எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 30 ஆகஸ்ட், 2025

சல்லாபச் சாமியார் ‘ஜக்கி’யும் சிந்திக்கத் தெரியாத அப்பாவிப் பக்தர்களும்!!!

த்குரு[சத்துக்குரு ஜக்கி] புனிதக் கைலாய யாத்திரையை நிறைவு செய்து இன்று(29/08/2025) தமிழகம் திரும்பினார். கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களின் கேள்விக்குச் சத்குரு பதிலளிக்கையில், “மூளை அறுவைச் சிகிச்சைக்குப்[ஜக்கிக்கு 2 முறை மூளை அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன> இரண்டாவது சிகிச்சை எப்போது எங்கே நடந்தது என்பது யாருக்கும் தெரியாது] பிறகு, மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரை மேற்கொண்டது யோக விஞ்ஞானத்தின் சக்தியைக் காட்டுகிறது” எனக் கூறினார்[தினகரன் செய்தி].

இந்த ஆள், கைலாசப் பயணமாகட்டும் சொர்க்கத்துக்கான ‘டூர்’ ஆகட்டும் எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியட்டும். அது நமக்கு ஒரு பொருட்டல்ல; நம்மைக் கடும் கொந்தளிப்புக்கு உள்ளாக்குவது.....

யோக விஞ்ஞானச் சக்தி’தான் தன்னை இமாலயப் பயணம் மேற்கொள்ளச் செய்தது என்று ‘புருடா’ விட்டதுதான்.

‘யோகா’ என்னும் பயிற்சி நாம் அறிந்தது. ‘விஞ்ஞானம்’ பற்றியும் நமக்குத் தெரியும். அதென்ன ‘யோகா விஞ்ஞானம்’?

‘யோகா’ என்பது மூச்சுப் பயிற்சியை உள்ளடக்கிய ஒரு வகையான உடற்பயிற்சி மட்டுமே; மனப்பயிற்சியும்[ஆய்வுக்குரியது]  அதில் அடங்குவதாகவே இருக்கட்டும். இதில் விஞ்ஞானம் புகுந்தது எப்படி?

யோகா விஞ்ஞானமாம்!

இந்த அறிவியல் நுட்பத்தை இந்த ஆள் கற்றது எங்கே? எப்போது? மக்களுக்குத் தெளிவாக[புரியாத எதையெல்லாமோ பேசிப் பேசித் தன்னைச் ‘சத்குரு’[கடவுளின் குரு] ஆக்கிக்கொண்ட மோசடிப் பேர்வழி இந்த ஆளாக்கும்]ப் புரியும்படி விளக்க இயலுமா?

மக்கள் மனங்களில் மூடநம்பிக்கைகளைத் திணிப்பதையே தொழிலாக்கிக் கோடி கோடியாய்ச் சம்பாதித்த இந்தக் ‘கேடி’க்குக் கடும் தண்டனை வழங்கப்படுதல் மிக முக்கியம். 

அதிகார வர்க்கத்தின் முழு ஆதரவு அதைத் தடுக்கிறது.

‘யோகா விஞ்ஞானச் சக்தியால், மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரையை நடத்திமுடித்ததாகச் சொல்லும் இந்த ‘டூப்பிளிகேட்’ சாமியாரால், அறுவைச் சிகிச்சைகளுக்குக் காரணமான ‘மூளை ரத்தக் கசிவை’த் தடுக்க இயலாமல்போனது ஏன்?

இது மக்கள் கேட்கவேண்டிய கேள்வி.

எப்போது கேட்பார்கள்?

இந்தப் போலி ஆன்மிகவாதி மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிப் பெரும் போராட்டம் நடத்துவது எப்போது?

காத்திருப்போம்.

                                           *   *   *   *   *

https://www.dinakaran.com/news/kailash_yatra_sadhguru/

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

பாரதத்தின்[இந்தியா] பிரதமர் ஆவதற்குப் ‘பரம ஏழை’ ஒரு தகுதியா!?!?!

"ராகுல் காந்தியின் தலைமையின் கீழ், காங்கிரஸ் அரசியல் மிகவும் கீழ்நிலையை எட்டியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக ஒரு ஏழைத் தாயின் மகன் பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருப்பதையும், அவரது தலைமையின் கீழ் நாட்டைத் தொடர்ந்து முன்னேற்றிச் செல்வதையும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை" என்று அவர்[மோடி] X இல் ஒரு பதிவில் எழுதினார்*["Under Rahul Gandhi's leadership, Congress politics has reached its lowest level. They cannot tolerate how a poor mother's son has been sitting in the Prime Minister's chair for the past 11 years and is continuously taking the country forward under his leadership," he wrote in a post on X.].

தன்னை “ஓர் ஏழைத் தாயின் மகன்” என்கிறார் பிரதமர் மோடி.

      நூற்றுக்கு நூறு உண்மை.

இதுவரை இந்த இந்தியாவின் பிரதமராக இருந்தவர்கள் எல்லோருமே கோடீஸ்வரப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்தான்.

முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் பரம்பரை பரம்பரையாக வறுமையில் வாடிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பார்கள்[அவரின் மறைவுக்குப் பிறகும் அவர் குடும்பத்தினர் மீண்டெழவில்லையாம்].

அதில் முழு உண்மை இல்லை. மோடியின்[ஏழைத் தாயின் மகன்]  பரம்பரையோடு ஒப்பிடும்போது சாஸ்திரி அவர்கள் மேல்தட்டு[upper class] ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவர் எனலாம்.

இந்த நாட்டின் ஏழைக் குடும்பங்களுக்கான ஒரு புள்ளிவிவரம் சேகரித்தால், மோடியின் பரம்பரை அந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்திருப்பதை அறியலாம்.

ஆக, படு படு படு பரம ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு பெரிய நாட்டின் பிரதமராக இருப்பது அரிதினும் அரிதான அபூர்வ வரலாற்று  நிகழ்வாகும்.

இந்த நம் மோடி அவர்கள் அவரின் ஆயுட்காலம்வரை இந்தப் புண்ணியப் பூமி[இவரைப் போன்றவர்கள் அவதரித்ததால்தான் இந்த மண்ணில் அளப்பரிய புண்ணியம் குவிந்தது]யின் பிரதமராக நீடிப்பது இந்த நாட்டின் அனைத்துக் குடிமக்களின் விருப்பம் ஆகும்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவின் புடின் முதலான உலகத் தலைவர்களின் விருப்பமும் இதுவே.

எனவே, ராகுல் காந்தியை[மோடி குறித்துப் பேசுவது தவிர்க்கவே இயலாததாயின்] அடக்கி வாசிக்குமாறு எச்சரிக்கிறோம்.

வாழ்க ஓர் ஏழைத் தாயின் புதல்வர் மோடி! 

இனியும் அவரே பிரதமராக நீடிக்க, கோடி கோடி கோடி ரூபாய்ச் செலவில் அவரால் கட்டப்பட்ட பிரமாண்டக் கோயிலில் குடியிருக்கும் பால ராமரைப் பிரார்த்திக்கிறோம்!

                                          *   *   *   *   *

*https://www.msn.com/en-in/news/india/man-who-abused-pm-modi-during-bihar-rally-arrested/ar-AA1LsnWW?ocid=winp2fptaskbarhover&cvid=ea114c48a4de40e9f8ce03912ad67a5e&ei=7

இந்தியாவை உடைத்துச் சிதறடிக்கும் ஒன்றிய அரசின் அதிகார வெறி!!!

மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க, கவர்னர் & ஜனாதிபதிக்குக் காலக்கெடு நிர்ணயித்துச் சுப்ரீம் கோர்ட்டு அளித்திருந்த தீர்ப்பு தொடர்பாக, ஒன்றிய அரசு முன்வைத்த வாதங்களில் கீழ்க்காண்பதும் ஒன்று; மிக மிக முக்கியமானதும்கூட.

//அரசுகளுக்கு[மாநில அரசுகளுக்கு> அடிமை அரசுகளுக்கு என்று குறிப்பிட்டிருக்கலாம்] அடிப்படை உரிமைகள் இருக்க முடியாது//*

சுற்றி வளைத்து இந்த வாதத்தின் மூலம் ஒன்றிய அரசு கூறுவது என்னவென்றால்.....


நாட்டை ஆளுவதற்கான அத்தனை உரிமைகளும் அதிகாரங்களும் ஒன்றிய அரசுக்கே[நடுவணரசு]. அதாவது, இந்திக்காரன்களுக்கே[இந்தியைத் தய்மொழியாகக்கொண்டவர்களும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அதை முழுமையாக ஆதரிப்பவர்களும்> மோடி& அமித்ஷா வகையறா] என்பதுதான்.

மாநிலங்களை[குறிப்பாக, இந்தியல்லாத மொழிகளைத் தாய்மொழியாகக்கொண்ட மக்கள் வாழும் இடங்கள்]  ஆளும் அரசுகளுக்கு அடிப்படை உரிமைகள் இல்லை என்கிற வடபுல அதிகார வர்க்கத்திற்கு நாம் சொல்ல விரும்புவது.....

“ஏற்கனவே வகுக்கப்பட்டவையும், புதியனவாக நீங்கள் வகுக்கும் சட்டங்களும் இந்த நாடு உடைந்து சிதறிவிடாமல், அனைத்து இன மக்களும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையாக வாழ்வதற்கானவையாக இருத்தல் வேண்டுமே அல்லாமல், பிற மொழிக்காரர்களை இந்திக்காரன்[+இந்திக்காரர்களாகவே தங்களை உருமாற்றிக்கொண்டவர்கள்> அங்கிங்கு எனாதபடி எங்கெங்கெல்லாமோ இந்தியைத் திணித்துவிட்டார்கள்] அடக்கி ஆளுவதற்காக அல்ல.

இந்தி அல்லாத பிறமொழிக்காரர்களாகிய நாங்கள் இந்த நாட்டின் நியாயமான சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ நினைக்கும் குடிமக்களே தவிர, உங்களின் நிரந்தர அடிமைகள் அல்ல.”

                                              *   *   *   *   *

வியாழன், 28 ஆகஸ்ட், 2025

ஏனுங்க, இந்த மனித மரங்களை நட்டவர் யாருங்க? எங்கே போய்த்தொலைந்தார்?!

‘மனிதர்கள் உட்பட அனைத்து உயிர்களையும் படைத்தவன் கடவுள். அவனைத் தொழுதால் துன்பங்கள் நீங்கி இன்பமாக வாழலாம். தொழுகிறோமோ அல்லவோ, அவன் நம்மைப் பாதுகாத்து வாழ வைப்பான்’ என்னும் பொருள்பட, “மரம் நட்டவன் நீர் பாய்ச்சுவான்" என்று அவதாரங்களும் ஞானிகளும் சொன்னதாகச் சொல்லித் திரியும் பக்திமான்களே, கீழ்க்காணும் செய்தியை[நகல் பதிவு] வாசியுங்கள்.
மரம் நட்டவன் இந்த மானுட மரங்களுக்கான வித்துகளின் தரத்தைச் சோதிக்கவில்லை; சோதித்து அவற்றை மேம்படுத்தியிருத்தல் வேண்டும். அதையும் செய்யவில்லை; அவற்றைக் கன்றுகளாக்கிப் பூமியில் நட்ட பிறகும் சரியாகப் பராமரிக்கவில்லை; வளரும்போதும் எரு சேர்த்து முறையாக நீர் பாய்ச்சவில்லை.

தனக்குரிய கடமைகளை ‘அவன்’ சரியாகச் செய்திருந்தால், தாய் மரம் குறையுள்ள பிள்ளைகளைப் பிரசவித்திருக்காது.

ஏதோ தவறு நேர்ந்து தொலைத்தது என்றால்.....

இவை உயிர் பிழைத்திருக்கும்வரையில் போதுமான நீர் பாய்ச்சுவது தவிர்க்கவே கூடாதது. இது நட்டவனின் கடமையும்கூட. அவன் அதைச் செய்யவில்லை.

மூன்றும்[தாயும் சேய்களும்] ஒருசேரக் கருகிவிட்டன.

இவ்வாறாக, படைக்கப்பட்டுப் போதிய பராமரிப்பில்லாமல் பட்டுப்போகும் மரங்களின், அதாவது மனிதர்களை உள்ளடக்கிய உயிரினங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.

கடவுளாம் கடவுள்.

அவர் எதற்கு? “எல்லாமே இயற்கை நிகழ்வுகள்; அவை நீண்ட நெடுங்கால ஆய்வுக்குரியவை” என்னும் படைப்பு குறித்தக் கருத்தாக்கத்தை ஏற்றால், கடவுளின் பெயரால் மூடநம்பிக்கைகளைத் திணிப்பது நிகழவே நிகழாது.

புதன், 27 ஆகஸ்ட், 2025

துரோகிகளைக் கொல்லுதலும் கொல்லும் முறைகளும்!!!

ணோ பெண்ணோ ஒருவர் இன்னொருவரைக் கருத்துமாறுபாடு காரணமாகவோ, ‘அது’ விசயத்தில் துரோகம் இழைத்ததற்காகவோ கொல்வது என்பது அவ்வப்போதைய நிகழ்வாக உள்ளது.

‘கொலை’ என்பது பல குற்றச் செயல்களில் ஒன்றாயினும் அது செய்யப்படும் முறை வேறு வேறாக உள்ளது. ஆணோ பெண்ணோ தான் வெறுக்கும் ஒருவரை இன்னொருவர் தீர்த்துக்கட்டக் கையாளும் முறைகள் நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் அதே வேளையில் பெரு வியப்பிலும் ஆழ்த்துகின்றன.

ஆண்கள், தங்களுக்குத் துரோகம் செய்யும் மனைவியையோ, கள்ள உறவுக்காரியையோ கொன்று பழி தீர்க்கும் நிகழ்வுகளுக்கான ஒரு தொகுப்பு இங்கு இடம்பெற்றுள்ளது[ஆண்கள் பழிதீர்க்கப்படும் நிகழ்வுகள் பிறிதொரு நாளில். ஹி... ஹி... ஹி!!!].

                                                 *   *   *   *   *

கொலை வகைகள்:

+++கிணற்றில் தள்ளி..... https://www.dailythanthi.com/news/india/fake-couple-in-love-killed-by-being-pushed-into-a-well-1176437 

+++வாயில் வெடி மருந்து வைத்து.....

https://www.dailythanthi.com/news/india/woman-lover-check-into-lodge-she-was-found-dead-with-her-mouth-blown-up-1176265 


+++தலையணையால் அமுக்கி.....

https://www.maalaimalar.com/news/district/2019/05/02133334/1239671/Tiruvallur-near-wife-murder-case-husband-arrest.vpf 


+++எரித்து.....

[அ]https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-in-omr-chennai-illegitimate-relationship-lead-to-murders-437768 [copy&paste]

[ஆ].https://angusam.com/forgery-murders/ 


+++கழுத்தை அறுத்து.....

[அ]https://tamil.hindustantimes.com/tamilnadu/young-woman-brutally-murdered-by-her-boyfriend-in-tiruppur-131693569874210.html -

[ஆ]https://www.updatenews360.com/tamilnadu/woman-killed-by-a-man-in-extra-marital-affair-issue-in-namakkal-080325/

[இ]https://www.ceylonmirror.net/32456.html 

[ஈ]


+++தலையில் கல்லைப்போட்டு.....


+++கட்டையால் அடித்து.....


+++கத்தியால் குத்தி.....

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

கடவுளால் அனுப்பப்பட்ட மோடிஜி 100% உத்தமர் என்பதால்.....

//டெல்லி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி செவ்வாயன்று, ஆம் ஆத்மி கட்சித்(AAP) தலைவர் சவுரப் பரத்வாஜ் வீட்டில் அமலாக்க இயக்குநரகம்(ED) நடத்திய சோதனைகளையும், அவர் மீதான வழக்கையும் ‘ஆதாரமற்றவை’ என்றும், பிரதமர் நரேந்திர மோடியின் ‘கல்விப் பட்டம்’ தொடர்பான சர்ச்சையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் நடவடிக்கை இது என்றும் கூறினார்// -இது அண்மைச் செய்தி.*

ஒரிஜினல் கடவுளால்[போலிகள் கணக்கிலடங்காதவை] அனுப்பப்பட்டவரும்["I am convinced that I was sent by god. This strength is not from my body....."> Modi] 100% உத்தமரும் நேர்மையானவருமான மோடிஜி உண்மை மட்டுமே பேசி, மக்களுக்கு அருந்தொண்டாற்றுபவர்.

‘அவர் பெற்றிருக்கும் பட்டச் சான்றிதழ்கள்[பி.ஏ., எம்.ஏ.] போலியானவை’ என்று அவரை வீழ்த்த முயலும் சூழ்ச்சிக்காரர்கள் பரப்பியுள்ள வதந்தி உண்மையானதாக இருக்குமோ என்று பொதுமக்கள் சந்தேகப்படும் சூழல் உருவாகியுள்ளதைக் கருத்தில்கொண்டு, அது முழுப் பொய் என்று நிரூபிப்பது அவரின்[நம் பிரதமர்] கடமை என்பதால்.....

அவர் பெற்ற பட்டங்களுக்கான சான்றிதழ்களை, உரிய பாதுகாப்புடன் நாடாளுமன்ற வளாகத்திலேயே பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதோடு, சுதந்திரமாகச் செயல்படும் புலனாய்வுக் குழுவினரைக்கொண்டு ஆய்வு நிகழ்த்தி, குறுகியக் கால அவகாசத்தில்[ஆட்சிக்காலம் முடியும்வரை இழுத்தடிக்காமல்] அறிக்கை வெளியிடச் செய்வார் என்று நம்பலாம்[சிவசேனா(UBT) தலைவர் சஞ்சய் ராவத் ஏப்ரல் 3 அன்று பிரதமர் நரேந்திர மோடி தனது கல்வித் தகுதி குறித்துத் தெரிவிக்க முன்வர வேண்டும் என்றும், அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்> இந்து தமிழ்].

வாழ்க மோடி பி.ஏ.! வளர்க மோடிஜி எம்.ஏ.!!

*https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/to-divert-attention-from-modi-jis-degree-atishi-slams-ed-raid-at-saurabh-bhardwajs-residence/articleshow/123520493.cms?from=mdr -Aug 26, 2025

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

அகிலம் இகழ் கிறுக்கன் ‘அனுராக் தாக்கூர்’இன் பதவி[எம்.பி.] பறித்திடுக!

//இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ‘பி.எம்.ஸ்ரீ’ பள்ளியில் தேசிய விண்வெளித் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர் கலந்துகொண்டார்//* என்பது செய்தி.

“முதன் முதலாக விண்வெளிப் பயணம் மேற்கொண்ட வீரர் யார்?” என்று இந்த ஆள் கேட்டபோது, “நீல் ஆம்ஸ்ட்ராங்”[இவர் சந்திரனுக்கு முதலில் சென்றவர்; விண்வெளிக்கு முதலில் சென்ற வீரர் யூரி காகரின்> சோவியத்]ன்று அறிவியல் ரீதியான பதிலை மாணவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தச் சங்கியோ[அனுராக் தாக்கூர்], "எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன்தான்[வால்மீகியால் மனிதரைப்போல் கற்பனை செய்யப்பட்ட ஒரு குரங்கு] என்று சொல்லி, மாணவர்களின் பகுத்தறிவைச் சிதைத்து, அவர்களின் மனங்களில் நஞ்சு தூவியிருப்பது மன்னிக்கத் தகாத கடும் குற்றம்.

இதற்கு முன்பும், இந்த முழுமூடம் மாணவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களிடத்தும், அனுமன் குரங்கு கடல் தாண்டிய கற்பனைக் கதையைப் பரப்புரை செய்திருக்க நிறையவே வாய்ப்புள்ளது.

இந்த நபர் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதற்குத் தடை விதிப்பது மட்டுமல்ல, வாக்காளரிடையே மூடத்தனம் பரப்பிப் பெற்றிருக்கும் ‘எம்.பி.’ பதவியையும் பறித்தல் வேண்டும்.

ஆனால், சங்கிகளின் பிடியிலிருந்து இந்த நாடு விடுவிக்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.

சாத்தியமாவது எப்போது?

* * * * *

*https://www.maalaimalar.com/news/national/think-hanuman-ji-was-1st-space-traveller-bjp-mp-anurag-thakur-to-students-785726?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjDtzp8LMPrYtwMw2Z-8BA&utm_content=rundown


வேங்கடவன் என்னும் வெங்கடாசலபதி சாமி ரொம்பவே அப்பாவி!!!

ஒரு பக்தர்[பெயர் சொல்ல விரும்பாதவர்] பல ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கா சென்று, அங்குத் தொடங்கவுள்ள தன்னுடைய IT நிறுவனம் லாபகரமாக நடந்திடத்  திருப்பதி வெங்கடாசலபதியை வேண்டிக்கொண்டார். 

அமெரிக்காவில் ஒரு IT நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி, அதில் 60 சதவீதப் பங்குகளை விற்று ரூ.6,000 கோடிக்கு மேல் வருமானம் பெற்றுள்ளார் அவர்; இந்த வெற்றிக்குத் அந்தக் கடவுளின் அருள்தான் காரணம் என நம்பினார்.

அவர் தன் வேண்டுதலை நிறைவேற்றியதற்காக, அந்த வெங்கடாசலபதிக் கடவுளுக்கு ரூ.140 கோடி மதிப்பிலான 121 கிலோகிராம் தங்கத்தைக் காணிக்கையாக வழங்கியுள்ளார்[இந்தத் தகவலை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தாராம்].

தொழில் செய்பவர்கள், தங்களின் காரியம் நிறைவேற அதிகாரிகளுக்குக் கொடுப்பது லஞ்சம். கடவுளுக்குக் கொடுத்தால் அது காணிக்கை.

காணிக்கை என்னும் பெயரில் தம் காரியம் கைகூட, அந்த லஞ்சத்தை[காணிக்கை] முன்னதாகவே கோயில் உண்டியலில் போடுகிறவர்கள் உள்ளனர். அவர்கள் தாம் வணங்கும் சாமியை முழுமையாக நம்புகிறவர்கள். நம்பாத ‘உஷார் பேர்வழிகள்[பக்தர்கள்]’ காரியம் நிறைவேறினால் மட்டுமே காணிக்கை செலுத்துவார்கள். அவர்களில் வெறும் தலைமுடியைத் தந்து ஏமாற்றுகிறவர்களும் உளர்.

வெங்கடாசலபதிக் கடவுளின் அருளால் ரூ6,000 கோடியை லாபமாகப் பெற்ற மேற்கண்ட நபர், உஷார் பேர்வழி ஆவார். அந்தத் தொகை தனக்குக் கிடைத்த பிறகே ரூ140 கோடியைக் காணிக்கை என்னும் பெயரில் திருவேங்கடமலை அதிபதிக்குக் கொடுத்திருக்கிறார்.

மனிதர்களில் எவரும், 100% நேர்மையாகத் தொழில் செய்து கோடி கோடியாய்ச் சம்பாதிப்பது சாத்தியமே இல்லை. அப்படிச் சம்பாதிப்பவர்கள், மேற்பார்வையிடுகிற அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தருகிறார்கள்.

எத்தனை விழுக்காடு என்பதை முன்கூட்டியே முடிவு செய்கிறார்கள் அவர்கள். அது 10 சதவீதத்திற்கு மேலாகவும், 50 சதவீதத்திற்கு[பாதிக்குப் பாதி]க் குறையாமலும் இருக்க வாய்ப்புள்ளது.

மேற்கண்ட கோடீசுவரர், வெங்கடாசலபதிக்குக் கொடுத்த லஞ்சம், ரூ6,000 கோடிக்கு வெறும் ரூ149 கோடி மட்டுமே. 03 சதவீதத்திற்கும் குறைவு. ஏழு மலைகளுக்கு அதிபதியான ஏழுமலையானுக்கே அல்வா கொடுத்திருக்கிறார் அந்தக் கில்லாடித் தொழில் அதிபர்!

“இத்தனை அப்பாவியா ஏழுமலையான் என்னும் வெங்கடாசலபதிக் கடவுள்?” என்று கவலையுடன் கேட்கத் தோன்றுகிறது!

                                                   *   *   *   *   *

https://news.lankasri.com/article/nri-donates-121kg-goதெரிவித்திருக்கிறார்ld-to-tirupati-temple-1755673224


ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

ஓரவஞ்சனைக் கடவுளும் மருளும் மனிதனும்!!!

 னிதனுக்கு ஆறறிவு வாய்த்துள்ளது. 

இதைப் பயன்படுத்தி இவன் செய்பவை நல்லவையோ கெட்டவையோ, ஆறாவது அறிவால் சிந்தித்துக் கடவுள் என்றொருவரைக் கற்பித்ததோடு, அவரை வழிபடுவதால் பல நன்மைகளைப் பெறலாம், குறிப்பாகச் செத்தொழிந்த பிறகு சொர்க்கம் சேர்ந்து, சுகபோகத்தில் மூழ்கிக் கிடக்கலாம்(எவ்வளவு காலத்திற்கு?) என்றெல்லாம் நம்பினான்; நம்புகிறான். 

கோயில்கள் கட்டி, சிலைகள் நிறுவி, மந்திரம் சொல்லி அவற்றிற்கு உயிரூட்டி, தங்க & வைர நகைகள் பூட்டி அலங்கரித்து, விழாக்கள் நடத்தி, குஷிப்படுத்தி[கடவுள்களை]ப் பயனடைகிறானோ அல்லவோ வாழ்நாள் எல்லாம் அவரைக் கொண்டாடுகிறான்; மனம்போன போக்கில் கூத்தடிக்கிறான்.

ஆனால், 

அவர், தாம் படைத்த அனைத்து உயிர்களையும் புறந்தள்ளி, தங்களுக்கு மட்டும்  ஆறறிவைத் தந்தது[அனைத்து உயிர்களையும் ஐந்தறிவினவாகவே படைத்து ஆறாம் அறிவையும் கொடுத்திருக்கலாம்.  கொடுத்திருந்தால், “எல்லாம் பரிணாம வளர்ச்சி; இயற்கை நிகழ்வுகள்; கடவுளும் இல்லை கத்தரிக்காயும் இல்லை” என்று பகுத்தறிவு பேச இடமிருந்திருக்காது] கருணைக் கடவுளுக்கு அழகல்ல என்று ஒருபோதும் சிந்தித்ததே இல்லை; அவரைக் கண்டித்து வசைமாரி பொழிந்ததும் இல்லை!

பயம் ஐயா பயம்! தான் கற்பித்த மாயக் கடவுளிடம் அத்தனைப் பயம் மனிதனுக்கு!

சனி, 23 ஆகஸ்ட், 2025

அனுமானக் கடவுளும், நிரூபிக்க அல்லாடும் அரைவேக்காடு விஞ்ஞானியும்!!!

ஹார்வர்ட் விஞ்ஞானியான டாக்டர் வில்லி சூன்(Dr Willi Soon) (பிறப்பு 30-9-1965) கடவுள் இருக்கிறார் என்பதை ஒரு கணிதச் சூத்திரம் நிரூபிக்கிறது என்று கூறியுள்ளார்[கணிதச் சூத்திரங்கள் மனிதர்களின் கண்டுபிடிப்பு. இதன் மூலம் கடவுளின் ‘இருப்பை’ உறுதிப்படுத்துவதாகச் சொல்லி, சாமானியர் காதுகளில் பூச்சுற்றுகிறார். கடவுளின் ஆயுளைக் கண்டறிவதற்கோ, அல்லது அவர் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்கோ கணிதச் சூத்திரம் உதவுமா?].

விஞ்ஞானத்தின் விளக்கத்திற்கு அப்பாற்பட்டு[கவனத்தில் கொள்க] பிரபஞ்சம் இருப்பதை க்ளோஸ்ட் ஸ்பேஸ்டைம் கர்வேச்சர்* நிரூபிப்பதாகச் சூன் கூறியுள்ளார்[பரிந்துரைக்கிறது என்பதை இவர் ‘நிரூபிப்பதாக’க் கூறியிருக்கிறார். கர்வேச்சரை உருவாக்கிப் பயன்படுத்திக் கடவுள் இருப்பதையும் நிரூபித்தவர் யார்? எப்போது?]

டாக்டர் வில்லி சூன் ஒரு வான் இயற்பியல்(Astrophysicist) விஞ்ஞானி. மலேசியாவைச் சேர்ந்த இவர் ஹார்வர்ட் ஸ்மித்ஸோனியன் செண்டர் ஃபார் அஸ்ட்ரோ பிஸிக்ஸ் பிரிவில் நீண்ட காலம் ஆய்வு நடத்தியவர்.

நாம் நினைப்பதைவிட அறிவியலும் இறை நம்பிக்கையும் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கின்றன என்றும் இவர் கூறியிருக்கிறார்[‘அறிவியல் விளக்கத்திற்கு அப்பாற்பட்டிருப்பது பிரபஞ்சம்’ என்று மேலே குறிப்பிட்டிருக்கிறார். பிரபஞ்சமே அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கையில், அறிவியலும் இறை நம்பிக்கையும் மிக நெருங்கிய தொடர்புடையவை என்று இவர் கூறியது எப்படி? முற்றிலும் முரண்பட்ட கூற்று இது.

டக்கர் கார்ல்ஸன் நெட்வொர்க்(Tucker Carlson Network) தளத்திற்குக் கொடுத்த ஒரு பேட்டியில், அவர் “கணிதக் கொள்கைகளும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் பிரபஞ்சமானது ஒரு குறிக்கோளுடனேயே படைக்கப்பட்டிருக்கிறது[என்ன குறிக்கோள்?] என்ற கருத்தை ஆதரிக்கின்றன” என்று கூறியிருப்பதாக இவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானியான பால் டிரக்(Paul Dirac), 1928இல் ஆண்டி-மேட்டர்[மேட்டர்>பொருள்; ஆண்டி> எதிரானது. எதுவும் இல்லாமலிருப்பதா? அதாவது, வெற்றிடமா? இப்படியான ஒரு நிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?]  இருப்பதாகக் கணிதத்தின் வாயிலாகக் கூறி இருப்பதையும்[இவருடைய கூற்றே குழப்பமானது. இந்த லட்சணத்தில் சப்பைக்கட்டு வேறு] இவர் ஆதாரமாகக் காட்டியுள்ளார்.

இவர் தரும் கூடுதல் ஆதாரங்கள் விஞ்ஞானிகளுக்கே புரியுமா என்பது சந்தேகம். 

சாமானியர்களைக் குழப்பத்தை ஆழ்த்தும் இம்மாதிரிக் கருத்தாக்கங்களை ஊடகங்கள் மொழியாக்கம் செய்து வெளியிடுவதால், அவற்றிற்குப் பயனுண்டோ இல்லையோ[பார்வை எண்ணிக்கை கூடாது; குறையும்], சில அரைவேக்காடு விஞ்ஞானிகள் பிரபலம் ஆகிறார்கள் என்பது மறுக்க இயலாதது.

*(Closed Spacetime Curvature> பிரபஞ்சம் ‘முடிவு இல்லாதது’ அல்ல; மாறாக ஒரு குறிப்பிட்ட அளவும்  வடிவமும் கொண்டுள்ளது என்பதை பரிந்துரைக்கிறது)

          https://kalkionline.com/science-and-technology/god-exists-scientist-explains-with-mathematical-proof

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

உல்லாசத் திருடர்கள்! உறங்கும் பொதுமக்கள்!! உசுப்பும் உச்ச நீதிமன்றம்!!!

அழகிய மேலட்டைகள்! அறிவூட்டும் அற்புத உள்ளடக்க நூல்கள்!!

51 நூல்களுமே கிடைத்தற்கரிய முத்துகள். அத்தனையும் ‘பண்டாரகர்’[முனைவர், doctor] ‘பசி’பரமசிவம் படைப்புகள். ஒரு நபரின் மன வலிமை, கூரறிவு, அறநெறி போற்றும் உயர் பண்பு ஆகியவற்றைக் குறிக்கும் சீர்மிகு தனித் தமிழ்ச் சொல் பண்டாரகராக்கும்!

அமேசான் கிண்டில் சந்தாதாரர் ஆகி வாசித்து இன்புறுவீர்! நற்பேறு பெறுவீர்!![அடியேனைச் சீந்துவார் எவரும் இல்லாததால் இந்தத் ‘தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளுதல்’ பதிவு! ஹி... ஹி... ஹி!!!

 Image of நக்கல்! நையாண்டி!! நகைச்சுவை!!! நறுஞ்சுவை!!!!: கதைகள்&கட்டுரைகள் (Tamil Edition)Image of காமம் கற்பீர்!!!: [பாலுறவில் விழிப்புணர்வூட்டும் புதினம்] (Tamil Edition)Image of கருணைக் கடவுள்களும் முதுகு சொறிதலும்! (Tamil Edition)Image of ஒரு தாசி தாரம் ஆன கதை!!!: [1 கதையும் 4 கட்டுரைகளும்] (Tamil Edition)Image of படுத்தும் பதின்மப் பருவம்!!!: கதை&கட்டுரைகள் (Tamil Edition)Image of பெண்மணிகளும் 'பொன் அணி'களும் ஒன்றல்ல!: 8 கட்டுரைகள் & 1 கதை (Tamil Edition)Image of கடவுள் கண்ட கனவு!: கட்டுரைகள்&கதைகள் (Tamil Edition)Image of அவள் விலைமகள்தான்! ஆனாலும்..... (Tamil Edition)Image of யோனிப் பொருத்தம்: சேர்ந்து வாழ்ந்து[Living Together] மனம் சோர்ந்துபோனவன் கதை (Tamil Edition)Image of 'கல கல' குட்டிக் கதைகள்! (Tamil Edition)Image of காமத்திலிருந்து தியானத்திற்கு! (Tamil Edition)Image of நாத்திகம் போற்றுவோம்! (Tamil Edition)Image of பக்தி படு[ம்]த்தும் பாடு! (Tamil Edition)Image of சதைப் பசி (Tamil Edition)Image of தமிழா தூங்குடா! தூங்கு!! (Tamil Edition)Image of ஒரு பக்கக் கதைகளில் ஒரு புரட்சி!!! (Tamil Edition)Image of செல்லம்மா தேவி: [நாவல்] (Tamil Edition)Image of அற்ப ஆயுளில் ‘கற்பு’ !!! (Tamil Edition)Image of நான் கேள்வியின் நாயகன்! (Tamil Edition)Image of சாத்தானே என் கடவுள்!!! (Tamil Edition)Image of கொங்குநாட்டுப் பங்காளிகளின் கதைகள்: நான்கு சிறு கதைகளின் தொகுப்பு (Tamil Edition)Image of நான் மூடன்! நீங்கள்? (Tamil Edition)Image of ‘கிளு கிளு’...‘குளு குளு’ கதைகள் (Tamil Edition)Image of அம்மம்மா...அம்மா!!!: குறுநாவல் (Tamil Edition)Image of மருட்டும் மகான்களும் அச்சுறுத்தும் அவதாரங்களும்!: சிந்திக்கத் தூண்டும் ‘சுரீர்’ விமர்சனங்கள்! (Tamil Edition)Image of வாருங்கள்...சாகும்வரை சிந்திக்கலாம்!!!: ஆகச் சிறந்த 17 நூல்களின் முன்னுரைத் தொகுப்பு (Tamil Edition)Image of நான் இன்னொரு ஹிரண்யன்!!!: சுய சிந்தனைத் தொகுப்பு (Tamil Edition)Image of கடவுளின் மரணம்!!! (Tamil Edition)Image of விந்து சுமப்பவன்: பிரபஞ்சப் புதிர்கள் குறித்த சாமானியனின் சிந்தனைகள் (Tamil Edition)Image of ஜோதிடச் சனி!: ஜோதிடம் குறித்த அசத்தல் ஆராய்ச்சி (Tamil Edition)Image of நரகவாசல்!!!: [விழிப்புணர்வுக் கட்டுரைகளும் கதைகளும்] (Tamil Edition)Image of உள்ளுறை காமம்: குறும்புதினம் (Tamil Edition)Image of மூடர் யுகம்: மூடர் யுகம் மூடர் யுகம் மூடர் யுகம் (Tamil Edition)Image of 'சுருக்'...'நறுக்' வாழ்வியல் கதைகள் (Tamil Edition)Image of சாகாத சாமிகளும் சாகப் பிறந்த மனிதர்களும்: அறிவுஜீவிகளுக்கான ஓர் அறிவுஜீவியின் ஆய்வுரைகள் (Tamil Edition)Image of வாருங்கள், விதியோடு கொஞ்சம் கொஞ்சி விளையாடுவோம்!: பகுத்தறிதல் (Tamil Edition)Image of மசுரு விதி (Tamil Edition)Image of ஓடி ஒளியும் ஆன்மாவும் தேடி அலையும் மனிதகுலமும் (Tamil Edition)Image of கானல்நீர்க் கடவுள்கள்!!!: பக்திவெறியரைப் பகுத்தறிவாளராக்கும் பதிவுகள் (Tamil Edition)Image of 100% உண்மைக் கதைகள்: சிறுகதைகள் (Tamil Edition)Image of காமம் பொல்லாதது: பாலுணர்வுச் சிறுகதைகள் (Tamil Edition)Image of சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது!: புத்துணர்ச்சிக் கதைகள் (Tamil Edition)Image of அடடா இந்தப் பெண்கள்!!!: சிலிர்ப்பூட்டும் சிறுகதைகள் (Tamil Edition)Image of பத்து ரூபாயில் கடவுள்: சிறுகதைகள் (Tamil Edition)Image of ஸ்ரீரங்கநாதர் சாமி கழிப்பறை!!!: [முத்து முத்தான பத்துக் கட்டுரைகள்] (Tamil Edition)Image of கடவுள்களுக்குக் கல்யாணமாம்! கருமாதி எப்போது?: [புதிய/புரட்சிகர ஆய்வுக் கட்டுரைகள்] (Tamil Edition)Image of அவனும் அவளும் ஒரு முறை உடலுறவும்!: [சிறுகதைகள்] (Tamil Edition)Image of சிற்றின்பமும் சிறு சிறு இன்பங்களும்!: [சிந்திக்கத் தூண்டும் வாழ்வியல் கட்டுரைகள்] (Tamil Edition)Image of சிலிர்ப்பூட்டும் 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகள்! (Tamil Edition)Image of ‘உடலுறவில் உச்சம் தொடுதல்’... ஊஹூம்!!!: [கதைகளும் கட்டுரைகளும்] (Tamil Edition)