“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.
மோடி ஓட்டுக் கேட்க[ரோடு ஷோ] வருவது ‘பாஜக’ பிரமுகராகவா, பிரதமராகவா?!
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில்[2024] மோடியும் ஒரு வேட்பாளராகப் போட்டியிடுகிறார் என்பது யாவரும் அறிந்ததே.
வாக்காளர்களுக்கு ‘ஷோ’ காட்டுவதற்காக அவர் இன்று சென்னை வருவது அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளியாகியுள்ளது.
அவர் இந்த நாட்டின் பிரதமர்.
பிரதமர்தான் என்றாலும், ஒரு குடிமகனாகத்தான், தன் கட்சிக்கு[பாஜக] ஓட்டுச் சேகரிக்க[‘ரோடு ஷோ’வின் மூலம்] வருகிறார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
வாக்குச் சேகரிப்பில் ஈடுபடும்போது 100% அவரும் வேட்பாளரே; ஒரு கட்சியின் தலைவரே. அல்லது தலைவர்களில் ஒருவரே.
ஆனால், அனைத்து ஊடகங்களுமே, செய்தித் தலைப்புகளில், ‘பிரதமர் மோடி’ என்றே குறிப்பிட்டுள்ளன.
மோடி தேர்தல் பரப்புரைக்குச் செல்லும்போதெல்லாம் ஊடகங்கள் இந்தத் தவற்றைச் செய்கின்றன[‘பாஜக’ தலைவர் மோடி என்றோ, நரேந்திர மோடி என்றோ குறிப்பிடுதலே முறையானது]மோடியும் இதை அனுமதிக்கிறார்; ஒருபோதும் சுட்டிக்காட்டித் திருத்தியதில்லை.
மோடி ஒரு பிரதமராக, தன் கட்சிக்காக வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவது தன் பிரதமர் பதவிக்குள்ள அதிகாரத்தை மிகத் தவறான முறையில்[அதிகாரத் துஷ்பிரயோகம்] பயன்படுத்தும் குற்றத்திற்கு ஆளாகிறார்தானே? இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாதது ஏன்?
இந்தியாவின் வெகு சாமானியக் குடிமகனான என் சிற்றறிவில் முகிழ்த்த கேள்விகள் இவை.
எவரிடம், அல்லது எவரெவரிடமெல்லாம் கேட்டால் இவற்றிற்குப் பதில் கிடைக்கும்?!
7 மணிநேரம் முன் — PM Visits in Chennai: பிரதமர் மோடி இன்று 'ரோடு ஷோ'..சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் - விபரம் இதோ.! Karthikeyan S ...
விடுபட்டவை: இடையூறுகள் | இந்த வார்த்தையின் மூலம் தேடு: இடையூறுகள்