ஒரு கொசு கடித்தவுடன், எறும்போ அல்லது ஒரு பூச்சியோ உடலில் ஊர்வது போன்ற உணர்வு ஏற்பட்டால், ஏற்படும் அரிப்பை உடனே விரல்களால் சொறிந்துகொள்வது நமக்கு ஒருவித ஆறுதலைக் கொடுக்கும்.
நிச்சயம் சொறிந்தே தீர வேண்டும் எனும் உணர்வு, நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து நம்மைத் தன்னிச்சையாகச் சொறியத் தூண்டிவிடும்.
அந்த ஆறுதல் உணர்வுக்குப் பிறகுதான், நம்மை யாரும் பார்த்தார்களா என்பதைக் கவனிப்போம். சிலருக்குப் பிறர் சொறிந்துகொள்வதைப் பார்த்தாலே, அவர்களுக்கு அரிப்பு ஏற்படுவதைப் போன்ற உணர்வு ஏற்படும்.
எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வின் முடிவில், தோலில் ஏற்படும் அரிப்பு நோய் எதிர்ப்புச் சக்தியைச் செயல்படுத்துகிறது என்றும், இது தீங்கு விளைவிக்கும் தொற்றுநோய்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனாலும் பொதுவாக, 'அதிகம் சொறியக் கூடாது, தோல் அழற்சியாக இருந்தால் அதைச் சொறிவது இன்னும் அந்நிலையைத் தீவிரப்படுத்தும்' என்றே மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்[பிபிசி தமிழ்14 பிப்ரவரி 2025]
* * * * *
கூடுதல் தகவல்களுக்கு:
https://www.bbc.com/tamil/articles/cz0le74dj7po