பழைய இடுகைகளில் சேர்க்கப்பட்டிருந்த படங்கள் முற்றிலுமாய் அழிந்துவிட்டன[அழிக்கப்பட்டன?]. மீட்டெடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. வருந்துகிறேன்.

செவ்வாய், 18 மார்ச், 2025

மரச் செக்கு[எண்ணை அரைக்கும் இயந்திரம்] மாடு மோடி!!!

புது தில்லி, மார்ச் 17: பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் துளசி கப்பார்டும் திங்கள்கிழமை தேசியத் தலைநகரில் சந்தித்து, மகிழ்ச்சியான விஷயங்களை மட்டுமல்லாமல், கங்கா ஜலம்(புனித கங்கை நீர்) மற்றும் கைவினைப் பொருள் மாலை போன்ற பரிசுகளையும் பரிமாறிக் கொண்டனர்[செய்தி#].

இரு பிரபலங்கள் சந்திக்கும்போது ‘நினைவுப் பரிசு’களைப் பகிர்வது வழக்கத்தில் உள்ள ஒரு பழக்கம்

அம்மையாருக்கு கைவினைப் பொருள் என்று சொல்லப்படும் மாலையைப் பரிசளித்தார் என்பது ஏற்கத்தக்கது. கங்கா ஜலம்[மலஜலம் நினைவுக்கு வருகிறது. ஹி... ஹி... ஹி!!!] நிறைத்த ஒரு குடுவையை[தங்கம்?]யும் பரிசாக அளித்தார் என்பதுதான் உறுத்துகிறது.

மனித மலம், சிறுநீர், உடல் அழுக்கு போன்ற கழிவுகள் இரண்டறக் கலந்த கங்கை நீர் இவருக்கும் இவருடைய அடிப்பொடிகளுக்கும் புனிதமானதாக இருக்கலாம். அமெரிக்காவின்[பெரும்பாலும் கிறித்தவ மதத்தவர் வாழும் நாடு]அந்தப் பெண்மணி இதைப் புனிதமானது என்று நம்புவாரா?

இதனால் அவர் பெறும் பயன் என்ன?

அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் பருகுவாரா? குளிக்கும் நீரில் சிறிதே கலந்துகொள்வாரா? என்ன செய்வார்?

மோடி இது பற்றிச் சிந்திக்காதது ஏன்?

ராட்சத அண்டாக்களில் கங்கை[அபுனிதம்] நீரை நிறைத்து வைத்துக்கொண்டு தினமும் அதில்தான் நீராடுகிறாரோ என்னும் சந்தேகமும் எழுகிறது.

அண்மைக் காலங்களில், மோடி எங்கே போனாலும், எதைச் செய்தாலும் எதைப் பற்றிப் பேசினாலும்[RSS ஐத் தொடர்புபடுத்திப் பேசும்போது, அதைப் புனிதமானது என்றார்]; சுற்றிவளைத்துத் தன்னைப் புனிதராகக் காட்டிக்கொள்ளத் தவறுவதே இல்லை

இவர் 100% புனிதர் என்பதில் சொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமில்லை!

* * * * *

https://theshillongtimes.com/2025/03/17/pm-modi-meets-tulsi-gabbard-gifts-her-vase-containing-holy-ganga-water-from-maha-kumbh/