எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

சனி, 26 ஜூலை, 2025

தூ.குடி வி.நிலைய முனையத்தைக் காணொலி மூலம் திறப்பாரா தர்மச் சக்கரவர்த்தி?

//தூத்துக்குடி விமான நிலையத்தில் 451 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முனையத்தை[terminal]ப் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு விமான நிலையம் & சுற்றுப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது// என்பது ஊடகச் செய்தி.

இதன் பொருட்டு இன்று இரவே மாலத்தீவிலிருந்து[5 நாள் சுற்றுலா முடிந்து] விமானம் மூலம் தமிழ்நாடு வருகிறார் ‘தர்மச் சக்கரவர்த்தி’ மோடி.

மோடியின் பயணங்கள், அயல்நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதற்கானவை[அண்மையில் பாகிஸ்தானுடனான போரில் மிகப் பல நாடுகள் இந்தியாவை ஆதரித்தமை கவனத்தில் கொள்ளத்தக்கது! ஹி... ஹி...ஹி!!!].

அவரின் தூ.குடி வருகை, அவர் தொடர்ந்து மேற்கொள்ளும் உலகச் சுற்றுப் பயணத்தைத் தாமதப்படுத்தும் என்பது உறுதி[2025 நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவதற்குள்ளாகவே அவர் தன் 5 நாள் சுற்றுலாவை மேற்கொண்டது நினைவுகூரத்தக்கது].

எனவே, அடுத்த சுற்றுலாவுக்கான ஏற்பாட்டைச் செய்வதற்கும், அதைத் தொடங்குவதற்கும் வசதியாக, தூத்துக்குடிக்கான பயணத்தை ரத்து செய்து, முனையத் திறப்பு நிகழ்வைக் காணொலி[நேரலை] வாயிலாக[குறைந்த அவகாசத்தில்] நம் தர்மச் சக்கரவர்த்தி மோடி அவர்கள் செய்துமுடிக்கலாம் என்பது நம் எண்ணம்; பரிந்துரையும்கூட.

* * * * *

https://www.puthiyathalaimurai.com/tamilnadu/police-security-increased-due-to-pm-modi-to-visit-thoothukudi//