வியாழன், 24 ஏப்ரல், 2025

‘பூக்குழி’ என்னும் உயிர் பறிக்கும் படுகுழி!!!

எங்கெல்லாம் கோயில்கள் உள்ளனவோ[குறிப்பாக அம்மன் கோயில்கள்] அங்கெல்லாம் தவறாமல் ஆண்டுதோறும் ‘தீ மிதி’(பூக்குழி மிதித்தல்) விழா நடத்துகிறார்கள் பக்தர்கள்.

பெயர்தான் ‘தீ மிதி’ விழாவே தவிர, ‘தீக்குழி’யில் கொட்டப்பட்டுள்ள தீயை[நெருப்பு] மிதித்து நடந்து செல்வர்கள் எவரும் இல்லை; உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடுகிறார்கள்.

பக்தியால் அபிரிதமான சக்தி பெறுகிற நீங்கள், பூக்குழியில் படுத்துப் புரளலாமே என்றால், நெற்றிக்கண் திறக்கிறார்கள். 

அடித்துப்பிடித்து ஓடும் பக்திமான்களில் கணிசமானவர்கள் அவ்வப்போது குப்புறக் கவிழ்ந்து விழுந்து படுகாயமடைவதும் நிகழ்கிறது; சாமிக்கு உயிரைக் காணிக்கை ஆக்குபவர்களும் உள்ளனர்.

காலங்காலமாக இவர்கள் கடைபிடிக்கும் காட்டுமிராண்டித்தனம் இது.

நாமக்கல் எங்கள் மாவட்டம். முட்டை உற்பத்தியிலும் சுமையுந்து[லாரி] & ஆழ்துளைக் கிணறு தோண்டும்[ரிக்] தொழில்களிலும்,  உலகப் புகழ் பெற்ற இந்த மாவட்டத்தில் தரமான கல்வியளிக்கும் நிலையங்கள் பெருமளவில் இருக்கின்றன.

இருந்தும், பக்தி நெறியில் செல்வோரின் புத்தி மட்டும் வளரவே இல்லை.

கீழே இடம்பெற்றுள்ள காணொலி நிகழ்ச்சி இதற்கான  அண்மைக் கால உதாரணம்.

காணொலி: