எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

எரிக்கிறான் ‘அவன்’! பற்றி எரிகிறது நம் பாழ் மனம்!!

றேழு மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்தது அந்தத் துயரச் சம்பவம். 

மரணமடைந்த நெருங்கிய உறவினரின் சடலம் எரிமயானத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டபோது நானும் உடன் சென்றிருந்தேன்.

எரியூட்டலின்போது கீழ்க்காணும் காணொலிக் கவிதைக்கான ‘கரு’ முகிழ்த்தது. அது கவிதையாக உருக்கொண்டது சற்று முன்னர்.

ஒரு முறையேனும் வாசிப்பதற்கான தகுதி பெற்றது இது என்னும் நம்பிக்கையில் பகிர்கிறேன்.