சனி, 11 ஜனவரி, 2025

காம இச்சையைத் தணிக்கவா மணியம்மையைக் கடிமணம் புரிந்தார் பெரியார்?

'நாம் தமிழர்' என்று சொல்லித் திரியும் நாறவாயன் பெரியாரை இழிவுபடுத்தியதைத் தொடர்ந்து, மணியம்மையைப் பெரியார் மணம் புரிந்த நிகழ்வையும் கொச்சைப்படுத்திக் குதூகளித்துக்கொண்டிருக்கிறார்கள் ‘அவா’க்களும், ஆர்.எஸ்.எஸ்.காரனிடம் அடிமைச் சேவகம் புரியும் விபீசணத் தடியன்களும்.

71 வயதில் 30 அகவையைக் கடந்த மணியம்மையைப் பெரியார் மணம் புரிந்தார் என்பதை நம்மில் பலரும் அறிந்திருக்கலாம்.

அந்தரங்கச் சுகம்தான் அதற்குக் காரணம் என்றால், அப்படியொன்றும் அழகியல்லாத[மன்னித்திடுக] மணியம்மையைத் தவிர்த்து, பதின்பருவப் பெண்களில் ஒருத்தியைத் தேர்வு செய்திருப்பார் பெரியார்; ஒன்றுக்கு மேற்பட்டவர்களையும் மணந்துகொண்டிருக்கலாம். இது அவர் காலத்தில் வழக்கத்தில் இருந்தது.

முதல் மனைவி நாகம்மை மறைந்தது 1933-இல். அப்போது பெரியாருக்கு வயது 55. மனைவியை இழந்த பிறகும் மறுமணம் பற்றிச் சிந்திக்காமல் மக்கள் பணிக்கென்றே தம் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அவர்.

உடல்நலப் பாதிப்பும் மறுமணம் குறித்து அவரைச் சிந்திக்க அனுமதிக்கவில்லை.

தன்னிச்சையாகச் சிறுநீர் வெளியேறும் பரிதாப நிலையில், எந்நேரமும் சிறுநீர்ப்பையைச் சுமந்துகொண்டிருந்தார் அவர். வெளியூர்ப் பயணங்களின்போதும், ஏன் கடைசி மூச்சுவரை இந்த அவலநிலையிலிருந்து அவருக்கு விடுதலை இல்லை. அப்புறம் எப்படி மறுமணம் செய்து மன்மதக்கலை பயில்வது?

எனவே,  தம் கோடிக்கணக்கான சொத்துக்கு நம்பிக்கைக்குரிய ஒரு வாரிசு தேவை என்பதற்காகவே அம்மையை அவர் மணக்க நேரிட்டது.

இது குறித்த பெரியாரின் அறிவிப்பு:

எனக்கும், எனது பொருளுக்கும் சட்டப்படியான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமும், அவசரமும் ஆகையால், நான் 5,6 வருஷகாலமாகப் பழகியதில் என் நம்பிக்கைக்குப் பாத்தியமானவரும், என் நலத்திலும், இயக்க நலத்திலும் பற்றுக்கொண்டவருமான, மணியம்மையை எப்படியாவது வாரிசுரிமையாக ஆக்கிக்கொள்வது என்பது என் விருப்பமாக இருந்தது. அவருடன் 4,5 பேர்களையும் சேர்த்து இயக்க நடப்புக்கும், பொருள் பாதுக்காப்புக்குமாக ஒரு ட்ரஸ்ட்டுப் பத்திரம் எழுத ஏற்பாடு செய்திருக்கிறேன்.’

மணியம்மையாரை மகளாகத் தத்தெடுக்காமல் மனைவியாக்கிக் கொண்டதற்கான முக்கியக் காரணம்:

அன்றையத் தத்தெடுத்தல் தொடர்பான சட்ட விதிகளின்படி, ஒருவரைத் தத்தெடுக்க, தத்து எடுப்பவரும், எடுக்கப்படுபவரும் ஒரே சாதியாய் இருக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்படித் தத்தெடுக்க முடியாது. அம்பேத்கரின் இந்துச் சட்டத் திருத்தங்கள் 1956-இல் அமலுக்கு வந்த பின்னரே இந்த விதி நீக்கப்பட்டது.

பழைய இந்துச் சட்டத்தின்படி மகள்களுக்குச் சட்டப்படிச் சொத்துரிமை இல்லை. 1956-க்கு முன் பழைய இந்துச் சட்டத்தின்படி பெண்ணுக்குத் தகப்பன் வீட்டில் தங்கவும் சீதனம் பெறவும் மட்டுமே முடியும்.