எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

புதன், 10 ஜூலை, 2024

'பெண் அணங்கு > வருத்துகிற தெய்வம்!’... இப்படியும் ஒரு தெய்வமா?!


காணொலியை ‘யூடியூப்’இல் வெளியிட்ட பிறகுதான், ‘பெண் அணங்கு’ என்று காணொலிக் கதைக்குத் தலைப்பிட்டது தவறோ என்று தோன்றியது.

‘அணங்கு’ என்னும் சொல்லுக்கு ‘வருத்தும் தெய்வம்’[தெய்வம் வருத்துமா?!] என்று அறிஞர் மு. வரதராசனார் தரும் விளக்கம்[கீழே > உரையாசிரியர்கள் பலரும் தரும் விளக்கமும் இதுவே] நினைவுக்கு வந்தது.

ஆடவனை ஒரு பெண் ‘உற்று நோக்குதல்’ வருத்தம் தருமோ அல்லவோ,  பெண்ணழகுக்கு மனதைப் பறிகொடுக்கத் தொடங்கிவிட்டால் அதிலிருந்து விடுபடுவது அத்தனை எளிதல்ல என்பதுதான் இந்தக் காணொலிக் கதையின் ‘கரு’வாகும்.