எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 7 மே, 2025

‘பாக்.-இந்தியா போர்’... ஊஹூம், நம்பவே முடியல!!!

'இந்தியா-பாகிஸ்தான் மோதல் & போர் பற்றிய பரபரப்பான செய்திகளைத் தேடித் தேடி வாசித்துக்கொண்டிருந்த நிலையில், தற்செயலாக, ‘தமிழ்ச்சரம்’ திரட்டியில் இடம்பெற்றிருந்த https://thiruttusavi.blogspot.com/ பதிவைச் சொடுக்கியதில் கீழ்க்காணும் தகவல்கள்[தலைப்பு:  


]


இடம்பெற்றிருந்ததை அறிய நேர்ந்தது.

சற்றும் எதிர்பாராத தகவல்கள் உள்ளதால், திருத்தம் ஏதும் செய்யாமல் பகிர்கிறேன்.

#இந்தியச் சேனல்கள்[ஊடகங்கள்> 07.05.2025]இந்தியா பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களில் குண்டு போட்டதாகச் சொல்கின்றன.

ஸ்கை நியூஸில், பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் "தாக்குதல் நடத்தப்பட்டது பொதுமக்கள் வசிக்கும் பகுதியில். பெண்கள், குழந்தைகள் என்று பலரும் கொல்லப்பட்டனர். நாளையே சர்வதேச ஊடகவியலாளர்களை அழைத்துப்போய்க் காட்டவுள்ளேன். பாகிஸ்தான் மறுதாக்குதல் தொடுக்கும்" என்கிறார்.

செய்தியில், ‘பாகிஸ்தான் தரப்பில் இருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 41 பேர் காயம்பட்டுச் சிகிச்சையில் உள்ளனர் என்று டைம்ஸ் ஆப் இந்தியா’ ஊடகம் சொல்கிறது.

இதுவரை நமக்குக் கிடைத்துள்ள படங்களில் இந்திய அரசு குண்டுபோட்ட இடங்களில் குடியிருப்புகளும் உள்ளன. அங்குதான் பொதுமக்கள் உயிரிழந்ததாகத் தெரிகிறது#