ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

பக்திக்கு விளம்பரம் தேவையா துர்க்கா ஸ்டாலின் அவர்களே?

மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதல்வர் அவர்களின் துணைவியார் துர்க்கா ஸ்டாலின் அவர்களே,

தங்களுடைய கணவர் ஸ்டாலின் அவர்கள் கடவுள் நம்பிக்கை[தி.மு.க.>‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’] உள்ளவர் என்றாலும்,  கற்பனையில் உருவாக்கப்பட்ட கண்ட கண்ட சாமிகளைத் தேடிப்போய்க் கும்பிடும் மூடநம்பிக்கைகளுக்கு ஆட்படாதவர்.

நீங்களோ, அவருக்கு நேர்மாறாவனராக இருக்கிறீர்கள்.

நீங்கள் அவ்வப்போது பிரபலமான சாமிகளை மட்டுமல்லாமல், தங்களைக் கடவுளின் அவதாரம் என்று புளுகித் திரியும் ஆசாமிகளையும் தேடிப்போய்த் தரிசனம் செய்கிறீர்கள்[அரிதாக].

இது குறித்து அவ்வப்போது ஊடகங்களில் செய்தி வருவது வழக்கமாக உள்ளது.

கோயில்களுக்குச் செல்வது உங்களின் விருப்பமாக இருப்பினும், உங்களின் இந்தச் செயல்பாடு பகுத்தறிவாளரான உங்களின் கணவர் முதல்வர் ஸ்டாலினுக்கு அவப்பெயர் சேர்ப்பதாக உள்ளது[”ஊருக்குத்தான் உபதேசம் செய்கிறார். குடும்பத்திற்கு அல்ல. இவர் போடுவது பகுத்தறிவு வேடம்” என்று மக்களில் பலரும் பழித்துப் பேசுகிறார்கள்].

அதைத் தவிர்த்திட.....

“இனியேனும் கோயில்களுக்குச் செல்லும்போது, அதை ஊடகக்காரர்கள் புகைப்படம் இணைத்துச் செய்தியாக வெளியிடுவதற்குத் தடை விதியுங்கள். உங்களின் பக்தி உங்களுக்கானதாக மட்டுமே இருக்கட்டும்; ஊர் உலகத்திற்குத் தெரிய வேண்டாம்” என்பது என் வேண்டுகோள்!

                               *   *   *   *   *

துர்க்கா ஸ்டாலின் சாமி தரிசனம் குறித்த அண்மைச் செய்தி:

‘தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் உறவினர்கள் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். இதன் பின்னர் அவர்களுக்குக் கோவில் வளாகத்தில் உள்ள ரங்க நாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன’

https://www.dailythanthi.com/News/India/durga-stalin-sami-darshan-at-tirupati-ezhumalaiyan-temple-1103429

                                        
               *   *   *   *   *