இல்லாத, இதிகாச ராமனை எல்லாம் வல்ல கடவுள் அவதாரம் ஆக்கிப் பிழைப்பு நடத்தும் நாசகாரக் கும்பல் கட்டிவிட்ட கதைதான், ராமன் வானரப் படையுடன் இலங்கை செல்லப் ‘பாலம்’ கட்டினான் என்பது.
‘இஸ்ரோ விஞ்ஞானிகள் அமெரிக்கச் செயற்கைக்கோளிலிருந்து மேம்பட்ட லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீரில் மூழ்கிய மலையின்[கவனத்தில் கொள்ளத்தக்கது] உயர்-தெளிவு வரைபடத்தை உருவாக்கினர்[ஆதாரம்: சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியான ஆய்வறிக்கை]’ என்பது செய்தி[https://tamil.asianetnews.com/ First Published Jul 10, 2024, 10:25 AM IST].
‘இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு காலத்தில் நில இணைப்பாக இருந்த ராமர் சேது பாலத்தின் தோற்றத்தை[மலைத்தொடரின் தோற்றம் என்பதை ராமர் சேது பாலத் தோற்றம் என்று திரித்துக் கூறுகிறான் ஊடகக்காரன்] இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது’ என்கிறது இந்தச் செய்தியை வெளியிட்ட ஊடகங்களில் ஒன்றான ‘ஏசியா நெட்’ .
ராமன், பாலம் கட்டியது உண்மையாயின், இது கட்டப்படுவதற்கு முன்பு, ராவணன் சீதையை விமானத்தில் வைத்துத் தூக்கிச்சென்றது எப்படி என்னும் கேள்வி எழுகிறது.
பொய் சொல்லியே பிழைப்பு நடத்துவதோடு, மக்களை மூடர்கள் ஆக்கி, தேர்தல்களில் வெற்றி பெற்றுப் பதவி சுகம் அனுபவிக்கும் இந்தப் புல்லுருவிகள், அன்று விமானம் இருந்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டதில்லை.
விமானம் பயன்பாட்டில் இருந்தது என்பது உண்மையானால், அதைத் தெய்வப் பிறவியான ராமனும் பயன்படுத்தியிருக்கலாம்[குரங்குகளைப் படை வீரர்களாக்கியது வால்மீகியின் கற்பனைகளில் ஒன்று]; சாதனம் ஏதும் இல்லாமலே அனுமன் என்னும் குரங்கைப் போல் வானத்தில் நீந்திச் சென்று இலங்கையை அடைந்திருக்கலாம்.
ராமனின் புகழ் பாடி அதிகாரச் சுகம் அனுபவிக்கும் இந்தப் பொல்லாத மனிதப் பதர்கள் தண்டனைக்குரியவர்கள்.
இவர்களுக்கான குறைந்தபட்சத் தண்டனை இம்மண்ணிலிருந்து இந்தக் கூட்டத்தை அப்புறப்படுத்துவதுதான்!