//கர்நாடக மாநிலம், பெங்களூரு, சி.வி.ராமன் நகரைச் சேர்ந்த, 57 வயதுப் பெண், வீடியோவில் குறிப்பிடப்பட்ட 'வாட்ஸாப்' எண்ணுக்கு வங்கி எண் உட்பட அனைத்து விபரங்களையும் கொடுத்தபோது, அந்தப் பெண்ணை வலீத் என்பவர் தொடர்புகொண்டு, 'ஆன்லைன் டிரேடிங்' குறித்து விளக்கினார்.
வலீத் அனுப்பிய செயலியைப் பதிவிறக்கம் செய்த அப்பெண், பல லட்சம் ரூபாயை முதலீடு செய்தார்.
அந்தச் செயலி, அவர் பல லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியதாகக் காண்பித்தது. இதை நம்பியவர் ஏப்ரல் 23ஆம் தேதிவரை, 3.75 கோடி ரூபாயை முதலீடு செய்தார். இந்தத் தொகையைச் சில நாட்களுக்கு முன் அவர் எடுக்க முயன்றதில் அது இயலாமல்போனது. இதுகுறித்து, வலீத்துடன் தொடர்புகொள்ள முயன்றபோது, அவரது மொபைல் போன் 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், சைபர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
போலீசார் கூறுகையில், “சைபர் மோசடி நடந்து, பல மாதங்களுக்கு பின், அப்பெண் புகார் அளித்துள்ளார். பணத்தை மீட்பது சவாலான விஷயம். இருப்பினும், பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். 'சத்குரு’ பேசுவது போல் அச்சு அசல் தொழில்நுட்பத்தில்[?!] போலியான வீடியோவை உருவாக்கியுள்ளனர். அதை உண்மை என நம்பி ஏமாந்துள்ளார் அந்தப் பெண்”என்றனர்// -இது இன்றைய ஊடகச் செய்தி.
பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்கை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், ஜக்கி பேசுவது போன்ற வீடியோவை உருவாக்கியவனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் அதே வேளையில், உண்மையான ஜக்கிவாசுதேவனிடம்[குற்றவாளியோ அல்லவோ> மோசடிக்குப் பயன்படுத்தப்பட்டவர்] விசாரணை நடத்துவது மிக முக்கியம். நடத்தியதாகத் தெரியவில்லை[ஊடகச் செய்தியில் இது இடம்பெறவில்லை].
இந்நாள்வரை ஜக்கி மீது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஏராளம். எந்த ஒன்று குறித்தும் காவல்துறை விசாரணை நடத்தியதே இல்லை.
காரணம்.....
ஆட்சியாளர்களுக்கு இவர் மீதான அதீதப் பக்தியா, தங்களைச் சபித்துவிடுவார் என்னும் அச்சமா?!
* * * * *
***தன்னைப் பிரபலப்படுத்துவதற்கென்று பெரும் எண்ணிக்கையில் இணைய எழுத்தாளர்களை ஈடுபடுத்துகிறார் ஜக்கியார்!

