எல்லாவற்றையும் படைத்த கடவுள் மனிதனையும் படைத்து அவனுக்கு மட்டும் ஆறறிவைக் கொடுத்தாராம்.
சரி.
ஆறறிவைக் கொடுத்தவர் அவரே என்பதால், அதை எதற்கெல்லாம் எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதித்ததோடு, பயன்பாட்டுக்கு வரம்பு கட்டியவரும் அவரே ஆதல் வேண்டும்[வரம்பு இல்லையென்றால் அவரைப் போலவே இன்னொரு கடவுளையோ, பல கடவுளர்களையோ படைத்து அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிடுவான் மனிதன்].
தனக்கு வழங்கி அருளப்பட்ட ஆறறிவால் அவரைப்[கண்ட கண்ட கசமாலக் கடவுள்களைப் படைக்கத் தூண்டியவரும் அவரே] புகழ்ந்து தள்ளுகிறான் மனிதன்.
‘அவன்’ இன்றி அணுவும் அசையாது என்பதால் தன்னைப் புகழ வைத்தவரும் அவரே என்றாகிறது.
ஆக, மனிதனுக்கு ஆறறிவு வழங்கியதற்கான காரணங்களில் அவரைப் புகழ்வதும் ஒன்று என்பதால், மனிதர்களைப் போலவே கடவுளுக்கும் ‘புகழாசை’ உண்டு என்பதை அறிய இயலுகிறது.
புகழ்வதோடு, “எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு” என்று கோரிக்கை வைக்க வழிவகுத்தவரும் அவரே என்பதால்.....
தினம் தினம், தூங்கி எழுந்தவுடன் உங்களுக்குப் பிடித்த கடவுளையோ கடவுள்களையோ வழிபடத் தவறாதீர்கள்.
இன்று வழிபட்டீர்களா?
“இல்லை” என்பவர்கள், கீழே எழுந்தருளியுள்ள, உலகின் நம்பர் 1 பிரபலக் கடவுளான பிள்ளையாரப்பனைப்[படத்தை இங்குப் பதிவு செய்ய வைத்தவர் பிள்ளையாரே] புகழ்ந்து போற்றி வழிபட்டுச் செல்லுஙகள்[மற்ற மதத்தவர்கள் மானசீகமாக அவரவர் கடவுளைப் புகழ்ந்து வழிபடலாம்].