சென்னை உயர் நீதிமன்ற ஆணைப்படி கோவை ஈஷா மையத்தில், தமிழ்நாடு அரசு அதிகாரிகளாலும் காவல்துறையாலும் சோதனைகள் நடத்தப்பட்டபோது, நாட்டைவிட்டே வெளியேறி[உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் கருணை காட்டியதால்] மாதக்கணக்கில் எங்கோ ஓடி ஒளிந்திருந்த ஜக்கி வாசுதேவன், ஈஷா மையத்திற்கு[கோவை] வந்து நாட்கள் பல ஆன நிலையில், தருமபுரம் ஆதீனக்கர்த்தா ஈஷா மையத்திற்கு வருகைபுரிந்துள்ளார்.
நூற்றாண்டுக் காலப் பாரம்பரியப் பெருமைக்குரியது தருமபுரம் ஆதீனம். அதன் தலைவரான ஞானசம்பந்தப் பரமாச்சாரியரோடு ஒப்பிட்டால், ஜக்கி அண்மைக் காலத்தில் அடர் மழையில் முளைத்த காளான்.
தருமை ஆதீனத்தை ஜக்கியே எதிர்கொண்டு வரவேற்று உபசரித்திருத்தல் வேண்டும்; செய்யவில்லை[ஈஷா மைத்திற்கு ஜக்கி திரும்பாமல் இருந்திருந்தால் திரும்பிய பிறகே இவர் அங்குச் சென்றிருக்க வேண்டும்].
ஜக்கியின் அடிப்பொடிகள்தான்[இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் உள்ளே இருந்துகொண்டு, தியான நேரம் போக மற்ற நேரங்களில் என்ன செய்கிறார்கள்!?] அதைச் செய்திருக்கிறார்கள்.
பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற உயர் அதிகார வர்க்கம் தவிர, இந்த ஆதீனம் போன்ற அற்ப மனிதர்களை முன்னின்று வரவேற்பது தன் தகுதிக்கு இழுக்கு என்று இந்த வேடதாரி எண்ணினார் போலும்.
பல்வேறு ஆதாரங்களுடனான குற்றச் சாட்டுகளுக்கு உள்ளாகி, அவற்றிலிருந்து விடுபட அல்லாடும் நிலையில், தருமை ஆதீனம் போன்றவர்களால் தான் புகழப்படுவது அதற்கு உதவும் என்றுதான் ஜக்கி தன்னை ஈஷாவுக்கு அழைத்திருக்க வேண்டும் என்பதை ஆதீனம் புரிந்துகொளள்ளவில்லை.
தான் அவமானப்படுத்தப்பட்டதைப் புரிந்துகொள்ளாத ஆதீனம், சல்லாபச் சாமியார் ஜக்கியை வானளாவப் புகழ்ந்திருக்கிறார்[*ஊடகச் செய்தி காண்க].
ஆங்கில அறிவையும் அரைகுறை ஆன்மிகப் புரிதலையும் பயன்படுத்தி, உலக அளவில் பிரபலம் ஆகிவிட்ட வாசுதேவனின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிட்டார் ஆதீனம் என்றே சொல்லத் தோன்றுகிறது.
“ஐயோ பாவம் ஆதீனம்” என்று அவருக்காக அனுதாபப்படுவதைத் தவிர நமக்கு வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை!
*https://www.hindutamil.in/news/spirituals/1342944-dharmapuram-adheenam-praise-isha yoga.html -11 Dec, 2024 08:08 PM.