செவ்வாய், 6 மே, 2025

‘உடனடி ஒத்திகைகள்’... 1.‘பாக்.-இந்தியா’ போர்! 2.மோடிக்குப் பாராட்டு விழா!!

//மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மாநிலங்களில் மே 7ஆம் தேதி போர்ப் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட வேண்டும். விமானத் தாக்குதல் தொடர்பான சைரன் ஒலி எழுப்புதல் சரியாக வேலை செய்கிறதா என்று சரிபார்க்க வேண்டும். போர் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிப் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்//-https://www.dinamalar.com/news/india-tamil-news/central-government-orders-states-to-start-war-preparedness-drills/3923061//

உ.து.அமைச்சகத்தின் அறிவிப்பின் மூலம் ‘பாக்.-இந்தியா’ இடையே போர் மூளும் என்பது உறுதியாகிவிட்டது.

போரில் வெற்றி நமதே[இந்தியாவுக்கே] என்பதும் நூற்றுக்கு நூறு உறுதி.

வெற்றிக்கனியைச் சுவைத்த சூட்டோடு, நம் பிரதமர் மோடியின் அறிவாற்றலையும் ஆளுமைத் திறனையும் போற்றும் வகையில் அவருக்குப் பாராட்டு விழா நடத்த நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

அந்த விழா இதுவரை உலக அளவில் எந்தவொரு தலைவருக்கும் நடத்தப்பட்டதையும்விடவும் மிக மிக மிகச் சிறப்பாக அமைதல் அவசியம்.

எடுத்த எடுப்பில் அவ்வாறானதொரு விழாவை நடத்துவது சாத்தியம் இல்லை என்பதால் முன்கூட்டியே ஒத்திகை பார்ப்பது நல்லது.

ஆகவே, ‘பாக்.-இந்தியா’ போருக்கு ஒத்திகை நடத்தும் அத்தனை மாநில அரசுகளும், மோடிக்கான பாராட்டு விழாவுக்கும் ஒத்திகை நடத்திட வேண்டும் என்பது நம் வேண்டுகோள்.

வாழ்க மோடி! வெல்க ‘பாரத்’!!