நீங்கள் பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதில்[என்பதைப் பொருத்து] எல்லாம் இருக்கிறது[வாழ்க்கை அமைகிறது]’ என்பது இரண்டாவது தொடர்.
==========================================================================================
‘பிரச்சினை’, எளிதாகப் பொருள் புரியும் சொல் இது.
சூழ்நிலை? வாழும் இடம், உடனுறையும் மனிதர்கள், விலங்குகள், தட்பவெப்பம், இயற்கைப் பேரிடர்கள் என்று நம் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழக் காரணமான பல நிலைகளை உள்ளடக்கிய சொல்[இது ஓரளவுக்குப் புரிய வைக்கிற விளக்கம் மட்டுமே].
பிறந்த சில நொடிகளிலிருந்தே சூழ்நிலை காரணமாகப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம[பிறக்கும்போதே தாய் இறந்துவிட்டால் மிகப் பெரும் பிரச்சினைகளை, அறியாமலே எதிர்கொள்கிறது குழந்தை. இது ஓர் உதாரணம்].
வாழ்வது என்பது மாறிக்கொண்டேயிருக்கும் சூழல்களுக்கு இடையே அமைவது. பிரச்சினைகள் இடம் பெறாத சூழ்நிலையே இல்லை[பிரச்சினையைக் கையாள்கிறவரைப் பொருத்து அது நன்மை பயப்பதாகவோ தீமை தருவதாகவோ அமையும்].
சுருங்கச் சொல்லால், சூழலும் பிரச்சினையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.
பிரச்சினைகள் இல்லை, சூழ்நிலைதான் உண்மை என்றவர், இரண்டையும் இணைத்து[அவற்றை> them]க் குழம்பியிருக்கிறார்; பிறரையும் குழப்புகிறார்.
திரும்பத் திரும்ப இது போன்ற தத்துப்பித்துவங்களைச் சரளமான ஆங்கிலத்தில்[அரிதாகத் தமிழ்] பேசிப் பேசிக் காணொலிகள் ஆக்கிப்[கடந்த சில வாரங்களாக யூடியூப்பில் வரிசைகட்டி நிற்கின்றன] பிரபல ஆன்மிகவாதி ஆகிவிட்டார் ஜக்கி வாசுதேவன் என்னும் போலிச் சாமியார்.