அரசு ஊழியர்கள் என்பவர்கள் அரசியல் சட்ட விதிகளின்படி, அரசின் சட்டதிட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டுப் பணியாற்றக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.
எந்தவொரு தனிப்பட்ட அமைப்பும் அவர்கள் மீது அதிகாரம் செலுத்தவோ, அவர்களின் உழைப்பைப் பயன்படுத்தவோ கூடாது என்பது காலங்காலமாகப் பின்பற்றப்படும் நடைமுறை.
இதை இன்றைய ஆட்சியாளர்கள்[தற்குறிகள்] அறியாமலிருப்பது இந்த நாடு அழிவை நோக்கி வெகு வேகமாகப் பயணிப்பதற்கான அறிகுறியாகும்.
இதை இங்கே குறிப்பிடுவதற்கான காரணம், அரசு ஊழியர்கள் RSS எனப்படும் ‘தடியர்கள்’ இயக்கத்தில் சேர்வதற்கு மோடி அரசு அனுமதி அளித்திருப்பதுதான்.
ஒரு தனியார் அமைப்பு[ஆர்.எஸ்.எஸ்] அரசு ஊழியர்களைக் கட்டுப்படுத்தும் அவல நிலை இங்கு உருவாகியுள்ளது.
நாட்டு நலனில் அக்கறையுள்ள கட்சிகள் இக்கணமே ஒருங்கிணைந்து போராடினால் மட்டுமே இந்தியாவைக் காப்பாற்ற முடியும்!
* * * * *
தொடர்புடைய இன்றையச் செய்தி:
#மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், “மத்திய அரசு ஊழியர்கள் RSS இயக்கத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அனுமதி கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சாவர்கரின் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து, அரசு ஊழியர்களை RSSக்கு அனுப்பிவைக்கும் வேலையைத் துவக்கியிருக்கிற மோடி அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்#