சனி, 15 ஜூன், 2024

“மோடி ஆணவக்காரர்”..... ‘ஆர்.எஸ்.எஸ்.’காரனின் அடாவடித்தனம்!!!

2024 தேர்தலில் ‘பாஜக’வின் வெற்றி 241 ஆகச் சுருங்கிவிட்டமை யாவரும் அறிந்ததே.

வழக்கமாக, இந்து மத வெறியைத் தூண்டி பாஜக’வின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பவர்கள் ‘ஆர்.எஸ்.எஸ்’ என்னும் மத வெறியர்கள். கடந்த தேர்தலில் பாஜக’வின் வெற்றி வெகுவாகப் பாதிக்கப்பட்டதில் நிலைகுலைந்திருக்கிறார்கள் இந்த வெறிக் கூட்டத்தினர்.

‘மோடியும் அவரின் சகாக்களும் ஆணவக்காரர்கள் என்பதால்தான், 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை 241ஆகக் குறைந்தது.  ஆணவக்காரர்களுக்கு ராமன் வழங்கிய தண்டனை அது’ என்று மோடியை அப்பட்டமாகச் சாடியிருக்கிறார் ‘ஆர்.எஸ்.எஸ்.’ கும்பலின் தலைவன் இந்திரேஷ் குமார்.

“241ஐத் தவிர்த்து, ஒரே ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாமல் செய்திருந்தால், மோடி முதலான ‘பாஜக’வினரின் ஆணவன் முற்றிலுமாய் அழிந்திருக்கும். ராமன் அதைச் செய்யாதது ஏன்?” என்னும் கேள்விக்கிடையே.....

“ஆணவத்தின் பிறப்பிடமே இந்த ‘ஆர்.எஸ்.எஸ்.’காரர்கள்தானே. இவர்களுக்குக் கடவுள் ராமன் என்ன தண்டனை தரப்போகிறார்?” என்னும் கேள்வியும் நம்முள் எழுகிறது.

தண்டனையை விரைவில் நிறைவேற்றுமாறு கற்பனைக் கடவுளான ராமனை அல்ல, அனைத்தையும் படைத்துக் காத்துப் பரிபாலனம் செய்வதாகச் சொல்லப்படும் உண்மைக் கடவுளை வேண்டுகிறோம்!

                                        *   *   *   *   *

https://tamil.abplive.com/news/india/rss-leader-indresh-kumar-takes-dig-at-bjp-says-those-who-worshipped-lord-ram-but-became-arrogant-were-stopped-at-241-188270, 14 Jun 2024 06:03 PM (IST)