பா.ஜ.கவின் தற்போதைய ஆட்சி பற்றிய உங்கள் கருத்து என்ன?[Quora கேள்வியும் பதிலும்> புதுப்பிக்கப்பட்ட பதிவு]
ஆட்சியா நடத்துறாய்ங்க?
- எந்த மாநிலத்துல எவன் ஆட்சியக் கலைக்கலாம்னுல பாத்துட்டு இருக்கானுங்க.
கரோனா தொற்று பரவிக்கிட்டு இருந்த சமயத்துலகூட மத்தியப்பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கலைச்சானுங்க. அதுக்கு முன்னாடி கர்நாடகாவுல கலைச்சானுக. கோவாவுலகூட, தில்லுமுல்லுப் பண்ணி ஆட்சியைப் பிடிச்சானுங்க. எப்ப எவன் ஆட்சியைக் கலைக்கலாம்னு நெனைக்கிறதே இவனுங்க வேலை. இதுல எங்க மக்களுக்காக ஆட்சி பண்ணப் போறானுங்க.
- இப்போ பொதுத்துறை நிறுவனங்களை விக்கிறாங்க. இன்னும் கொஞ்ச நாள்போனா, உங்களுக்கே தெரியாமல், உங்களை வித்துட்டு இருப்பாய்ங்க.
- ஆ ஊன்னா எப்பப் பாத்தாலும் நாடு, நாட்டுப்பற்றுனு கூவிகிட்டு இருக்குறானுக. அப்ப நாங்கல்லாம் என்ன காட்டுலயா வாழுறோம். நாட்டுப்பற்றுனா நாட்டோட சட்டத்திட்டத்தை மதிச்சு வாழுறதே தவிர, எப்பப் பாத்தாலும் அங்க எல்லையில அவன் தாக்குறான், இங்க இவன் அடிக்கிறான்னு சொல்லிட்டுத் திரியறது இல்ல.
- கச்சா எண்ணெய் விலை எவ்ளோதான் கொறைஞ்சாலும் பெட்ரோல் டீசல் விலையைக் கொறைக்கமாட்டானுங்க. சுமுருதி ராணின்னு ஒரு அம்மணி போன காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் மன்மோகன்சிங்குக்குப் புடவையும் வளையலும் அனுப்பி அசிங்கப்படுத்தினாங்க. இப்ப கரோனா வந்ததுல அவனவன் பிச்சையெடுக்கும் நிலைமைக்குப் போய்ட்டான். இந்தச் சமயத்துலகூட, பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலையைக் கொறைக்க மாட்டார் இப்போ உள்ள பிரதமர். இவருக்கு என்ன அனுப்பலாம்னு இருக்கார் இந்த அம்மணி?
- 2004இலிருந்து 2014வரை இருந்த பிரதமர்களை எவ்ளோ வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனா, இப்போ இருக்குற பிரதமரை விமர்சிச்சிட்டா அதெப்படி தேசத்தோட பிரதமரையே விமர்சிக்கலாம்னு கொடிபுடிச்சிட்டு வந்துருவானுங்க.
- ஆமா, அப்புடி என்ன இவங்க ஆட்சியில் பெருசா சாதிச்சிக் கிழிச்சாங்க? புடுங்குனது எல்லாம் தேவையில்லாத ஆணி.
- இவிங்க ஆட்சியில பணக்காரன் பணக்காரனாயிட்டே போறான். ஏழை பரம ஏழை ஆயிட்டே போறான். அதைப் பத்தியெல்லாம் துளியும் கவலைப்படமாட்டாங்க. ஓட்டுப் போட்ட மக்களுக்காக ஆட்சியை நடத்துங்கடான்னா, அம்பானி அங்கிள், அதானி அங்கிள் செழிப்பா இருக்காங்களா இல்லையான்னு ஆராயுறான். அவுனுங்கதான் இவனுங்களுக்கு முக்கியம்.
- மாநில அரசுகளிடம், மக்களிடம் கருத்து ஏதும் கேட்காம யூனியன் பிரதேசமாக, மாநிலமாக இவங்க இஷ்டத்துக்குப் பிரிப்பாங்க. நாளைக்குத் தமிழ்நாட்டுக்கும் இதே நிலைமைதான். மூனா, நாளா பிரிக்கப் போறாய்ங்க அப்பவும் மோடி வாழ்கன்னு இங்க கூவிட்டு இருப்பானுக.
இங்க எல்லாமே நடிப்பு, வாய் ஜாலம் மட்டும்தான். சிவாஜி இன்னும் சாகலைங்கோ, அவரையும் மிஞ்சிய நடிகர் இங்க இருக்காப்ல. ஆஸ்கருக்கும் மிஞ்சிய விருது இருந்தா சொல்லுங்க.
போயி இந்த நடிகனுங்களுக்குச் சில்லறைக் காசை வீசிச் சிதறவிடுங்கோ. அப்புறம் நீங்களும் கோட்ஸே மாதிரி தேசப்பக்தாள் ஆகிவிடலாம்.
நன்றி:
[பாதுகாப்புத் துறை PSU இல் உலோகவியல் பொறியாளர்]