வழக்கம்போல், போட்டியிட்டுத் தோற்ற கட்சியினர் மட்டுமல்லாமல், ‘திமுக’ தோற்க வேண்டும் என்று தவமிருந்த கட்சிக்காரர்களும், “பண பலமும் அதிகாரப் பலமும் வென்றது” என்று அறிக்கை மேல் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி வெல்வதும்[பெரும்பாலும்], எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகள் மண்ணைக் கவ்வுவதும், “பண பலமும் அதிகாரப் பலமும் வென்றது” என்று அவர்கள் புலம்பல் அறிக்கைவிடுவதும் வழக்கமான ஒன்றுதான்.
இடைத்தேர்தல்களில் பண பலமும் அதிகாரப் பலமும் பெற்ற ஆளும்கட்சியைத் தோல்வியுறச் செய்வது.....
குழு அமைத்து இயன்றவரை மக்களின் குறையறிந்து அவற்றை நிவர்த்திக்க அயராது பாடுபடுதல், பதவி உட்படப் பலன் எதையும் எதிர்பாராமல் பொதுப்பணி செய்தல், தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றினால் செயல்படுத்தவுள்ள அரிய பயனுள்ள திட்டங்களை அறிவித்தல் என்றிப்படித் திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் செயல்பட்டால் மட்டுமே சாத்தியமாகும்.
மாறாக.....
சுயநல அரசியல் நடத்திக்கொண்டு, “பணம் வென்றது, அதிகாரம் வென்றது” என்று ஊளையிடுவதால் எந்தவொரு பயனும் இல்லை!