்தைகளால் அல்ல.
இது விசயத்தில் அவள் மகா புத்திசாலியும்கூட.
எப்படி?
தன் காதலை வாய் திறந்து சொல்லாமல், ‘அவன்’ வந்து சொல்லட்டும் என்று காத்திருப்பாள்.
காரணம்.....
சின்னச் சின்னச் சண்டைகள்[ஊடல்] வரும்போது,
”நீதானே என்னைச் சுத்திச் சுத்தி வந்து, உன்னைக் காதலிக்கிறேன். நீ சம்மதிக்கலேன்னா உயிரை விட்டுடுவேன்னு சொன்னவன்” என்று கேட்டு அவன் வாயை அடைக்கலாம்.
நம் மக்கள் மத்தியில் காதல் என்பது ஒரு தவறான வார்த்தை; கவருவது அதைவிடத் தவறான வார்த்தை. ஆண்கள் இதைச் செய்தால் ரசிப்பாங்க. இதையே ஒரு பெண் செய்தால் நடத்தை கெட்டவள்னு பழி தூற்றுவாங்க. அதனால்தான், இது விசயத்தில் பெண்கள் ரொம்பவே எச்சரிக்கையா இருக்காங்க.