எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 30 செப்டம்பர், 2025

அரசர்களின் யானை மீதான நகர்வலமும் இக்கால அரசியல்வாதிகளின் ஆணவமலமும்!

பொருள்களைக் கொண்டுசெல்லவும் மக்கள் பயணிக்கவும் லாரி, கார் முதலான ஊர்திகள் பயன்படுத்தப்படுகின்றன.

கார்களிலும் பேருந்துகளிலும், ஏனைய பயணிகள் வாகனங்களிலும் உள்ளே அமர்ந்து பயணிக்கலாமே தவிர, அவற்றின் மேற்கூரைகளின் மேல், தடுப்புகள் அமைத்து அமர்ந்துகொண்டோ, நின்றுகொண்டோ பயணிப்பது[சரக்கு வாகனங்கள் உட்பட] சட்ட ரீதியான குற்றச் செயலாகும்> ‘வாகனத்தின் மீது நின்று நகர்வலம் செல்வது என்பது கடுமையான போக்குவரத்து விதிமீறலாகும், இது சட்டப்படி தண்டனைக்குரியது’.https://www.google.com/search?.....

இந்தச் சட்ட விதி பொதுமக்களை மட்டுமல்ல, அரசியல்வாதிகளையும் கட்டுப்படுத்தும்.

அப்புறம் எப்படி இவர்களை வாகனங்களின் மேல் பரப்பில் தடுப்புகள் அமைத்து நின்றுகொண்டோ, பந்தாவாக அமர்ந்துகொண்டோ[அக்கால உச்ச அதிகாரம் படைத்த அரசர்கள் யானை மீதான அம்பாரியில் அமர்ந்து நகர்வலம் வந்தாற்போல] அடிமைகள் போல் அணிவகுத்து நிற்கும் அப்பாவிப் பொதுமக்களைப் பார்த்துக் கையசைக்கவும் உரை நிகழ்த்தவும் அனுமதிக்கப்படுகிறார்கள்?

இவர்கள் என்ன அறிவுலக மேதைகளா? ஆய்வுலக அறிஞர்களா? மக்களுக்காகவே உழைக்கும் பொதுநல உணர்வாளர்களா? 99.99% கோடிகளில் சுருட்டிச் சுகபோகமாக வாழத் திட்டமிடும் சுயநலவாதிகள்.

இவர்களுக்கு எதற்கு நகர்வலம் ஊர்வலம் காடுவலம் சுடுகாடுவலம் எல்லாம்?

தேர்தல் காலங்களில் வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்கலாம்; ஊடகங்கள் வாயிலாகப் பரப்புரை செய்யலாம். உச்ச அதிகாரம் படைத்தவர்களாயினும், மேற்கண்டவாறு வீதிவலம் சென்று, மக்களின் அன்றாடப் பணிகளுக்குக் குந்தகம் விளைவிப்பது பெரும் குற்றம். இதற்கு அனுமதியளிப்பதும் குற்றமே[விதிகளைக் கடுமையாக்கப் புதிய சட்டங்கள் இயற்றலாம்].

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இப்படியான அனுமதியை இவர்களுக்கு வழங்கியவர்கள் வெறும் மூடரல்ல; முழு மூடர்கள்.

உரிய முறையில் அறிஞர் குழு அமைத்து, அரசியல்வாதிகளின் இந்த அடாவடித்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது உடனடித் தேவை. 

அரசியல்வாதிகள் இதைச் செய்யமாட்டார்கள். மக்கள் வெகுண்டெழுந்தால் செய்யவைக்கலாம்.

அது நிகழ்வது எப்போது?

திங்கள், 29 செப்டம்பர், 2025

'தற்கொலை நோய்'[suicide disease] ... இப்படியும் ஒரு நோயா?!

"தற்கொலை நோய்"(Trigeminal Neuralgia > TN) என்பது திடீரெனத் தோன்றும் கடுமையான & தீவிரமான முக வலியாகும்.  வலியின் வேதனையான தன்மை காரணமாக இதற்குத் "தற்கொலை நோய்" என்று பெயரிடப்பட்டது, இது ஒரு நபரின் மனநிலையைக் கடுமையாகப் பாதித்துத் தற்கொலைக்குத் தூணடும் அளவுக்கு விரக்தியடையச் செய்யும். 

உணர்ச்சிகளை முகத்திலிருந்து மூளைக்குக் கொண்டுசெல்லும் ‘ட்ரைஜீமினல் நரம்பின்’  சுருக்கத்தால் இது[TN]ஏற்படுகிறது.

அறிகுறிகள்:

கன்னம், தாடை, பற்கள், கண்கள் ஆகியவற்றைச் சுற்றிலும் அழுத்தமாகக் குத்தும் வலி தோன்றுதல்.

வலி பொதுவாக முகத்தின் ஒரு பக்கத்தில் ஏற்படுதல்.

பல் துலக்கும்போதும், முகத்தைக் கழுவும்போதும், முகத்தில் அழுத்தமாகக் காற்று படும்போதும், தொடும்போதும்[லேசாக] வலியை உணரமுடியும். வலி சில நிமிடங்கள் நீடிக்கலாம். இது ஒரு நாளில் பல முறை நிகழலாம்; உணவுண்ணுதல், உறங்குதல் போன்ற தினசரிச் செயல்பாடுகளைப் பாதிக்கும்; மனநிலை வெகுவாகச் சீர்குலையும்.

காரணங்கள்:

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதலும்,  ‘ட்ரைஜீமினல் நரம்பில்’ சுருக்கம் ஏற்படுதலும். 

சிகிச்சை:

வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்ளுதம்[மருத்துவரின் பரிந்துரைப்படி]

கதிர்வீச்சு[சிகிச்சை].

மூளை அறுவைச் சிகிச்சை[அழுத்தத்தைக் குறைக்க நரம்புக்கும் இரத்த நாளத்திற்கும் இடையில் ஒரு மெத்தை வைப்பது இதில் அடங்கும்].

மேலும் மருத்துவர்கள் மேற்கொள்ளும் சிகிச்சைகள்.

                                      *   *   *   *   *

விரிவானதும் மிகச் சரியானதுமான தகவல்களுக்கு:

https://www.google.com/search?q=sucide+desiease%3F&oq=sucide+desiease%3F&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOdIBCTE3NTc4ajBqN6gCALACAA&sourceid=chrome&ie=UTF-8

ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

கூத்தாடிகளைக் கொண்டாடும் தமிழனே உலகின் ‘நம்பர் 1’ முட்டாள்!!!

சில நாட்கள் முன்புவரை, உலகிலேயே தமிழன்தான் அதி புத்திசாலி என்னும் நம்பிக்கையில்[“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று பாரதி சொன்னதை நினைவுகூர்க] இறுமாப்புடன் ஏறு போல் பீடு நடை போட்டுப் பிற இனத்தவரைப் பொறாமையில் புழுங்கச் செய்துகொண்டிருந்தோம்.

இன்றோ, உலகிலேயே 'நம்பர் 1’ முட்டாள் தமிழன்தான் என்று நிரூபணம் ஆகிவிட்ட நிலையில்[நடிகன் விஜய் நிகழ்வில் பலர் உயிரிழப்பு & படுகாயம்], தலை குனிந்து தள்ளாடி நடந்துகொண்டிருக்கிறோம்.

{பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு. அரசியல் பலத்தைக் காட்ட கூத்தாடி 4 மணி[10?] நேரம் தாமதமாக வந்திருக்கிறான்> ஆதாரம்: ‘தினத்தந்தி’[செய்தி> பகல் 12.30 மணி}
கவர்ச்சி நடிகைகளுடன் கட்டிப்புரண்டு குத்தாட்டம் போடும் ஒரு நடிகனைக் காண்பதற்காக, பல்லாயிரக் கணக்கில் ஒன்றுகூடி, பல மணி நேரங்கள் காத்திருந்து, அவன் வரும்போது முட்டிமோதிக்கொண்டு மூச்சுத் திணறி உயிரழந்தவர்களைத் தமிழினத்தவர் என்பது வெட்கக்கேடு.

நடிகன்கள் பல மணி நேரம் தாமதமாக வருவதே இம்மாதிரியான அவலங்கள் நிகழ வேண்டும் என்பதற்காகத்தான்.

மக்களிடம் தங்களுக்குள்ள செல்வாக்கைப் பிறர் அறியச் செய்வதற்காக அவன்கள் கையாளும் தந்திரங்களில் இதுவும் ஒன்று.

இது புரியாத செம்மறி ஆடுகளாகத் தமிழர்கள் ஆகிப்போனது தமிழின வரலாற்றில் இடம்பெறாத பேரிழிவு ஆகும்.

இனியேனும் தமிழன் திருந்துவானா? எப்போது?

திருத்துவார் யார்?!

சனி, 27 செப்டம்பர், 2025

திருப்பதி ஏழுமலையான் சாமியும் விஜய் என்னும் தெய்வத் திருமகனும்

கடவுளைத் தரிசிக்கத்தான் நம் மக்கள் மணிக்கணக்கில் காத்திருப்பது வழக்கம். திருப்பதி ஏழுமலையான் ஓர் உதாரணம்.

இன்றளவில், விஜய் என்னும் நடிகனைரைத் தரிசிக்க, வீதிகளிலும் வீட்டு மாடிகளிலும் கால்கடுக்க நின்றுகொண்டும், உயிரையும் துச்சமாக எண்ணித் தெருவோர மரக் கிளைகளில்  தொற்றிக்கொண்டும்,  கடவுளைத் தரிசிக்கக் காத்திருப்பதைவிடவும் அதிக நேரம் நம் மக்கள் காத்திருப்பது நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது[கடந்தக் காலங்களில் நம்மை ஆண்ட புரட்ட்ட்ட்சித் தலைவருக்கும் புரட்ட்ட்ட்சித் தலைவிக்கும்கூட இந்த அளவுக்குக் கூட்டம் கூடியதில்லை].

ஆக, கடவுள்களைவிடவும் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் விஜய் என்பது சந்தேகமறப் புரிகிறது.

2026இல் விஜய் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராவதும், மக்கள் அவரைப் ‘தெய்வத் திருமகன்’[தெய்வத் தாய்’ என்றாற்போல] என்றழைத்துப்[காணொலிக்காரன், ‘விஜய் அரசியல் பிரமோற்சவம்’ என்று தலைப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது] புளகாங்கிதப்படுவதும்  உறுதி.

வாழ்க ஆளப் பிறந்த தமிழர் தலைவன் விஜய்! வளம்பெறுக தமிழ் மக்கள் அவர் ஆட்சியில்!!

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

குரங்கு கையில் பூமாலை! சங்கிகளின் பிடியில்.....


கிறிஸ்தவார்களோ, இஸ்லாமியர்களோ அவர்கள் வழிபடும் கடவுள்களை அளப்பரிய சக்தி படைத்தனவாகவும், மிக மேலான அறிவு[மனித அறிவைவிடவும்] உள்ளனவாகவும், கருணை புரிவனவாகவும் கற்பனை செய்து[கற்பனைதான்] வழிபடுகிறார்கள்.

சங்கிகளைப் போல ஐந்தறிவு உயிரினமான குரங்கை[+பாம்பு, பன்றி, பெருச்சாளி, கழுகு, நாய், பேய் போன்றவை]க் கடவுளாக்கி அவர்கள் துதி பாடவில்லை.

இந்தியாவில் அங்கிங்கெனாதபடி இந்தக் குரங்குக்குச் சிலை வைத்துக்கொண்டிருந்த சங்கிக் கூட்டம், அமெரிக்காவிலும் இதற்குச் சிலை வைக்க, அதை அவன் நையாண்டி செய்ய உலகமே நம்மைப் பார்த்துக் கைகொட்டி நகைக்கிறது.

‘குரங்கு கையில் சிக்கிய பூமாலை’ போல சங்கித் தலைவர்களின் பிடியில் இந்த நாடு சிக்கியதன் விளைவு இது!

கடும் தண்டனைகள் வழங்கப்பட்டும் குறையாத ‘காம வெறியாட்டம்’!!!

*வட கொரியா, வன்புணர்வுக் குற்றவாளிகளைப் பின்மண்டையில் சுட்டுக் கொல்கிறது.

*ஆப்கானிஸ்தானில், நான்கே நாட்களில் வன்புணர்வுக் குற்றங்கள் விசாரிக்கப்பட்டுக் குற்றவாளிகள் தலையில் சுடப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

*சவுதி அரேபியாவில் குற்றங்கள் நடந்த சில நாட்களிலேயே நீதி வழங்கப்படும். குற்றவாளிகள் பொது இடங்களில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள்.


*ஈரானும், பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்கவிடுகிறது.


*ஐக்கிய அரபு நாடுகள் சிலவற்றில் கல்லால் அடித்துக் கொல்வதும் நடைமுறையில் உள்ளது.


*சீனா வன்புணர்வுக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கிறது, அல்லது, குற்றவாளிகளின் ஆணுறுப்பையே வெட்டி எறிகிறது.


*ஏதோ ஒரு நாட்டில் குற்றவாளிகளின் ஆணுறுப்பை நாய்களை ஏவிக் கடித்துக் குதறச் செய்வதும் வழக்கத்தில் உள்ளதாகப் படித்தது நினைவில் உள்ளது.


ப்படியாகத் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டிருந்தும், இக்குற்றங்கள் குறைந்தபாடில்லை. உலகளவில், தினமும் 6 பெண்களில் ஒருவர் வீதம்  பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்களாம். இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 4 பெண்கள்  இக்கொடுமைக்கு உள்ளாகிறார்கள். 


                                      *   *   *   *   *
முக்கிய அறிவிப்பு: தகவல்கள் எப்போதோ இணையத்தில் தேடிச் சேகரித்தவை. இப்போது தண்டனை விதிப்பில் மாற்றங்கள் நேர்ந்திருக்கலாம். 
                                   

வியாழன், 25 செப்டம்பர், 2025

தீராத கவலைகளும் கடவுள் வழங்கிய தீர்வுகளும்!!

 லைப்பைப் பார்த்து முகம் சுளிக்க வேண்டாம்.

இதில் பெரிய தத்துவமே அடங்கியுள்ளது.

வறட்டுத் தத்துவம் அல்ல; வாழ்க்கைத் தத்துவம்.

கவலைப்படுதலில் பல நிலைகள் உள்ளன. அவரவர் மனப்பக்குவத்தைப் பொருத்துச் சிறிய கவலைகள் பெரிதாகவும், பெரிய கவலைகள் அதனினும் பெரிதாகவும் உணரப்படக்கூடும்.

"கால் செருப்பு கண்டமாகி ஆறு மாசம் ஆச்சு; புதுசு வாங்க வசதி இல்ல."... "ஒரு செல்ஃபோன் வாங்க வக்கில்ல."... "சுற்றுலா போனதில்ல"... என்றிப்படிக் கவலைப்படுவோர் உள்ளனர்.  -செருப்பில்லாமலும், செல்ஃபோன் இல்லாமலும், சுற்றுலா போகாமலும் காலத்தைக் கடத்திட முடியும் என்பதால், இவை போன்றவை சிறிய ரகக் கவலைகள் ஆகும். 

படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காதது; செய்த தொழிலில் எதிர்பாராத இழப்பு; வயசாகியும் கல்யாணம் ஆகாதது; கட்டிகிட்ட கணவன் மனைவிக்கிடையே பிரச்சினைகள் என்று இவையும், இவற்றை ஒத்தவையும் அற்பமானவை அல்ல என்பதோடு அலட்சியம் செய்ய இயலாத பெரிய ரகக் கவலைகள். 

சிறியவையும் பெரியவையுமான கவலைகள் அயராமல் செய்யும் முயற்சிகளாலோ, அறிய இயலாத காரணங்களாலோ தீர்ந்துவிடக்கூடும்.

அடுத்தடுத்துத் தாக்கும் தீராத நோய்களின் தாக்குதலால் சித்திரவதைக்கு உள்ளாவது; கடத்தப்பட்டப் பெண் பிள்ளையை ஆண்டுக்கணக்கில் தேடியும் கிடைக்கப்பெறாமல் அழுத கண்களுடன் செத்துச் செத்துப் பிழைத்துக்கொண்டிருப்பது போன்றவை தீரவே தீராத கவலைகள்.

இவற்றைத் தீர்த்திட.....

மகான்களோ, அவதாரங்களோ, ஞானிகளோ வழிகாட்டியதில்லை.

இந்தத் தீராத கவலைகளிலிருந்து முற்றிலுமாய் விடுபட மக்கள் இரண்டு வழிகளைத் தேர்வு செய்கிறார்கள்.

ஒன்று: இயன்றவரை மனதைத் திடப்படுத்திக்கொண்டு மரணத்தின் வரவுக்காகக் காத்திருப்பது.

இரண்டு: தற்கொலை[மனத்திடம் இல்லையாயின்] செய்வது.

இவை இரண்டு வழிகளுமே கருணைக்கடலான கடவுள் காட்டியவை.

வாழ்க கடவுள்கள்! வளர்க பக்தி!!

புதன், 24 செப்டம்பர், 2025

‘உங்களுடன் ஸ்டாலின்’... ஓர் உதவாக்கறைத் திட்டம்!?

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்தவர்  விஜயா.

இவர் தன் மாமனார் அய்யங்கண்ணு பெயரிலிருந்த ஒன்றரை செண்ட் நிலத்தைத் தன் கணவன் பாஸ்கர் பெயருக்கு மாற்றுவதற்காக[பட்டா பெயர் மாற்றம்], ஆகஸ்டு மாதம் 21ஆம் தேதி கூடங்குளத்தில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மனு அளித்தார்.

மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட கூடங்குளம் கிராம நிர்வாக அதிகாரி, பட்டாப் பெயர் மாற்றம் செய்வதற்காக விஜயாவிடம் ரூ25000 லஞ்சம் கேட்டிருக்கிறார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத விஜயா, லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகார் செய்ய, அவர்கள் வழக்கமான தந்திர உத்தியைக் கையாண்டு நிர்வாக அதிகாரியைக் கைது செய்தது நமக்கு முக்கியமல்ல, அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்பதால்.

நாம் வருத்தத்துடன் குறிப்பிட விரும்புவது:

மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தேர்தல்களில் வாக்குத் திரட்ட உதவலாமே தவிர வேறு நன்மை ஏதும் இல்லை என்பதுதான்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டமோ, உதயநிதி ஸ்டாலின் திட்டமோ முகாம்களில் பெறப்படும் மக்களின் விண்ணப்பங்கள், திட்டத்தைச் செயல்படுத்தக் கடமைப்பட்டுள்ள ஊழல் பெருச்சாளிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

அப்புறம் நடப்பது? 

மேற்கண்டதே ஓர் உதாரணம்.

ஸ்டாலினோ எடப்பாடியோ சீமானோ  எந்தக் கொம்பாதி கொம்பன் முதலமைச்சராக இருந்தாலும் லஞ்சலாவண்யத்தில் ஊறித் திளைக்கும் நம் அரசு அதிகாரிகளை[மிகப் பெரும்பாலோர்]த் திருத்துவது இயலவே இயலாதது.

                                        *   *   *   *   *

https://www.dinamalar.com/amp/news/india-tamil-news/vao-caught-red-handed-accepting-rs-25000-bribe-for-change-of-title-deed/4040325

கடுப்பேற்றும் ‘சன்’ தொ.கா.வின் சில காலைச் செய்திகள்!

சற்று முன்னர்[காலை 06.45] ‘சன்’ தொ.கா. வில் வெளியான செய்திகளில் கீழ்க்காண்பவையும் அடக்கம்.

செய்தி: “அம்மாவின் ஆட்சி[அருளாட்சி!!!] அமைய வருண பகவான் கருணை காட்டினார்” என்பது எடப்பாடியாரின் தேர்தல் பரப்புரைப் பேச்சு[நீலகிரி]. 

“ஆகாயத்தில் ‘மேக மூட்டம்’ இருந்தபோதும் மழை கொட்டோகொட்டுன்னு கொட்டாமல் பார்த்துக்கொண்டார் வருணபகவான்” என்கிறார் புரட்சித் தமிழன்[செய்த புரட்சிகளில் மூடத்தனம் வளர்ப்பதும் ஒன்று]. 

“அப்பா, எடப்பாடியப்பா, அம்மாவின் அருளாட்சி அப்புறம். முதலில் ‘அவன்கள்’க்கு அடிமைச் சேவகம் செய்வதிலிருந்து விடுபட்டு,  மக்களையும் அடிமைகள் ஆக்கும் முயற்சியைக் கைவிடுங்கப்பா” என்பது நம் வேண்டுகோள்.

செய்தி: //‘திருப்பதியில் பிறமோற்சவ விழா’ தொடக்கம்//

அதென்ன ‘பிறமோற்சவம்? எத்தனைப் பேருக்கு இதன் அர்த்தம் தெரியும்? பக்தியின் பெயரால், யார் எதைச் சொன்னாலும் தலையாட்டித் தரையில் விழுந்து கும்பிடுவதை எப்போது நிறுத்தப்போகிறார்கள் நம் பக்தக்கோடிகள்?

இவர்கள் முட்டாள்களாகவே வாழ்ந்து செத்துத் தொலையட்டும். இவர்களின் வாரிசுகளாவது உருப்பட வேண்டாமா?

தினமும் இது போன்ற ஆன்மிகச் செய்திகளை வெளியிட்டு[வெளிடச்சொல்லி விண்ணப்பம் அளித்தார்களா பொதுமக்கள்?] ஆன்மிகம் வளர்க்கப்போகிறதாம் ‘சன்’. காலை என்ன 24 மணி நேரமும் ஆன்மிகம் வளர்க்கலாம். வளர்த்தால், ஆன்மிகம் வளர்கிறதோ அல்லவோ போலிப் பகுத்தறிவுவாதிகளான அவர்கள்[மாறனின் புதல்வர்கள்] வளர்வார்கள்.

செய்தி: தென்காசிப் பக்கமுள்ள ஓர் ஊரில் திருவிழா. 10000 பக்தர்கள் கலந்துகொண்டார்கள். அவர்களுக்கு 21 ஆயிரம் பொடி தோசைகள்[கடந்த ஆண்டு புரோட்டா] வழங்கப்பட்டன. 

அடுத்த ஆண்டு பூரியா, சப்பாத்தியா?

வாய்க்கு ருசியாகச் சாப்பிடக் கொடுத்துப் பக்தி வளர்க்கிறார்கள்! ஹி... ஹி... ஹி!!!

செவ்வாய், 23 செப்டம்பர், 2025

நம் பிரதமருக்குத் தேவை தினசரித் ‘திருஷ்டி’ கழித்தல்!!!

இது[பாரத்> இந்தியா] புண்ணியப் பூமி. மக்கள் கொடுத்துவைத்தவர்கள்.

இல்லையெனில், ஒப்பனையில் சாதனை நிகழ்த்தியவரும், கம்பீரமும், கவர்ச்சியும், கொள்ளை அழகும் உள்ள ஒருவரைப் பிரதமராகப் பெறும் வாய்ப்பு கிடைத்திருக்காது.

உலக அளவில் பிரதமர், அல்லது அதிபர்களுக்கான ஆணழன் போட்டி நடத்தினால்  அதில் வென்று கிரீடம் சூடுபவர் நம் பிரதமரே.

அவரின் அமைச்சர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கு நம் வேண்டுகோள்:

நம் பிரதமருக்குத் ‘திருஷ்டி’ கழிக்கும் சடங்கை நாள் தவறாமல் நிறைவேற்றுவீர்!

மோடி நீடூழி வாழ்க!

🔴கிண்டியில் இருப்பது ஆளுநர் மாளிகையா ஆண்டி மடமா!?!?!?


//கொலுவில் வைக்கப்படும் பொம்மைகள் பெரும்பாலும் களிமண்ணால் செய்யப்பட்டு, அடர்ந்த நிறங்களால் வர்ணம் பூசப்பட்டவையாக இருக்கும்//

கொலு வைப்பதன் நோக்கம் பொம்மை வடிவில் அம்பாளை வழிபடுவது[மனித உருவில் நடமாடும் அனைத்துப் பெண்களும் அம்பாள்களே. அவர்களையே வழிபடலாமே?] என்கிறார்கள். இதன் உண்மை நோக்கம், கொலு வைப்பவர்கள் தங்களின் மண்டையில் களிமன்தான் உள்ளது என்பதை அடையாளப்படுத்துவதே.

இதைச் செய்வது[தனிப்பட்ட முறையில்] அவரவர் விருப்பம் சார்ந்தது.

பல ஏக்கர் நிலப்பரப்பில், பல கோடிகள் செலவு செய்து உருவாக்கப்பட்ட  மாளிகையில், ராஜபோகியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஆளுநன் ஆர்.என்.ரவி[அரசுப் பணியாளர்] கொலு விழா கொண்டாடுகிறார் என்பது செய்தி[காணொலி].

தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறுவதைச் சீர்குலைப்பதற்கென்றே அனுப்பப்பட்ட இந்த நபர், அவ்வப்போது தமிழர்களின் சிந்திக்கும் அறிவைச் சிதைத்திடும் அடாவடித்தனங்களையும் செய்துகொண்டிருக்கிறார்.

அவற்றில் இதுவும் ஒன்று.

மூடநம்பிக்கைகளை வளர்த்து அரியணை ஏறும் சங்கிகளின் ஆட்சி இந்த மண்ணில் நீடிக்கும்வரை, இம்மாதிரியான ஆளுநன்களுக்குக் கொண்டாட்டம்தான்; தமிழர்களுக்கோ திண்டாட்டம்!

திங்கள், 22 செப்டம்பர், 2025

கோடிகளில் புரளும் கூத்தாடி[விஜய்]யின் கட்டுக்கடங்காத கொட்டமும் கொண்டாட்டமும்!!!

//கூத்தாடி விஜய் திருவாரூருக்கு வந்தாராம். இந்தக் கோடிகளில் புரளும் குபேரனை வரவேற்கும் விதமாகக் கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்தார்களாம் ‘தவெக’ நிர்வாகிகள். தனது பிரச்சார வாகனத்தில் நின்றபடி விஜய் இதைப் பெற்றுக்கொண்டாராம்//[பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறு குறிக்கோள் இல்லாத ஊடகக்காரன்கள் வெளியிட்ட செய்திகளில் இதுவும் ஒன்று].

கழுத்தைத் தீண்டாத அதி பிரமாண்ட மாலை. அதை அந்தரத்தில் தொங்கவிட ஒரு கிரேன். இவற்றிற்கான செலவு ஆயிரக்கணக்கில்.

விசிலடிச்சான் குஞ்சுகள் எழுப்பும் ஆரவாரங்களுக்கும் கரவொலிகளுக்கும் இடையே, அந்தரத்தில் போடப்பட்ட அதி பிரமாண்ட மேடையில், தடியன்களின் பாதுகாப்புடன் ஆனந்தத்தில் துள்ளி நடைபயிலும் நடிகனுக்கு இது தெரியும்தானே?

பார்வையாளருக்குக் குனிந்து குனிந்து கும்பிடு போட்டுக் கையசைக்கும் இந்த அதிரடி அரசியல்வாதிக்கு, தெருவோரங்களில் கையேந்திக் காத்திருக்கும் பிச்சைக்காரர்கள் கண்ணில் பட்டதே இல்லையா?

வெற்று ஆடம்பரத்துக்காக வீணடித்த ஆயிரக்கணக்கான ரூபாய்களை[மொத்தச் செலவையும் கணக்கிட்டால் அது கோடியைத் தாண்டக்கூடும்]ஊரூராய்ச் சென்று, பட்டினியில் வாடும் பிச்சைக்காரர்களுக்குக் கொடுத்திருந்தால், அவை அவர்களின் ஒரு நாள் பசி தணியப் பயன்பட்டிருக்கும்.

இது ஏன் இந்தப் புதுரகப் புரட்சித் தலைவனின் புத்தியில் உறைக்கவில்லை?

மக்களை ஏமாற்றிக் கோடி கோடியாகச் சம்பாதிப்பதற்கென்றே இங்கு எவனெவனோ அரசியலுக்கு வருகிறான். அவன்களின் நடிப்பில் புத்தியையும் தன்மானத்தையும் இழப்பதே காட்டுமிராண்டித் தமிழனுக்கு வழக்கமாகிப்போனது!

* * * * *

https://www.dailythanthi.com/news/tamilnadu/police-register-case-against-3-people-for-throwing-a-huge-garland-at-vijay-using-a-crane-1180910


தேவைக்கு மேல் ஒரு மொழி கற்பிப்பது ‘திணிப்பு’ அல்லவா முட்டாள் அமைச்சனே?

//நாங்கள் எந்த மொழியையும் திணிக்கவில்லை; ஒப்பந்தத்தை ஏற்றால் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் - தர்மேந்திரப் பிரதான்// [https://tamil.indianexpress.com/tamilnadu/dharmendra-pradhan-about-nep-education-10484859]

கருத்துகளைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கும், அவை குறித்துச் சிந்திப்பதற்கும் தாய்மொழிக் கல்வி போதும். பிற மொழியினருடனான தொடர்புக்கும், இன்றளவில், அறிவியல் அறிவைப் புதுப்பிக்கவும் ஆங்கிலம் தேவை.

ஆக, இந்த இரு மொழிகளையும் கற்பது மட்டுமே[விரும்புவோர் எத்தனை மொழியும் கற்கலாம்] எங்களுக்கான தேவை; உரிமை.

மத்திய மண்டூக அமைச்சனே,

மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்காவிட்டால், கல்விக்கான நிதியுதவி இல்லை என்கிற நீங்கள்[நாட்டை ஆளும் ‘பாஜக’ சங்கிகள்], “நாங்கள் எந்த மொழியையும் திணிக்கவில்லை" என்று புளுகித் திரிவது ஏன்?

தேவைக்கு மேல் ஒரு மொழியைக் கற்கச் சொல்வது ‘திணிப்பு’ அல்லாமல் வேறென்ன முட்டாள் தர்மேந்திரப் பிரதானே?

ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

உறங்குவதற்கு முன்னரான மூச்சுப்பயிற்சி உறக்கநிலை இறப்பைத் தடுக்கும்!!!

பெரும் எண்ணிக்கையில் மக்களின் உயிர் பறிக்கும் நோய்களில் குறிப்பிடத்தக்கது ‘மாரடைப்பு’[நோய்].

பகல் நேரங்களில் இதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுக் குணமடைய நிறையவே வாய்ப்புள்ளது.

இந்நோய் அறிகுறியே இல்லாமல் தாக்குவதும் உண்டு. அதை ‘அறிகுறியற்ற மாரடைப்பு’[silent heart attack A silent heart attack doesn’t have typical symptoms of a heart attack. Symptoms normally unrelated to a heart attack(or no symptoms at all) can make it hard to identify a silent heart attack. But it still causes damage like any other heart attack. People often don’t know they’ve had a silent heart attack until weeks or months later> https://my.clevelandclinic.org/health/diseases/21630-silent-heart-attack] என்கிறார்கள்[இது பலரும் அறிந்ததே].

இதன் தாக்குதலுக்கு உள்ளாகிறவர்கள் பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளே. பகல் நேரமாயின் ஓரளவுக்கேனும் இதன் தாக்குதலை உணர்ந்து மருத்துவரை அணுகலாம். இரவில் உறங்கிக்கொண்டிருந்தால், தாக்குதலை அறியும் வாய்ப்பில்லாமல உயிரிழக்க நேரிடலாம்.

தாகுதலை உணர்ந்தாலும்கூட அந்த நேரத்தில் அவசரக்காலச் சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.

இதைத் தடுப்பதற்கு, செலவே இல்லாத எளியதொரு வழி உண்டு என்கிறார்கள் மருத்துவர்கள்.*

அந்த வழி, இரவில் உறங்குவதற்கு முன் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியை மேற்கொள்வதுதான்.

உறக்கம் வரும்வரை மூச்சுப் பயிற்சியைத் தொடரலாம். இதுவே ஆழ்ந்த உறக்கத்திற்கும் வழிவகுப்பதுண்டு.

அன்றாடச் சுவாசப் பயிற்சி ரத்தக் குழாய்களில்[கரோனரி தமனி] அடைப்போ சிதைவோ உருவாவதைத் தடுக்கிறது[இப்பயிற்சியால் மன அழுத்தம் குறைதல், நினைவாற்றல் மேம்படுதல், நுரையீரல் வலுவடைதல், இரத்த ஓட்டம் சீரடைதல், உடலின் கழிவுகள் வெளியேறுதல் என்றிப்படிப் பல நன்மைகளைப் பெறலாம்.

ஒருவர் இருதய நோயாளி அல்ல என்றாலும், நாள்தோறும் இந்தச் சிகிச்சையை மேற்கொள்வதால் வேறு பல நன்மைகளும் உள்ளன என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

                                  *   *   *   *   *

*https://www.msn.com/en-in/health/health-news/myth-vs-fact-deep-breathing-exercises-before-bed-can-help-prevent-a-heart-attack/ar-AA1zF1yh?ocid=msedgdhp&pc=NMTS&cvid=68ce9c2dbc5142059305470fc3861435&ei=64

எங்கெங்கு காணினும் லஞ்சமடா! தேவையடா அவசரச் சட்டம்!!

//ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டைப் பகுதியில், பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ37000[அடேங்ங்ங்கப்பா!] லஞ்சம் வாங்கிய, பெண் நில அளவையாளரும்[பெயர் வேண்டாம்> பாவம் தாய்க்குலம்] உதவியாளரும் கைது// -இது சற்று முன்னர்[காலை 07.25] ’நியூஸ் தமிழ்’இல் வெளியான செய்தி.

இது ஒன்றும் அரிதான நிகழ்வல்ல[தேடுபொறியில் ‘நிலப்பட்டா... லஞ்சம்’ என்று தட்டச்சிட்டால் நீளும் பட்டியலை ஒரு நாளில் படித்துமுடிப்பது சாத்தியமே இல்லை].

வருவாய்த் துறை என்றில்லை, வணிகவரித் துறை, வருமானவரித் துறை, போக்குவரத்துத் துறை[RTO], பத்திரப்பதிவுத் துறை என்று ஏறத்தாழ அனைத்துத் துறைகளிலும்  கட்டணம் செலுத்துவதோடு லஞ்சம் கொடுப்பதும் வழக்கம் ஆகிவிட்டது/ஆக்கப்பட்டுவிட்டது.

எந்தவொரு நடவடிக்கையாலும் இதை ஒழிக்க இயலாது என்பதைச் சந்தேகமறப் புரிந்துகொண்டதாலோ என்னவோ ஒன்றிய & மாநில அரசுகள் இது தொடர்பாக நடவடிக்கையே எடுப்பதில்லை.

மேற்கண்டது போல, எப்போதாவது கைது செய்யப்படுபவர்களும் தண்டனை பெற்றதாக வரலாறு[வெகு அரிதான விதிவிலக்குகள் இருக்கக்கூடும்] இல்லை.

ஆதலினால், ஒன்றிய & மாநில அரசுகளுக்கு நாம் முன்வைக்கும் கோரிக்கை:

இது இதற்கு இவ்வளவுதான் லஞ்சம் பெறுதல் வேண்டும்[குறைந்தபட்சம்+அதிகப்பட்சம்] என்று சட்டம் இயற்றுதலும், ஆணை பிறப்பித்தலும் அவசியம்.

ஆயினும், இந்த ஆணையால் பயன் ஏதும் விளையாது என்பதும் அறியத்தக்கது. அப்புறம் எதற்கு இந்த ஆணை?

தேர்தல் காலங்களில் அரசுகள் தத்தம் சாதனைப் பட்டியல்களில் இதையும் இணைப்பதன் மூலம், அதிக அளவில் வக்காளர்களின் வாக்குகளைப் பெறலாம்[ஓட்டுக்குக் கொடுக்கும் லஞ்சத்தை வரன்முறைப்படுத்தவும் ஆணை பிறப்பித்துப் பட்டியலில் சேர்க்கலாம். ஹி... ஹி... ஹி!!!].

சனி, 20 செப்டம்பர், 2025

புரியாத இயற்கையும் புரியவே புரியாத பாவப்புண்ணியமும் கடவுளும்!

டந்து செல்லும்போது கல் இடித்து விரலில் காயம் ஏற்பட்டாலோ, தடுக்கி விழுந்தாலோ, இவை கவனக்குறைவால் அல்லது செய்த தவறுகளால் நிகழ்ந்தன என்று நம்பும் மனிதர்கள், தாங்கள் செய்த பாவப்புண்ணியங்களையோ, விதியையோ கடவுளையோ இவற்றிற்குக் காரணம் ஆக்குவதில்லை.

ஆனால், செய்யும் தொழிலில் பெரும் சரிவு ஏற்படுவது, விபத்தில் சிக்கி உயிரிழப்பது, தீராத நோய்க்கு ஆளாவது போன்றவற்றிற்குத் தாங்கள் மட்டுமல்லாமல் பிறரும், எதிர்பாராத நிகழ்வுகளும், சூழல்நிலைகளும், வேறு காரணிகளும் காரணங்களாக அமைகின்றன என்பதை ஏற்கும் மனப்பக்குவம், அல்லது சிந்திக்கும் திறன் இல்லாத நிலையில், பாவப்புண்ணியங்களையும், விதியையும் காரணங்கள் ஆக்கியதோடு, கடவுள் என்றொருவரையும் கற்பித்தார்கள்.

இயற்கை[வெளியில் இயங்கிக்கொண்டிருக்கிற கோள்கள், நட்சத்திரங்கள், உயிர்கள் போன்றவற்றை உள்ளடக்கியது]யின் தோற்றத்திற்கான நோக்கத்தை இந்நாள்வரை மனித அறிவால் புரிந்துகொள்ள இயலவில்லை.

அது புரிந்திருந்தால், அதற்கேற்ப வாழும் முறைகளை வகுத்துக்கொள்வது சாத்தியமாகியிருக்கும். 

தோற்றத்திற்கான நோக்கமோ,  காரணமோ, வேறு கருமாந்தரமோ இவற்றில் எதையுமே புரிந்துகொள்ள இயலாத நிலையில்தான் ஆறறிவு படைத்த மனிதர்கள் இருக்கிறார்கள். 

இந்த ஆறறிவைப் பயன்படுத்தி ஓரளவுக்கு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடிந்ததே தவிர, இயற்கையைப் புரிந்துகொள்வது .000001%[இயன்றவரை சுழிகள் சேர்க்கலாம்]கூடச் சாத்தியப்படவில்லை.

புரியாததைப் புரிந்துகொள்ளத் தொடர்ந்து முயற்சி செய்வதைத்  தவிர்த்து, எதை எதையோ அனுமானித்ததன் & கற்பனை செய்ததன் விளைவுதான் பாவப்புண்ணியம், பிறவிகள், விதி, கடவுள் எல்லாம். 

இதன் விளைவு.....

கணக்கிலடங்காத மூடநம்பிக்கைகளைச் சுமந்து வாழும் அவலநிலை உருவாகிவிட்டது.

மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு, மனிதாபிமானம் போற்றி, மனிதர்கள் ஒற்றுமையுடன் அமைதியாக வாழ்வதற்கான வழி.....

வாய்த்திருக்கும் ஆறறிவை உரிய முறைகளில் பயன்படுத்துவது மட்டுமே; ஆன்மிகம் வளர்ப்பது அல்ல.

ஆழ்ந்து சிந்தித்தால்தான் இந்த உண்மை புரியும்.

                                         *   *   *   *   *

வேண்டுகோள்:

பதிவில் போதிய தெளிவில்லை என்றால் மனம்போனபடி ஏசாதீர்; பொறுத்தருள்வீர்!

வியாழன், 18 செப்டம்பர், 2025

சே, இது நம்மவருக்கு எத்தனைப் பெரிய அவமானம்!

தற்செயலாகக் காண நேரிட்டது கீழ்க்காணும் ‘யூடியூப்’ காணொலி. கண்ட அந்த வினாடியிலிருந்து கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறேன்.

அதிலிருந்து மீண்ட பிறகே இது[“டேய்”] குறித்த நம் விமர்சனம் வெளியாகும்! ஹி... ஹி... ஹி!!!

புதன், 17 செப்டம்பர், 2025

இரண்டு பெரிய மதங்கள் இணைந்து பரப்பிய இமாலயப் பொய்!!!

//யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோர் புனிதமாகக் கருதும் சினாய் மலையில் ஒரு பெரிய சுற்றுலாத் திட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் மொழியில் 'ஜபல் மூசா' என அழைக்கப்படும் இந்த மலையில், மோசேக்குப் பத்துக் கட்டளைகள் வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பைபிள் & குர்ஆன் கூற்றுப்படி, எரியும் புதரில் இருந்து மோசேவிடம் கடவுள் பேசிய இடம் இதுதான் என்று பலர் கருதுகின்றனர்//[https://www.bbc.com/tamil/articles/c179q4dxy7jo]


கட்டளைகள் பத்தோ பத்து நூறோ அவையல்ல நம் அடி மனதை உறுத்துவது; எரியும் புதரிலிருந்து மோசேவிடம் கடவுள் பேசினார் என்கிறார்களே அதுதான்.
எரிந்துகொண்டிருக்கிற ஒரு புதரைக் கடவுள் ஏன் தேர்ந்தெடுத்தார்?

கடவுளே நெருப்பு வடிவில் இருந்திருப்பாரோ?

புதருக்குள் மறைந்திராமல், மோசேவின் எதிரில் நெருப்பு வடிவிலேயே காட்சி தந்து பேசியிருக்கலாமே?[வேறு வேறு உருவங்களிலும் அதைச் செய்திருக்கலாம்] அனல் பட்டு மோசே கருகிவிடுவார் என்று நினைத்திருப்பாரோ? வேறு காரணங்களும் இருக்குமோ?

எது எப்படியோ, இம்மாதிரியான தகவல்கள் பக்திமான்களின் கடவுள்[சர்வ மதக் கடவுள்கள்] பக்தியை அதிகரிப்பதற்கு மாறாக, கடவுள்கள் குறித்த மூடநம்பிக்கைககளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பதுதான் அடியேனின் தீராத கவலை[ஹி... ஹி... ஹி!!!].

என் கவலை எப்போது தீரும்?

மத மறுப்பும் மத மாற்றமும் மத வெறியும்!!!

சவூதி அரேபியாவில் 2016ஆம் ஆண்டு, மதத்தை விமர்சித்த ட்வீட்களுக்காக ஒருவருக்கு 2,000 சவுக்கடிகளும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டன. ‘மரண தண்டனை’ விதிக்கப்படுதலும் உண்டு.

சூடானில் இஸ்லாமியச் சட்டங்களின் அடிப்படையில் மத மாற்றம் மரண தண்டனைக்குரியது.

ஈரானில் மரண தண்டனை விதிக்கப்படும் குற்றங்களில் மத எதிர்ப்பும் ஒன்று.

எரித்திரியா[எரிட்ரிய] அரசாங்கம் எரிட்ரியன் ஆர்த்தடாக்ஸ் சர்ச், சன்னி இஸ்லாம், ரோமன் கத்தோலிக்க சர்ச், எரிட்ரியாவின் எவாஞ்சலிகல் லூத்தரன் சர்ச் ஆகிய நான்கு மதக் குழுக்களை மட்டுமே அங்கீகரிக்கிறது. இந்தக் குழுக்கள் மட்டுப்படுத்தப்பட்ட மதச் சுதந்திரத்தை அனுபவிக்கின்றன. அதே நேரத்தில், இவற்றைப் புறக்கணிப்பவர்கள் துன்புறுத்தல்களையும் சிறைவாசத்தையும் எதிர்கொள்கின்றனர். https://www.indexoncensorship.org/2014/01/worst-countries-religious-freedom/

ஆப்கானிஸ்தான், மலேசியா, மாலத்தீவுகள், மவுரித்தேனியா, நைஜீரியா, கத்தார், சோமாலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,  ஏமன் ஆகிய நாடுகளும் மதம் மாறுபவர்களுக்கு ‘மரண தண்டனை’யை அளிக்கின்றன.

பாகிஸ்தான் தெய்வ நிந்தனை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கிறது. https://www.theatlantic.com/international/2013/12/13-countries-where-atheism-punishable-death/355961/

செவ்வாய், 16 செப்டம்பர், 2025

மனிதர்கள் நல்லவராக வாழ்தலும் வாழ முயலுதலும் கருணைக் கடவுளும்!

ருவர் நல்லவராக வாழ்வதற்கான, அல்லது வாழ முயல்வதற்கான காரணங்கள்{காரணங்களை ஆராய்வதற்கு முன், எந்த ஒருவரும் எல்லா நேரங்களிலும் ஒரே நிலைப்பாட்டில்’[நல்லவருக்கான சதவீதம் வாழும் சூழலையும் மனப்பக்குவத்தையும் பொருத்து மாறிக்கொண்டே இருக்கும்] இருப்பதில்லை என்பதை நினைவில் கொள்க}:

1.பிறரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கெட்டக் காரியங்களில் ஈடுபட்டால், அண்டை அயல் மனிதர்கள் மதிக்கமாட்டார்கள் என்று எல்லோருமே நினைப்பது மிக முக்கியக் காரணம்.

2.தப்புச் செய்து பிடிபட்டால் பாதிக்கப்பட்டவர்களால்  அல்லது காவல்துறையால் தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சுவதும்[பணப் பலமும் ஆள் பலமும் உடையவர்கள் விதிவிலக்கு] அவற்றில் ஒன்று.


3.மரபணுவில் ஆழமாகப் பதிந்துவிட்ட பரம்பரைத் தொற்றுநோய் இது. வழிபாட்டின் பயன் குறித்து மிக மிக  மிகப் பெரும்பாலோர் சிந்திப்பதே இல்லை.

4.காசு செலவில்லாமல் நாலு பேர் முன்னிலையில் தன்னை யோக்கியனாகக் காட்டிக்கொள்ளப் பயன்படுகிறது பக்தி.


5.எல்லோருமே கெட்டவர்களாக இருந்தால் எவருமே நிம்மதியாக வாழ்தல் இயலாது என்று பலர் எண்ணுவதும் குறிப்பிடத்தக்கது. இரண்டு உலகப்போர்கள் நடந்துமுடிந்த நிலையில், காரணங்கள் இருப்பினும் மூன்றவது போரை உலக நாடுகள் தவிர்ப்பது ஓர் உதாரணம்.


6.வயதுக்கும் சமூக அந்தஸ்துக்கும் வசதிக்கும் ஒவ்வாத செயல்களைச் செய்ய முயலும்போது மனசாட்சி உறுத்துதல்[அதை அலட்சியப்படுத்துபவர்கள் உண்டு]. பிறரால் தான் பாதிக்கப்படுதல் கூடாது என்பது போலவே, தன்னால் பிறர் பாதிக்கப்படுதல் கூடாது என்றெண்ணுவதும் ஒரு காரணம்{இந்த நல்ல மனம் வாய்ப்பது நல்ல சிந்தனைகளால்[தனக்கான கோரிக்கைகளை வைத்துக் காணிக்கைகள் செலுத்திக் கடவுளைத் துதிபாடுகிறார்களே தவிரத் தனக்கு நல்ல எண்ணங்களை அருளும்படி வேண்டுபவர்கள்[விதிவிலக்குகள் மிக அரிதானவை] எத்தனைப்பேர்?


7.சமுதாயக் கட்டுப்பாடுகளைப்[முன்னோர்களால் உருவாக்கப்பட்டவை; கடவுளால் அல்ல] புறக்கணித்து வாழ்வதற்கான துணிவு இல்லாததும் நல்லவராக நடந்துகொள்வதற்கான குறிப்பிடத்தக்கக் காரணம் ஆகும்.


ஆக, கடவுள் நம்பிக்கைதான் மனிதர்களை நல்லவர்களாக வாழச்செய்கிறது என்பது காலங்காலமாகச் செய்யப்படும் பரப்புரையே தவிர அதில் கொஞ்சமும் உண்மை இல்லை.


சீனா, ஜப்பான், தென் கொரியா, செக் குடியரசு, எஸ்டோனியா, நெதர்லாந்து, ஸ்வீடன் போன்ற நாடுகளில் அதிக அளவில் நாத்திகர்கள் வாழ்கிறார்கள் என்கின்றன ஆதாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள்.

ஒருவரையொருவர் மதித்துப் பொதுநல உணர்வுடன் அந்நாட்டு மக்கள் நல்லவர்களாக[இயன்றவரை] வாழ்வதால்தான்[மதங்களின் பெயரால் அடித்துக்கொண்டு சாவதில்லை; சாகடிப்பதும் இல்லை] பெரிதும் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள்.

எனவே, எவரொருவரும் விரும்பினால் கடவுளை வழிபடுவதோடு நிறுத்திக்கொள்ளலாம்; பிறரைத் தூண்டுவதும் கட்டாயப்படுத்துவதும் கண்டிக்கத்தக்கவை.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

அவர் எவராயினும் அரசுப் பணிக்கிடையே ஆலயம் செல்வதைத் தடை செய்க!

இந்தியாவில் நாத்திகம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை[ATHEISM IN INDIA — A DISMISSED IDENTITY].

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது,  எவரொருவரிடமும் அவர் ஆத்திகரா, நாத்திகரா, இவை குறித்த சிந்தனையே இல்லாதவரா என்றெல்லாம்  கேள்விகள் எழுப்பப்படுவதே இல்லை. அவர் எம்மதத்தவர் என்பதை மட்டுமே பதிவு செய்கிறார்கள்.

இதனால், கடவுள் வழிபாடு போன்ற மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு வாழும் பகுத்தறிவாளர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது இயலாமல்போகிறது.

இதன் விளைவு, இங்கு வாழ்வோரில் மிக மிகப் பெரும்பாலோர் ஆத்திகர்களே[மூடநம்பிக்கையாளர்கள்] என்று மக்கள் நம்பும் நிலை உருவாகிவிட்டது.

இந்த நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் ஆளும் வர்க்கத்தைச் சார்ந்த பிரபலங்கள்[பிரதமர், குடியரசுத் தலைவர்+] கோயில்களுக்குச் சென்று வழிபடும்போதெல்லாம், ஊடகங்கள் அந்நிகழ்வுகளைப் படம்பிடித்து வெளியிடத் தவறுவதே இல்லை.

தமக்குரிய பணிகளின்போது, மத உணர்வைத் தூண்டுவதான செயல்களில் அரசுப் பணியாளர்கள் ஈடுபடுதல் கூடாது என்பது அரசியல் சட்ட விதிகளில் ஒன்று.

பிரதமர், குடியரசுத் தலைவர் போன்றவர்களும் அரசிடம் ஊதியம் பெறுபவர்களே[+அதீத அதிகாரம் படைத்தவர்கள்].

அரசுப் பணியாற்றச் செல்லும் இடங்களில் எல்லாம் அவர்கள் கோயில்களுக்கும் சென்று[பரிவாரங்கள் புடைசூழ] வழிபடுவதும், அவர்களுக்குத் தனி மரியாத செலுத்தப்படுவதும், காணொலிகளில் காண்போர் மனங்களில் மத உணர்வைத் தூண்டும்[பிற மதத்தவர் எனின் வெறுப்பை உண்டுபண்ணும்].

இவர்களின் கடவுள் வழிபாடு காட்சிப்படுத்தப்படுவது தவிர்க்கப்பட்டால், மக்களிடையே சிந்திக்கும் அறிவு வளரும்[ஒருவர் நல்லவராகவும், மனிதாபிமானம் மிக்கவராகவும் வாழ்வதற்குப் பக்தி உதவாது. இது மனிதரை மூடராக மட்டுமல்ல, சுயநலம் மிக்கவர்களாகவும் ஆக்குகிறது> விரிவானதொரு ஆய்வு பின்னர் வெளிவரும்].

ஆகவே, அவர்கள் கோயில்களுக்குச் செல்லும்போதெல்லாம் அதை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதும் தடை செய்யப்படுதல் வேண்டும்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாட்டு அதிகார வர்க்கத்தவர்[ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்கள்] இந்தத் தவற்றைச் செய்வதில்லை என்பது நம் நம்பிக்கை.

கொழுக்கட்டைக் கடவுளும் கொல்லப்படும் மனித உயிர்களும்!!!


சாலைகள் என்பவை முழுக்க முழுக்கப் போக்குவரத்துக்கானவை[மனிதர்கள், வாகனங்கள்+].

அரசியல்வாதிகளும் பக்தி முற்றிப்போன அரைவேக்காடுகளும் இதை ஆக்கிரமிப்பதால், மக்கள் தங்களின் அன்றாடப் பணிகளைச் சரியாகச் செய்ய இயலாமல் அல்லாடுவது அடிக்கடியான நிகழ்வாகிவிட்டது.

அரசியல்வாதிகளை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்தும் ஆட்சியாளர்கள் ஆன்மிகவாதிகள் செய்யும் அடாவடித்தனங்களைக் கண்டுகொள்வதில்லை.

காரணம், கட்டுப்படுத்தினால், தேர்தல்களில் அவர்கள் தங்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்னும் அச்சம்.

இதன் விளைவு, சாமி ஊர்வலம் என்னும் பெயரால் இவர்கள் போடும் ஆட்டமும் குத்தாட்டமும் சகிக்க இயலாதவை.

இவர்கள் அடிக்கும் கொட்டங்களால், வாகன விபத்துகள் நேர்வதும் சிலரோ பலரோ உயுரிழப்பதும் வழக்கமாகிவிட்டது.

அண்மையில் கர்னாடகா மாநிலத்தில் நடத்தப்பட்டப் பிள்ளையார் ஊர்வலத்திற்குள் ஒரு பெரிய வாகனம்[கண்டெய்னர் லாரி] புகுந்ததால் 9 பேர் உயிரிழக்கப் பலர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்[செய்தி பல மணி நேரங்களுக்கு முன்னரானது என்பதால், உயிரிழப்புகள் பின்னர்  அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது].

யானைத் தலையும் தாழி வயிறுமாக ஒன்றரைத் தந்தத்துடன் ஒரு கடவுளைக் கற்பித்தவன் படு அயோக்கியன் என்றால், இந்தக் கோமாளிக் கடவுளை உலக அளவில் பிரபலமாக்கிக் கொண்டாடி வழிபடும் பக்திப் பித்தர்களைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

இவன்கள் உருப்படாமல்போவதுடன், பக்தியில்லாதவர்களுக்கும் அதில் தீவிர ஈடுபாடு இல்லாதவர்களுக்கும் இவர்கள் செய்யும் இடையூறுகளுக்கு அளவே இல்லை[சாமி ஊர்வலங்களிக்கென்று சாலைகளை ஒட்டிப் பக்கவாட்டுகளில், நடைபாதைகளை விரிவுபடுத்திச் ‘சிறு குறு’ பாதைகள் அமைக்கலாம். இதன் மூலம் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்வதைத் தவிர்க்கலாம்].

இவர்கள் திருந்தும் நாளும் வருமா?

பக்தி வேடம் புனைந்து, தங்களைப் பரம யோக்கியர்களாக வாக்காளர்களை நம்பச் செய்து ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளும், பக்தியை வளர்த்துத் தங்களின் பத்திரிகை விற்பனையை அதிகரித்துப் பணம் சம்பாதிக்கும் பத்திரிகையாளர்களும் உள்ளவரை.....

ஊஹூம்! 

சனி, 13 செப்டம்பர், 2025

மனிதர்களுக்கு இதயங்கள் இரண்டு!?

“குதிகால்[கன்றுத் தசை] நம்முடைய இரண்டாவது இதயமாம், இது நம் உடல் முழுவதும் இரத்தத்தை மேல்நோக்கிச் செலுத்துவதால்.” -சொல்கிறவர் ஒரு  மருத்துவ அறிஞர்.

நிலத்தின் ஈர்ப்புவிசையானது கால்களில் இருந்து ரத்தம் மேல்நோக்கிப் பாய்வதைக் குறைக்கிறது. குதிகால் தசைகளைப் பராமரிப்பதன் மூலம் இந்தக் குறையைப் போக்கலாம்” என்கிறார் அவர்.

பராமரிப்பு என்பது குதிகாலுக்குப் பயிற்சி கொடுப்பதுதான்.

நடக்கும்போதும் ஓடும்போதும் குதிக்கும்போதும் கால்களை நீட்டி மடக்கும்போதும் குதிகால் ரத்தக் குழாய்கள்[+நரம்புகள்] இறுக்கி அழுத்தப்படுகின்றன. இதனால் ரத்தம் மேல்நோக்கிப் பாய்கிறது; பரவுகிறது.

மேலும், இப்பயிற்சி, உடம்பின் கீழ்ப்பகுதியில் உள்ள உறுப்புகள் தளர்ச்சியடைவதைத் தடுக்கிறது; பாதங்களில்[காலின் கீழ்ப் பகுதிகளில்] ரத்தம் உறைவதையும், அது வீங்குவதையும்கூட இது தடுத்துநிறுத்துகிறது; ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையைக் குறைக்கிறது.

மேற்கண்ட பயிற்சிகளுடன்[நடப்பது, ஓடுவது...] முன்னங்கால்களில் நிற்பதையும், சிறிது நேரம் கழித்து இயல்பு நிலைக்குத் திரும்புவதையும் தினசரிப் பயிற்சிகளாகச் செய்யலாம்.

மும்பை சென்ட்ரலில் உள்ள வோக்ஹார்ட் மருத்துவமனைகளின் ஆலோசகர் & இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் பாரின் சாங்கோய் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இவை[https://www.hindustantimes.com/lifestyle/health/cardiologist-explains-you-have-2-hearts-when-1-heart-weakens-the-other-pays-the-price-second-heart-is-in-your-calf-101756350330855.html].

சில பயிற்சிகள்: