வெள்ளி, 14 ஜூன், 2024

கேட்டாளே ஒரு கேள்வி!!![அமெரிக்காவின் அதிசயப் பெண் குறித்த பதிவு]

#“..... ஆக, மனுஷனா பிறக்குறதுதான் உன் விருப்பம் என்பதைச் தெரிஞ்சிட்டுக் கடவுள் உன்னைப் படைக்கல; உன் அனுமதியோடவும் அதைச் செய்யல; அவர் விருப்பத்துக்கு உன்னை இப்படிப் பிறப்பிச்சிருக்கார். இன்பங்களோட துன்பங்களையும் கொடுத்திருக்கார். இன்னிக்கிவரை, அவர் நினைச்சபடி நீ இன்ப துன்பங்களை அனுபவிச்சிருக்கே. இனியும் அவர் விரும்புகிறபடிதான் அனுபவிக்கணும். அவரைக் கும்பிடுவதாலோ, நெஞ்சுருகி, ஆடிப்பாடி அவர் புகழ் பாடுவதாலோ  நீ நினக்கிறபடியெல்லாம் எதுவும் நடந்துடாது. புரியுதா?” 


“புரியுது.”#


-இது என் பதிவொன்றில் இடம்பெற்ற உரையாடல்.


இதை மனதில்கொண்டு கீழ்வரும் தகவல்களை வாசியுங்கள்.


அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்த பெண் ‘தியாஸ்’[Kass Theaz, TikToker]; அமெரிக்கர்; புகழ் பெற்ற சமூக ஊடகர்.

தன் அனுமதியின்றி தன்னைப் பெற்றெடுத்ததற்காகத் தன் பெற்றோர் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார்[காணொலியும் வெளியிட்டுள்ளார்] என்பது செய்தி.

மக்களைச் சிந்திக்கச் செய்வதற்காக இப்படியொரு வழக்கைத் தொடுத்திருந்தாலும், இரண்டு பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறார் இவர்[பிள்ளைகள் பெற்றுக்கொள்வதிலும் ஆசை உண்டு என்கிறார்].

அவர்களின் அனுமதியின்றி அவர்களின் பெற்றோர்கள் அவர்களைப் பெற்றதற்குத் தான் பொறுப்பல்ல என்றும் நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார்.

"நீங்கள் இப்போது கர்ப்பமாக இருந்தால், ஒரு மனநல மருத்துவரை அணுகி, வயிற்றில் கருவாக இருக்கும் பிள்ளைகளுக்கு உண்மையில் இந்த உலகில் இருக்க விருப்பம் இருக்கிறதா என்று கேட்குமாறு, கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு ஆலோசனையும் வழங்கியிருக்கிறாராம் தியாஸ்.

தியாஸ் நம் நினைவில் நீங்காத இடம் பெறுவார்!

*   *   *   *   *