வெள்ளி, 7 ஜூன், 2024

மோடிஜி, ஆள்வோருக்கு ‘மனத்தூய்மை’ முக்கியம்! புறத்தூய்மை அப்புறம்!!

மோடிஜி, எவ்வித இடையூறுமின்றி புதுப்பிக்கப்பட்ட பிரதமராக ஐந்தாண்டுகள் நிறைவு செய்திடத் தங்களுக்கு வாழ்த்துகள்.

மூன்றாம் முறையாகத் தாங்கள் பிரதமர் பதவியேற்கத் தயாராகிவரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்திலிருந்த[புதியது] மகாத்மா காந்தி, அம்பேத்கர், வீர சிவாஜி ஆகியோர் சிலைகள் விஷமிகளால் அகற்றப்பட்டிருப்பதை[சுத்தப்படுத்தினார்களாம்] அறிந்து மனம் பதறியிருப்பீர்கள்.

'இது கொடுமையான நிகழ்வு’ என்ற காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரின் செய்திக் குறிப்பைப் பார்த்திருப்பீர்கள்.

நாட்டுக்காக, அந்தரங்கச் சுகம் உட்பட அனுபவிக்க வேண்டிய அத்தனைச் சுகங்களையும் துறந்து, அல்லது கட்டுப்படுத்தி வாழ்ந்தவர் காந்தியடிகள். சுதந்திரம் பெற்ற கையோடு நம்மை நாமே ஆள்வதற்கான நெறிமுறைகளுக்குச் சட்ட வடிவம் தந்தவர் சீரிய சிந்தனையாளரும் தியாகியுமான அம்பேத்கர் அவர்கள்.

இவர்களின் சிலைகளை அகற்றிய அல்லது அகற்றுவதற்குக் காரணமாக இருந்தவரின், அல்லது இருந்தவர்களின் கைகள் துண்டிக்கப்படுதல் வேண்டும் என்பதில் நம் மக்களிடையே கருத்துமாறுபாடுகளுக்கு இடமே இல்லை.

இந்த அளவுக்குக் கடுமையான தண்டனை அளிப்பது மனிதாபிமானம் அல்ல என்பதால், சிலைகளை அகற்றிய கயவர்களுக்குத் தாங்கள் குறைந்தபட்சத் தண்டனையேனும் வழங்குவீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும், அகற்றப்பட்ட சிலைகளை[பழைய நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது]  மீண்டும் புதிய நா.ம.வளாகத்திலேயே, முன்பு இருந்த இடத்திலேயே நிறுவுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வீர்கள் என்பது நம் எண்ணம்.

எதிர்மறை நிகழ்வாக, சிலைகளை அகற்றிய அயோக்கியர்கள் அவை இருந்த இடத்தில் தங்களுடைய சிலையை வைக்க முயன்றால், அதைத் தடுத்து நிறுத்துவீர்கள் என்பது நம் நம்பிக்கை.

தங்களின் அடுத்த ஐந்தாண்டுக்கான ஆட்சியில் புதிய பல சாதனைகள் நிகழ்த்திடத் தங்களை நெஞ்சார வாழ்த்துகிறோம்!

                                               *   *   *   *   *

***//காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாத்மா காந்தி, டாக்டர் பாபாசாகேப் ஆகியோர் சிலைகள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இது கொடுமையானது’// என்று பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்[ஊடகச் செய்தி].

https://www.maalaimalar.com/news/national/statues-of-shivaji-gandhi-ambedkar-removed-from-their-places-of-prominence-infront-of-the-parliament-722216?infinitescroll=1

https://www.dinakaran.com/removal_gandhi_ambedkar_statues_parliament_complex/#google_vignette