பழைய இடுகைகளில் சேர்க்கப்பட்டிருந்த படங்கள் முற்றிலுமாய் அழிந்துவிட்டன[அழிக்கப்பட்டன?]. மீட்டெடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. வருந்துகிறேன்.

செவ்வாய், 18 மார்ச், 2025

ஔரங்சீப் கல்லறையை உடைத்து நொறுக்கத் தயார்! ஒரே ஒரு நிபந்தனை!!

#உத்தரப்பிரதேச வலது சாரிகள், அவுரங்கசீப் கல்லறை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாகராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள அவுரங்கசீப்பின் கல்லறையை உடைப்பவருக்கு 21 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். ஸ்ரீ கிருஷ்ண ஜன்மபூமி சங்கர்ஷ் நியாஸின் தலைவரான தினேஷ் ஃபல்ஹாரி இதுதொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்#

சற்று முன்னர்தான் மேற்கண்ட செய்தியை வாசித்தறிய நேர்ந்தது.

கீழ்வரும் நிபந்தனையை வலதுசாரிகள் நிறைவேற்றினால், சத்ரபதி சம்பாஜி நகர் சென்று அவுரங்சீப்பின் கல்லறையை ஓரிரு நாட்களில் உடைத்துத் தூளாக்குவேன் என்பதைத் தெரிவிக்கிறேன்.

நிபந்தனை.....

ஔரங்சீப்பின் ஆவி 24 மணி நேரமும் கல்லறையைச் சுற்றிக்கொண்டு அதைக் காவல் காப்பதாகச் சொல்லப்படுகிறது.

மந்திரங்கள் சொல்லியோ தந்திரங்கள் மூலமாகவோ அந்த ஆவியை அங்கிருந்து விரட்டியடித்து, ஆவி அடித்துப்பிடித்து ஓடுவதைக் காணொலியாக்கி ‘யூடியூப்’இல் வெளியிடுதல் வேண்டும்.

முக்கியக் குறிப்பு:

ஆவி உண்டு என்பதை 100% நம்புகிறவன் நான்[நாத்திகம் பேசுவதெல்லாம் வெறும் நடிப்பு]. இந்தத் தகவலை எவரேனும் தினேஷ் ஃபல்ஹாரிக்கு அனுப்பிவைத்தால் அவர்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டவனாக இருப்பேன். அவர்களுக்கு ரூ21 லட்சத்தில் சரிபாதிப் பங்கு உண்டு!

* * * * *

https://tamil.samayam.com/latest-news/india-news/uttar-pradesh-right-wing-announced-a-reward-of-rs-21-lakh-for-demolishing-mughal-emperor-aurangzebs-grave/articleshow/119154133.cms