எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

சனி, 26 ஜூலை, 2025

அண்ணாமலை ராஜேந்திர சோழனின் வழிவந்தவரா?!

டபுலத்து அரசர்கள் தமிழினத்து மன்னர்களை இழிவுபடுத்திப் பேசியதற்காகக் கங்கைவரை படை திரட்டிச் சென்று, பழித்தவர்களைத் தன் தாள் பணியச் செய்து, தமிழரின் வீரத்தை உலகறியச் செய்தவன் கங்கைகொண்ட மன்னனான ராஜேந்திர சோழன்.

அவனை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்படும்[கங்கைகொண்ட சோழபுரத்தின் ஆயிரமாண்டு கொண்டாட்டத்தின் நிறைவு விழா] நிகழ்வில் கலந்துகொள்ளவரும் மோடியை, தன் கட்சித் தலைவன் என்ற வகையில் அண்ணாமலை வரவேற்பதோ, மரியாதை செலுத்துவதோ, கருத்துப் பகிர்வு செய்துகொள்வதோ தவறல்ல.

அவருடன் உரையாடும்போது தொண்டனுக்குரிய தன்னடக்கத்துடன் நடந்துகொள்வதும் தேவைதான். அதற்காக.....

உலகறிய, செவி மறைத்து வாய்பொத்திய கோலத்தில் அவர் காட்சிதருவது, மோடியிடம், “உன் அடிமைகளில் எனக்கு இணையானதொரு அடிமை உண்டா?” என்று கேட்பது போல் இருக்கிறது.

தன்மானச் சிங்கமான ராஜேந்திர சோழனின் பரம்பரையில் வந்தவரா அண்ணாமலை?

நாம் மட்டும் கேட்கவில்லை; ஒட்டுமொத்தத் தமிழினமும் கேட்கிறது.....

“தன்மானத் தமிழன் ராஜேந்திர சோழனின் இனத்தவரா இந்த அண்ணாமலை?”