பிற மதத்தவரைக் காட்டிலும் இஸ்லாமியரின் கடவுள்[அல்லாஹ்] நம்பிக்கை அழுத்தமானது; உலகின் அனைத்து [நல்ல]நிகழ்வுகளுக்கும் அவனே காரணம் என்று நம்புகிறவர்கள்[எல்லாப் புகழும் இறைவனுக்கே]; தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
இத்தகையவர்களில், “தம்மை மறந்து அவனே நினைவாக வழிபாடு நிகழ்த்திய 700 பேரைக் கொடூரமான இயற்கைப் பேரழிவிலிருந்து அல்லாஹ் காப்பாற்றத் தவறியது ஏன்?” என்னும் கேள்வி தவிர்க்க இயலாததாக உள்ளது.
நம் பதில்:
அண்ட வெளியில் இடம்பெற்றுள்ள பொருள்கள், உயிர்கள் போன்றவை தோன்றிப் பல மாற்றங்களுக்கு உள்ளாகி அழிவதும், மீண்டும் மீண்டும் இது நிகழ்வதும், ஏன், எப்படி, எதன் பொருட்டு என்பன போன்ற கேள்விகளுக்கு இன்றளவும் விடை கண்டறியப்படவில்லை என்பதும் 100% உண்மை.
எதுவும் புரியாத நிலையில், “புரியவில்லை” என்பதை ஏற்க மறுத்துத் தம் பாதுகாப்புக்காகக் ‘கடவுள்’ என்றொருவரைக் கற்பித்து வழிபட்டார்கள்; வழிபடுகிறார்கள் மக்கள்.
கற்பிக்கப்பட்ட கடவுள்களில் ஒருவரே அல்லாஹ் என்பது நம் எண்ணம்; அவரை நம்புவதும் நம்பாததும் இஸ்லாமியருக்கான உரிமை.
உயிரின அழிவுக்கு வறுமை, நோய், ஆதிக்கப் போட்டி போன்றவற்றுடன் நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களும் காரணமாக உள்ளன.
எனவே, தொழுகையின்போது 700 இஸ்லாமியர் ஒரே நேரத்தில் மரணத்தைத் தழுவியது இயற்கையாக நிகழும் பேரழிவுகளில் ஒன்றுதானே தவிர, அல்லாஹ் போன்ற இல்லாத எந்தவொரு கடவுளையும் சம்பந்தப்படுத்துவது அர்த்தமற்றது என்று உறுதிபடச் சொல்லலாம்.
* * * * *
பின்னூட்டமாக இடம்பெற்றவற்றுள் 16 கருத்துரைகளை மட்டும் பதிவு செய்திருக்கிறேன்[பிழைகள் திருத்தப்படவில்லை].
@mohandasssasisekar8431
1 மணிநேரம் முன்
எந்த கோவிலுக்கு தேவாலயங்கள் மசூதிகள் எங்கு சென்றாலும் எந்த கடவுளும் காப்பாற்ற போவதில்லை நடப்பது நடந்தே தீரும் இதில் இந்த மத கடவுள் தான் உண்மை இந்த கடவுள் தான் பெரிது எனும் சன்டை இல்லாமல் இருக்கும் வரை மனிதர்களை மதித்து மனிதர்களாக வாழ்வோம்
@Pstroll8895
1 மணிநேரம் முன் (திருத்தப்பட்டது)
கடவுள்,மதம் இரன்டுமே மனிதனால் உருவாக்கப்பட்டது இயற்கை மட்டுமே நமது கடவுள் ❤ அதை அழிக்காமல் இருப்பதே நல்லது ❤
@Rajesh-zd6xy
1 மணிநேரம் முன்
எந்த கடவுளாலும் எந்த இறைவனாலும் இயற்கைக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டு
@mercyprakash7081
1 மணிநேரம் முன் (திருத்தப்பட்டது)
எல்லாம வல்ல இறைவன் எவனுமே காப்பாற்ற வில்லை போல ?!?!?! நான் இங்கு பேசுவது அனைத்து மதத்தையும் சேர்த்து தான். மதங்களை தூக்கி எரிந்து விட்டு இயற்கையை போற்றி பாதுகாத்திடுவோம்.... அது தான் உண்மையான கடவுள் !!!
@gurumoorthy3688
1 மணிநேரம் முன்
இயற்கையுடன் போட்டி போட்டால் மனிதனால் வெற்றி பெற முடியாது முடிந்த வரை நாம் இயற்கை போற்றி பாதுகாக்க வேண்டும்
@endtha
3 மணிநேரம் முன்
இயற்கையின் சக்தியால் எந்த கடவும் கிடையாது
@subramanik9664
2 மணிநேரம் முன்
Kadavul ?
@kanyar7415
51 நிமிடங்களுக்கு முன்
Allah didn't save them?!
Jesus and other Gods didn't save their devotees as well?
@krishnamoorthydt3752
1 மணிநேரம் முன்
தொழுகை நிகழ்வுகள் நடக்கும்போது இதுபோன்ற விபத்துகள் எங்காவது நடந்ததுண்டா.
இயற்க்கை சொல்லும் செய்தி என்ன?
@guganesana8625
2 மணிநேரம் முன்
Enga ponar alla
@clingam3
2 மணிநேரம் முன்
மியான்மரில் தாய்லாந்து முசுலிம் துரோகத்தால் என்று குறி கதறிய கூட்டம் எப்போது காரணம் என்ன இயற்கை முன் கடவுள் ஒரு கற்பனையே
@karthik9965
2 மணிநேரம் முன்
இப்போ சொல்லுங்க டா கடவுள் இருக்கிறார் என்று😅
@cpushparaj2548
2 மணிநேரம் முன்
No god don't repeat
@Priya-pr9mb
2 மணிநேரம் முன்
Appo Sami ilaya😢
@prashanthc8135
2 மணிநேரம் முன்
allah um ila jesus um ila sivanum ila.....neyeh kadavul un nalla ullameh kadavul.....manitham valarpom manitham kaapom
@dr.paramasivamshanmugam581
3 மணிநேரம் முன்
Any God can not save any one,