எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 10 ஜூலை, 2025

மோடிக்கு விருதுகள்... ‘விருது சூழ் வித்தகன்’! ‘சுற்றுலா நாயகன்’!!

பிற நாட்டவர்கள் போட்டி போட்டுக்கொண்டு நம் பிரதமர் மோடிக்கு விருதுகள்[பெற்றுள்ள விருதுகள் 27] வழங்கி அவரைப் பெருமைப்படுத்துகிறார்கள்; பெருமிதம் கொள்கிறார்கள்.

நம் நாட்டில் ஒரு விருது மட்டுமே{‘தர்மச் சக்ரவர்த்தி’[?!] வழங்கப்பட்டுள்ளது> https://www.dinamalar.com/news/india-tamil-news/prime-minister-modi-honored-with-the-title-of-dharma-chakravarthy/3967761< இது போதாது. ஒரு நூறு விருதுகளேனும் வழங்குதல் அவசியம்}.

இப்போதைக்கு, அனைத்திந்தியர்களிடமும் கீழ்க்காணும் விருதுகளை[ஒன்றுக்கு இரண்டாக] அவருக்கு வழங்குமாறு பரிந்துரைக்கிறோம்.

விருதுகள்:

1.‘விருது சூழ் வித்தகன்’

2.‘சுற்றுலா நாயகன்’

நம்மவர் இப்போது நமிபியாவில் இருக்கிறார்.

[குஜராத்தில் பிரமாண்டமான பாலம் ஒன்று உடைந்து விழுந்து உயிர்ச் சேதங்களும் நிகழ்ந்துள்ள நிலையில் மோடி நாடு திரும்பியிருக்க வேண்டாமா என்று எவரும் கேள்வி எழுப்புதல் வேண்டாம். பயணத்தைப் பாதியில் முடிப்பது அந்த நாட்டவரை[நமிபியா] அவமானப்படுத்துவதாக அமையும். இடிந்தது ஒரு பாலம்தான். இது போல ஓராயிரம் பாலங்களை நம்மால் கட்ட முடியும்].

அவர் நாடு திரும்பும் நாளைப் பாதுகாப்புத் துறை மூலம் அறிந்து, ஒரு வாரம் போல் விருது வழங்கும் விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடலாம்[இதற்காகவேனும் இந்தியாவில் அவர் ஒரு வாரம்  தங்கியிருப்பார் என்று நம்பலாம்].

வாழ்க சுற்றுலா நாயகன்! வெல்க விருது சூழ் வித்தகன்!!