ஐந்து நிமிடம்... பத்து நிமிடம்... அதிகபட்சம் அரை மணிநேரம்தான் தாக்குப் பிடிக்கலாம் ‘அந்தரங்க உறவு’[பல நேரங்களில் பரிதாபமாகச் சில மணித்துளிகளில் முடிந்துபோவதும் உண்டு] விசயத்தில் என்பது நம்மவர்க்குத் தெரிந்திருந்தும், கடத்தல், கூட்டுப் பலாத்காரம், காதல் என்னும் பெயரில் காமம் தணித்துக் கைவிடுதல், கள்ளக் காமம், கழுத்தறுத்தல், அடிதடி, வெட்டுக்குத்து, கொலை என்று குலை நடுங்கச் செய்யும் பயங்கரங்கள் அதிகரித்தவாறு உள்ளன.
அந்தரங்கச் சுகத்துக்கான நேரத்தை அதிகப்படுத்தும் வயாகரா போன்ற, விந்து முந்துதலைப் பெரிதும் பின் தங்கச் செய்யும் மாத்திரைகள் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் வீரியமும் அதிகரிக்கப்பட்டால்.....
உழைப்பதற்கும், ஓய்வெடுப்பதற்கும், உண்பதற்கும் உறங்குவதற்குமான நேரங்கள் வெகுவாகக் குறைந்து, அதிக நேரம் ‘அந்த’ ஒரு சுகத்திற்கு ஒதுக்கும் ஆபத்தான நிலை உருவானால், பல்வேறு ‘பின்விளைவுகள்’ நேர்வதோடு, ‘அது’க்கான போட்டியில் ஆடவர்கள் வெறித்தனமாய் ஒருவரோடு ஒருவர் அடித்துக்கொண்டு சாகும் அவலம் உருவாகும்.
உலகம் ‘காமப்போர்’ நிகழும் களமாக மாறும்.
மூன்றாம் உலக யுத்தம் என்று ஒன்று இல்லாமலே மனித இனம் அழிந்துபோகும்.
ஆகவே, வெகு சாமானியனான நாம் செய்யும் எச்சரிக்கை.....
“உடலுறவை மேம்படுத்த முறையானதும், மிக அவசியமானதுமான மனப்பயிற்சியே போதும்; வயாகரா நயாகரா போன்ற கருமாந்தரங்கள் எல்லாம் வேண்டாம்” என்று முடிவெடுத்து அவற்றின் உற்பத்திக்குத் தடை விதித்தல் வேண்டும்.
அது சாத்தியமே இல்லை என்றால்.....
அதிகபட்சம் கால் மணிநேரம்போல்[கலவிக்கு] தாக்குப்பிடிக்க உதவும் மாத்திரைகளை மட்டுமே உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம்: விற்பனை செய்ய மருத்துவரின் பரிந்துரை தேவை என்று விற்பனையாளர்களுக்கு ஆணை பிறப்பிக்கலாம்.
உலகின் அனைத்து நாடுகளின் ஆட்சியாளர்களும், சமூக நலன் பேணுவோரும், அறிவியலாளரும் இது குறித்துச் சிந்தித்து விரைந்து செயல்படுதல் வேண்டும் என்பது நம் வேண்டுகோள்!