வியாழன், 6 ஜூன், 2024

2024 தேர்தல்... ‘அந்த 7’ நா.ம.உறுப்பினர்கள் காட்டில் பெருமழை!!!

மோடியின் ‘பாஜக’ வேட்பாளர்கள் 241 தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், தனித்து ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை[272] அக்கட்சி பெற்றிடவில்லை. தேர்தல் கூட்டணியில் இடம்பெற்ற முக்கியக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சிபீடம் ஏறுகிறார் மோடி.

ஆதரவு தருகிற கூட்டணிக் கட்சிகளுக்கு அவர்களின் எதிர்பார்ப்புகளை[பதவி பெறுதல் முக்கியம்] இயன்றவரை[முழுமையாகத் திருப்திப்படுத்துதல் சாத்தியமே இல்லை] நிறைவேற்றினாலும், புதிய திட்டங்கள் தீட்டுவதிலும் அவற்றை அமல்படுத்துவதிலும் முரண்பாடு ஏற்படுமேயானால் அவர்கள் கூட்டணியிலிருந்து விலகிவிடுதல்கூடும்.

இம்மாதிரி நேரங்களில் ஏற்படும் உறுப்பினர் பற்றாக்குறையை ஈடுகட்ட சுயேட்சைகளில் கணிசமானவர்களைத் தங்களின் ஆதரவாளர்களாக ஆக்கிக்கொள்வார்கள் ஆளும் கட்சியினர்.

மோடியும் இதனைச் செவ்வனே செய்துமுடித்திருக்கிறார் என்பதை, 7 சுயேட்சைகள் மோடிக்கு ஆதரவு’ பற்றிக் கீழே*** இடம்பெற்றுள்ள செய்தி[https://tamil.oneindia.com] உறுதிப்படுத்துகிறது.

இங்கே கவனிக்கத்தக்க ஒன்று உண்டு. அது.....

சுயேச்சைகள் 7 பேரும் அமித்ஸுவைத் தேடிச் சென்றிருக்க வாய்ப்பில்லை. அவர்களைத் தேடி அமைச்சர்தான் சென்றிருப்பார். எவ்வளவு கொடுத்தால் 5 ஆண்டுகளுக்கும் அவர்கள் ஆதரவை வாபஸ் பெறமாட்டார்கள் என்பதை அனுமானித்து அன்பளிப்பு வழங்கியிருப்பார் அமித்ஸு.

தேர்தலில் செலவு செய்த தொகை மீட்டெடுப்பது எப்படி என்று மண்டை காய்ந்துகொண்டிருந்த அவர்களை இந்த அன்பளிப்பு  இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும்.

எனவே, 2024 தேர்தல் சுயேச்சைகள் காட்டில் பெருமழை பெய்வித்திருக்கிறது என்கிறோம்!

* * * * *

***[தற்போதைய தேர்தலில் சுயேச்சைகளாகப் போட்டியிட்டு 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களிடமும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி வருகிறார். அவர்கள் பிரதமர் மோடியின் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களை பாஜகவில் இணைத்து பாஜக எம்பியாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது நடந்தால் பாஜகவுக்குக் கூடுதலாக 7 எம்பிக்கள் கிடைப்பார்கள்.

https://tamil.oneindia.com/news/delhi/is-bjp-can-be-form-a-government-without-support-from-nitish-kumar-or-chandrababu-naidu-at-the-centr-611715.html]