வியாழன், 13 ஜூன், 2024

'ஜி.ஆர்.சுவாமிநாதன்' நீதிபதி மட்டுமல்ல, ‘ஆன்மிகப்பதி’யும்கூட!!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,  கோவிலில் எச்சில் இலைகளில் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி வழங்கியுள்ள தீர்ப்பில், "பக்தர்கள் விட்டுச்சென்ற எச்சில் வாழை இலைகளில் உருளுவது அவருக்கு ஆன்மீகப் பலனைத் தரும்" என்ற நம்பிக்கை, அந்தத் தனிப்பட்ட நபரின் "ஆன்மீகத் தேர்வு" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[பிபிசி தமிழ், 23 மே 2024].

தீர்ப்பு சர்ச்சைக்கு உள்ளான நிலையில், இதை எதிர்த்து ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார் என்பது அண்மைச் செய்தி.

‘எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை கோரித் தொடரப்பட்ட வழக்கு விரிவான விசாரணைக்காக வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’[https://tamil.oneindia.com].

விசாரணை முடிந்து வெளியாகும் தீர்ப்பு எதுவாகவோ இருக்கட்டும், எச்சிலை மீது உருளுவது குறித்த நம் கருத்தை இங்குப் பதிவு செய்கிறோம்.

நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன், எச்சில் இலை மீது உருளுவது ஆன்மிகப் பலத்தைத் தரும் என்று குறிப்பிட்டிருப்பது நம்மைப் பெரிதும் சிந்திக்கத் தூண்டுகிறது.

சட்டப்படிப்புப் படித்தபோது, நீதியரசர் எச்சில் இலைகள் மீது உருண்டு ஆன்மிகப் பலத்தைப் பெற்றது எளிதில் தேர்ச்சி அடைய உதவியிருக்குமோ என்றும்,

நீதிபதிப் பதவிக்கான தேர்வில் வெற்றி காண்பதற்கும் இதே உருளுதல் உத்தி/பக்தி அவருக்குப் பயன்பட்டிருக்குமோ என்றும் சந்தேகப்படத் தோன்றுகிறது.

மிகவும் வித்தியாசமாகவும், பிற நீதிபதிகளின் தீர்ப்புகளுக்கு முரண்பாடாகவும் இவர் தீர்ப்புகள் வழங்கிப் பிரபலம் ஆனதற்கும்கூட இந்த ‘உருளுதல்’ முறை பயன்பட்டிருக்கலாம்.

ஆக, தாம் பெற்ற அனுபவங்களின் அடிப்படையிலேயே நீதியரசர் மேற்கண்ட தீர்ப்பை வழங்கினாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்தத் தீர்ப்பை, நீதிதேவதை வழங்கிய தீர்ப்பு என்றே சொல்லலாம்தானே?

எனவே, இவரின் தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தொடுத்தவர் உடனடியாகத் தம் வழக்கைத் திரும்பப் பெற்றிட வேண்டும் என்பது நம் பணிவானதும் கண்டிப்பானதுமான வேண்டுகோள்.

வாழ்க நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன்! வெல்க அவர் வழங்கிய மேற்கண்ட புரட்சிகரமான தீர்ப்பு!!

*   *   *   *   *

===https://www.bbc.com/tamil/articles/ckmm0dn03zyoPublished: Wednesday, June 12, 2024, 17:49 [IST] மதுரை:

===https://tamil.oneindia.com/news/madurai/case-filed-seeking-a-stay-on-the-order-issued-by-judge-gr-swaminathan-has-been-adjourned-to-june-25-613597.html