சனி, 10 ஆகஸ்ட், 2024

தேவை... ஊருக்கொரு சிவவாக்கியர்!!!

'நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொண என்று சொல்லுமந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்.....

இது ‘சிவவாக்கியர்’[பதினெண் சித்தர்களில் ஒருவர்] பாடலின் முதல் மூன்று வரிகள்.

கடவுள் உண்டா இல்லையா என்பது மிகப் பல ஆண்டுகளாகத் தொடரும் விவாதம். இப்போதைக்கு மட்டுமல்லாமல் எப்போதுமே முற்றுப் பெறாதது இது என்று உறுதியாகச் சொல்லலாம்.

கடவுள் உள்ளார் என்பதை மெய்ப்பிக்க முடியாதது போல ‘அவர் இல்லை’ என்று திட்டவட்டமாக மறுப்பதும் அத்தனை எளிதல்ல.

இந்த ‘இரண்டுங்கெட்டான்’ நிலையைச் சாதகமாக்கி வாழ்நாளெல்லாம் துயருற்று வாழும் மனித மனங்களில் கடவுள் நம்பிக்கையை அழுத்தமாகப் பதித்துவிட்டார்கள் ஆன்மிகர்கள்.

எனவே, பக்தர்களையெல்லாம் பகுத்தறிவாளர் ஆக்குவது அத்தனை எளிதல்ல.

ஆனாலும், அவர்கள் எல்லாம் குறைந்தபட்சம் சிவவாக்கியர் போல்[சிவவாக்கியர் பக்தராயினும் பக்குவப்பட்ட மனதுக்குச் சொந்தக்காரர்] ஆவது பெரிதும் வரவேற்கத்தக்கது.

அது எளிதல்லதான் ஆயினும்.....

ஆறறிவு யுகத்தில், கீழே உள்ளதுபோல், கருகரு கல்லின் நெற்றியில் பட்டை தீட்டி, அங்கே ஒரு கண்ணும் வைத்து, இடுப்பில் கோவணம் போல ஒரு துணியைச் சுற்றி, பூமாலையும் சூட்டிக் கும்பிடு போடுவதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான செயல்.

ஊருக்கொரு சிவவாக்கியர் தோன்றினால் இவர்கள் திருந்துவார்களா?!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக