எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 6 மே, 2025

‘இந்தியா-பாகிஸ்தான் போர்’... தேவை வீடுதோறும் பதுங்கு குழி!!!

26 சுற்றுலாப் பயணிகளைப் படுகொலை செய்த தீவிரவாதிகளைக் கைது செய்ய முடியுமோ முடியாதோ, அவர்களைத் தூண்டிவிட்ட பாகிஸ்தானை மண்ணோடு மண்ணாக்குவதாகச் சபதம் செய்திருக்கிறார் நம் பிரதமர் மோடி.

எப்பாடுபட்டேனும் தாம் மேற்கொண்ட சபதத்தை நிறைவேற்றிக் காட்டுவார் நம் பிரதமர்.

அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துமுடித்து, நம் பரம்பரை எதிரி பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதற்கு முன்னரான ‘போர் ஒத்திகை’யை நாடெங்கும் நடத்திமுடிக்க ஆணை பிறப்பித்திருக்கிறார் அவர்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள நகரங்களிலும் ஊர்களிலும், நம் பகைவனின் வான்வழித் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்கான ஒத்திகைகள் நடத்தப்படும் என்று மோடி அரசு அறிவித்துள்ளது.

எல்லைப்புற ஊர்களில் மட்டுமே ஒத்திகை நடத்துவது போதாது என்பது நம் எண்ணம்.

“இந்தியா தாக்கினால் நாங்கள் அணுகுண்டுகள் வீசுவோம்” என்று பாகிஸ்தான்காரன் சொல்லியிருப்பதாலும், அவன் சொன்னபடியே அவன் வீசும் அக்குண்டுகள் இந்தியா முழுவதும் பேரழிவை உண்டுபண்ணும் என்பதாலும் ஒட்டுமொத்த இந்தியர்களும் தத்தம் வீடுகளில் பதுங்கு குழிகளைத் தோண்டி வைத்து, போர் ஒத்திகையின்போது குழிகளில் பதுங்குவதற்கான பயிற்சியை மேற்கொள்ளுதல் அவசியம் ஆகும்.

ஆனாலும், 

அவன் அணுகுண்டுகள் வீசுவதற்கு முன்னால், நம் பிரதமர் அவர்கள் அடுத்தடுத்து அணுகுண்டுகளை[அவனிடம் 130 குண்டுகள் மட்டுமே இருப்பு வைத்துள்ளான். நம்மிடம் அதனினும் பல மடங்கு குண்டுகள் உள்ளன] வீசிப் பாகிஸ்தானை மண்ணோடு மண்ணாக்குவார் என்பது உறுதி.

வாழ்க நம் பிரதமர்! வெல்க இந்தியா!! ஒழிக பாகிஸ்தான்!!!