சனி, 5 ஜூலை, 2025

திரைப்பட வசனக்கர்த்தாவா மோடி?!?!

#வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 63ஆவது இடத்தில் உள்ளது> https://unacademy.com/content/upsc/study-material/international-relations/india-out-of-usas-list-of-developing-countries/#

இது நம்பத்தகுந்ததொரு புள்ளிவிவரம்.

உண்மை நிலை இதுவாக இருக்க, “இந்தியா உலகின் 3ஆவது பொருளாதார நாடாக மாறும்”[நகல் பதிவு> கீழே] என்று உலகறிய முழங்கியிருக்கிறார் மோடி.

நாளெல்லாம் நாட்டின் நலம் குறித்துச் சிந்தித்து, சக அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்துச் செயலாற்ற வேண்டிய இவர், ஆண்டின் மிகப் பெரும்பாலான நாட்களை உலகம் சுற்றுவதிலேயே கழிக்கிறார். இவருக்கு எதற்கு இம்மாதிரி வெற்று ஆரவார உரைகள்? வீண் வார்த்தை ஜாலங்கள்?

புதிய இந்தியாவுக்கு வானம்கூட எல்லை இல்லையாம்! 

இது எதார்த்தமானதொரு பேச்சா,  திரைப்படத்திற்கான வசனமா?

உண்மையைச் சொன்னால், இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டையே தாண்டாதவர்கள்[இவரின் நண்பர்களான அம்பானி அதானிகளால் குபேர பூமியாக இது கருதப்படலாம்].

மக்களைக் கற்பனைகளிலும் கனவுகளிலும் மிதக்கவிட்டே தேர்தல்களில் வாக்குகளை அள்ளிவிட முடியும் என்று நம்புகிறவரா இந்த மோடி?