சொல்லும்போது மட்டுமல்ல, கேட்கும்போதும் மனம் கூசுகிற கடவுள்கள் குறித்த ஆபாசக் கதைகளின் பிறப்பிடம்தான் புராணங்கள்[அடுக்கடுக்காய் உதாரணங்கள் தர இயலும்]. ‘அவர்கள்’[யார் என்பதை நீங்கள் மிக எளிதாக அனுமானிக்கலாம்] மட்டுமே கல்வி கற்றவர்களாக இருந்த காலக்கட்டத்தில், அப்பாவி மக்களிடையே இந்த அசிங்கக் கதைகளைப் பரப்பி, அவர்களைச் சிந்திக்கவிடாமல் தடுத்தார்கள் 'அவர்கள்’.
மன்னர்கள் ஆண்டபோது மட்டுமல்லாமல், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலாகட்டும், இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னராகட்டும் அதன் மூலம் அவர்கள் பெற்ற பயன்கள் மிகப் பல[விவரிக்கத் தனிப் பதிவு தேவை].
மட்டுமல்ல.....
காலங்காலமாய் அவர்கள் பிற இனத்தவருக்குச் செய்த துரோகங்கள் கணக்கில் அடங்காதவை.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அந்தப் ‘பிற இனத்தவர்’[தமிழர்கள்] ஓரளவு கல்வியறிவு பெற்ற நிலையில், ‘அவர்கள்’ திணித்த மூடநம்பிக்கைகளிலிருந்து இவர்களை[பிற இனத்தவர்] மீட்டெடுக்கப் பாடுபட்டவர்களில் முதலிடம் பெறுபவர், ‘தமிழர் தந்தை’ என்று மரியாதையுடன் அழைக்கப்படும்[பொதுவிடங்களில் பெண்களை ‘அம்மா’ என்று அழைப்பது போல்] பெரியார்[“இவர் எத்தனைப் பேர்களுக்குத் தந்தை என்று கேட்டுக் கிண்டல் செய்வது அந்தச் சூதுகாரர்களின் வழக்கம்] ஆவார்.
‘அவர்கள்’ செய்த அயோக்கியத்தனங்களை மக்கள் அறிந்திடச் செய்யப் பெரியார் எடுத்தாண்ட ஆயுதங்களில் புராணக் கதைகளைச் சாடுவதும் ஒன்று.
அவரால் சாடப்பட்ட ஆபாசக் கதைகளில் ஒன்றுதான்[வேதத்தில் சொல்லப்படுவது] மும்மூர்த்திகளில் ஒருவனான ‘பிரமன், தான் பெற்ற மகளைப் புணர ஆசைப்பட்டது[முந்தையப் பதிவில் எடுத்தாளப்பட்டுள்ளது].
‘பிள்ளை பெற, ஓர் ஆண் தன் தாயையோ, சகோதரியையோ, மகளையோ புணரலாம்’ என்று பிரமன் சொன்னதைப்[புராணக் கதை] பெரியாரே சொன்னதாக ஊடகங்களில் பொய் பரப்பினார்கள் ‘அவர்கள்’. ஆனால், தமிழரிடையே பெரியாருக்கு இருந்த மதிப்பை அவர்களால் சிறிதளவும் சிதைக்க இயலவில்லை.
நடப்பு நிகழ்வுகளை ஊன்றிக் கவனித்தால்.....
இந்நாள்வரை தலை நிமிர்ந்து நின்ற... இன்றும் நிற்க முயலும் தமிழினம் வெகு விரைவில், இவன்களும் இவன்களைப் போன்றவர்களும் செய்யும் துரோகத்தால் வீழ்ந்துவிடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அதன் பின்னர் நிகழவிருப்பனவற்றைக் கற்பனை செய்துபார்க்க என் மனதுக்குப் போதுமான வலிமை இல்லை.
* * * * *
*** //சீமான் ஈ.வெ.ரா., பேசி இருப்பதாகக் கூறிய கருத்தை, ஈ.வெ.ரா., எந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறார் என்ற ஆதாரத்தை நான் கொடுக்கிறேன். போலீசார் வீட்டிற்கு வந்தால் அந்த ஆதாரத்தைச் சீமான் கொடுத்தால் போதும். வேறு ஏதும் வேண்டாம். அதைப் பற்றி நான் பொதுவெளியில் பேச விரும்பவில்லை. காரணம், பேசியதை நாம் இப்பொழுது பேச ஆரம்பித்தால் மக்களுக்கு[பெண்கள் குழந்தைகள் உட்பட] அருவருப்பு வந்துவிடும். அதைப் போன்று சில வார்த்தைகள் அதில் இருக்கிறது// -அண்ணாமலை.
நாம்:
ஆட்டக்காரன் சொன்னதைவிடவா ஆட்டுக்காரன் சொல்லவிருப்பதில் அதிக ஆபாசம் இருந்துவிடப்போகிறது?