ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

‘வன்புணர்வுக் குற்றங்கள்’... இந்தியாவுக்கு 2020இல் 12ஆவது இடம்! 2047ல்?!

“நமது பங்களிப்பில் நாம் தீவிரமாக இருக்க வேண்டிய நேரம் இது. 2047இல், இந்தியா ஒரு வளர்ந்த நாடாகச் சுதந்திர தினத்தின் 100ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாட வேண்டும்....."[https://www.jagranjosh.com/general-knowledge/key-highlights-from-pm-modi-independence-day-speech-1692067102-1] என்று 2023ஆம் ஆண்டுச் சுதந்திர தின விழாவில் நம் பிரதமர் பேசினார்[அவ்வப்போது இதை வலியுறுத்துவது அவர் வழக்கம்].


இதற்கான காரணம், இன்றளவில் வளர்ந்த பத்து நாடுகளின் பட்டியலில்கூட  நம் நாடு இடம்பெறவில்லை[https://www.javatpoint.com/top-10-developed-countries-in-the-world] என்பதுதான்.


பிரதமரின் விருப்பம் ஈடேற இன்னும் 23 ஆண்டுகள்[2047 - 2024] உள்ளன.


23 ஆண்டுகளில் நம் நாடு வளர்ந்து, நாம் செல்வந்தர்களாகி, வசதியான வாழ்வைப் பெறுகிறோமோ அல்லவோ, பசியும் பட்டினியும் இன்றி, மிகக் குறைந்த வசதிகளைப் பெற்றிருந்தாலும் வன்புணர்வு, கொள்ளை, கொலை போன்ற குற்றச் செயல்கள் குறைந்து அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தாலே போதும் என்று எண்ணத் தோன்றுகிறது.


இவ்வாறான எண்ணம் நம் மனதில் உதிக்கக் காரணமான ஒரு புள்ளிவிவரம்.....

இந்தியாவில் 2020இல் கற்பழிப்புச் சம்பவங்களின் எண்ணிக்கை 100,000க்கு   22,172 ஆக உள்ளது[பிற குற்றங்களுக்கான பட்டியல்கள், பதிவின் ‘நீட்சி’ கருதித் தவிர்க்கப்பட்டுள்ளன] அதாவது, 1.80 விழுக்காடு[%]. 

உலக மக்கள்தொகை மதிப்பாய்வுத் தரவுகளுக்கேற்பவும், உள்ளூர் மனித உரிமைகள் அமைப்பின் ஆய்வறிக்கையின்படியும் 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் சராசரியாக தினமும் 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.[https://www.tbsnews.net/world/countries-highest-rape-incidents-144499?amp]

2024வரை இந்த வன்புணர்வுக் குற்றங்கள் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது.


ஒன்றிய அரசு இது விசயத்தில் மிக மிக மிகக் கடுமையான தடுப்பு நடவடிக்ககளை மேற்கொள்ளாவிட்டால்.....


2047இல் வன்புணர்வு அட்டூழியங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தப் புண்ணியத் தேசம் முதல் இடத்தைப் பெற்றிடவும் வாய்ப்புள்ளது.


எனவே, இனியேனும், நம் பிரதமர் ‘வளர்ச்சி’ பற்றி மட்டுமே வாய் வலிக்கப் பேசிக்கொண்டிராமல், வன்புணர்வு முதலான குற்றங்களின் ‘வீழ்ச்சி’ குறித்து மிகுதியும் பேசுவது நாட்டுக்குப் பெரிதும் நன்மை பயப்பதாக அமையும்.


குறிப்பு:

மோடி குறித்து விமர்சனங்களை முன்வைப்பதில் அதிகம் ஈடுபாடில்லை; தவிர்ப்பதும் அத்தனை எளிதாக இல்லை!