வியாழன், 20 மார்ச், 2025

மோடி யார்?!?!?

பிரயாக்ராஜில் நடந்த பிரமாண்டமான மதக் கூட்டத்திற்குப் பிறகும் கிட்டத்தட்ட 1,000 இந்துக்கள் இன்னும் காணவில்லை என்று சமாஜ்வாதித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்; உத்தரப் பிரதேச அரசு அவர்களைக் கண்டுபிடிக்கப் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில்…..

பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா குறித்து மக்களவையில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய மோடி, மகா கும்பமேளாவின்போது முழு உலகமும் இந்தியாவின் மகத்துவத்தைக் கண்டதாகக் கூறியுள்ளார்; "பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவின் வெற்றிக்குப் பங்களித்த கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்குத் தலைவணங்குகிறேன்" என்றும் மனம் நெகிழ்ந்தாராம்.

கும்பமேளா கூத்தடிப்பில் 1000 பக்தர்களைக் காணவில்லை[இன்னும் அதிக என்ணிக்கையிலானவர்கள் பலியாகியிருக்க வாய்ப்புள்ளது] என்று யாதவ் கூறியிருக்க, அவருக்குப் பதிலளிக்காத மோடி.....

கூட்ட நெரிசலில் பலியான 30 பேர்[அதிகாரப் பூர்வமான அறிவிப்பு]களுக்கு இரங்கல்கூடத் தெரிவிக்காத[எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் எழுப்புவது இதனால்தான்] மோடி.....

மகா கும்பமேளாவின்போது முழு உலகமும் இந்தியாவின் மகத்துவத்தைக் கண்டதாகக் கூறியது எப்படி?!.

அழுக்கு நீரைப் புனித நீர் என்று பரப்புரை செய்து[கோடிக்கணக்கான ரூபாய் செலவில்] மூடர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததுதான் மகத்துவமா?

"மகா கும்பமேளா மெகா வெற்றி வெற்றி.. தேசத்தின் ஆத்மாவின் எதிரொலி" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் குதூகளிக்கிறாரே அது எப்படி?

அவருக்கு வழக்கமாக வாக்களிப்பவர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள மக்கள் அனைவரையுமே படு படு மூடர்கள் என்று நினைக்கிறாரா?

இப்படியெல்லாம் நமக்கு நாமே கேட்டுக்கொள்ளலாமே தவிர அவரிடம் கேட்க முடியுமா?

மோடி யார்?

இந்த நாட்டின் பிரதமர்! சர்வ வல்லமை படைத்தவர்!! இங்குள்ள அற்ப மனிதர்களை இரட்சிக்கக் கடவுளால் அனுப்பப்பட்டவர்!!!

*   *   *   *   *

https://www.indiatvnews.com/news/india/pm-modi-addresses-lok-sabha-on-maha-kumbh-in-prayagraj-thanks-all-for-grand-event-2025-03-18-9810

https://www.msn.com/en-in/news/India/mahakumbh-was-another-moment-ofnational-awakening-like-dandi-march-chicago-speech-ram-mandir-pm-modi/ar-AA1B8Gpi?ocid=winp2fptaskbar&cvid=02523e997c564a8aa44a502638fa14d6&ei=14