மூடம் - அறியாமை.
அறியாமை மற்றும் பகுத்தறிதல் இன்மையால் வெளிப்படும் நம்பிக்கை ‘மூடநம்பிக்கை’ எனப்படும்[Superstitious beliefs are an outcome of ignorance and lack of rational thinking...]
‘பகுத்தறிவுக்கு ஒவ்வாத கட்டுக்கதை, சூன்யம் போன்றவற்றின்மீது மக்கள் கொள்ளும் நம்பிக்கை’ என்றும் சொல்லலாம். [‘Some believe that a superstition is anything that people believe that is based on myth, magic, or irrational thoughts. - dazeinfo[website]
‘அறிவின் துணைகொண்டு, காரணங்களை ஆராயாமல் மூதாதையர் சொல்லிப் போனவற்றை நம்புவது’ என்றும் விளக்கம் தருகிறார்கள்[Superstition is credulous belief or notion, not based on reason, knowledge, or experience. -Wikiquote].
சங்கம் மருவிய காலக்கட்டத்தில் இதை ‘இயற்கை இறந்த நிகழ்ச்சி[Super Natural] என்று குறிப்பிட்டார்கள்[மூடநம்பிக்கைக்குத் தங்க முலாம் பூசியிருக்கிறார்கள்!].
இராமாயணத்தில் சீதை வான ஊர்தியில் கடத்தப்பட்டது; பாரதத்தில், கடவுளே மண்ணுலகுக்கு வருகை புரிந்து மனிதர்களுடன் உறவாடியது; தேரோட்டியது; சிலப்பதிகாரத்தில், கண்ணகி மார்பகத்தைக் கையால் திருகித் துண்டாக்கி எறிய மதுரை நகரம் தீப்பற்றி எரிந்தது; மதுராபுரிப் பெண் தெய்வம் அவள் முன் தோன்றிப் பேசியது; மணிமேகலையில், அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரத்தால் மக்களுக்கு மணிமேகலை உணவு வழங்கியது போன்ற நிகழ்வுகள் இதற்கு உதாரணங்களாகும்.
நம்பிக்கை[belief]க் குடும்பத்தின் ஓர் அங்கமே மூடநம்பிக்கை[superstition]. ஏனையவை, அவநம்பிக்கை[disbelief], தன்னம்பிக்கை[self cofidance] ஆகியன[belief, trust, hope என்னும் மூன்றுமே நம்பிக்கை என்னும் பொருள் குறித்தனவே.
“நான் வெல்வேன்” என்று இயல்பாகச் சொன்னால், அது நம்பிக்கை.
“நான் வெல்வேனா?” என்று சந்தேகத்துக்கு இடமளித்தால், அது அவநம்பிக்கை.
“குறுக்கே பூனை வந்தது. நான் தேர்வாகமாட்டேன்” என்று புலம்பினால் மூடநம்பிக்கை.
‘அவநம்பிக்கை, அறிவுபூர்வமான நம்பிக்கை என்று எதுவும் கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத்தனம்’ என்கிறார் கவியரசு கண்ணதாசன்.
எந்த அடைப்படையில் இப்படிச் சொன்னார் என்பது அறியப்படவில்லை.
‘வெல்வேன்’ என்று நம்பியவன் தோற்றுப்போனால், அவனின் நம்பிக்கை பொய்த்ததே தவிர, அது மூடநம்பிக்கை ஆகிவிடாது.
‘பூனை குறுக்கே வந்ததால்...’ என்று பகுத்தறிவுக்குப் பொருந்தாத ஒரு காரணத்தைச் சேர்க்கும்போதுதான் அது மூடநம்பிக்கை ஆகிறது.
https://kadavulinkadavul.blogspot.com/2024/04/blog-post_25.html