எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 26 டிசம்பர், 2024

அண்ணாமலையின் ஆக்ரோசச் சபதம்! தி.மு.க. ஆட்சிக் கலைப்பு உறுதி!!

#நாளைக் காலை 10 மணிக்கு 6 முறை சாட்டையால் அடித்துக்கொள்வேன். தி.மு.க., ஆட்சியிலிருந்து அகற்றப்படும்வரை செருப்புப் போடமாட்டேன். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும் செருப்பைக் கழற்றிவிடுவேன். 48 நாட்கள் விரதம் இருக்கப்போகிறேன். பிப்., 2ஆவது வாரம் ஆறுபடை வீட்டிற்குச் சென்று முருகனிடம் முறையிடுவேன்#[ஊடகச் செய்தி]

“அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி வன்புணர்வு[?] செய்யப்பட்டது தொடர்பான ‘பாஜக’ தலைவர் அண்ணாமலையின் மேற்கண்ட ஆக்ரோஷப் பேச்சு உணர்த்துவது என்ன?” என்று எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்விக்குக் கிடைத்த பதில்.....

வெகு விரைவில் தமிழ்நாட்டில் ‘தி.மு.க.’ ஆட்சி கலைக்கப்படுவது உறுதி!