எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 11 அக்டோபர், 2025

‘சாதி’யை[ஜி.டி.நாயுடு]ச் சாதிக் கண்கொண்டு பார்க்காதீர்!

தெருக்களுக்குச் சூட்டப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்க உத்தரவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை அவினாசி சாலைக்கு[புதிய மேம்பாலம்]  ‘ஜி.டி.நாயுடு’ அவர்களின் பெயர் சூட்டியதும், பகுத்தறிவாளர் சத்தியராஜ் அதை வரவேற்றிருப்பதும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

சாதிப் பெயர் சூட்டுவது பிற்போக்குத்தனம் என்கிறவர்கள், நாயுடுவை நீக்கி, ‘கோபால்சாமி துரைசாமி மேம்பாலம்’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தால்.....

“யாரிந்தக் கோபால்சாமி துரைசாமி? ஸ்டாலின் சொந்தக்காரரா? மக்கள் வரிப்பணத்தில் கட்டிய மேம்பாலத்திற்கு அவர் பெயர் சூட்டுவது அநியாயம்; அக்கிரமம் என்று மூச்சமுட்ட முழக்கம் செய்திருப்பார்கள் இவர்கள்.

‘நாயுடு’ நீக்கப்பட்ட அவரின்[ஜி.டி.நாயுடு]]  பெயர் சாலைக்குச் சூட்டப்பட்டால், அறிஞர் ஜி.டி. நாயுடுவை நினைவுகூர்தல் சாத்தியமே இல்லை என்பது இவர்களுக்குத் தெரியும்.

இப்பெயரை உச்சரிக்கும்போதெல்லாம், சாதி வேற்றுமைகளைப் புறக்கணித்து வாழ்ந்து மறைந்த அந்த அறிஞர்தான் நினைவுக்கு வருகிறாரே தவிர, ‘நாயுடு’ என்னும் சாதியல்ல என்பதையும், இதனால் எந்தவொரு சாதியாருக்கும் எந்தவிதப் பாதிப்பும் இல்லை என்பதையும்,  படிப்படியாகவேனும் சாதி வேறுபாடுகளை அகற்றுவதற்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இது[தெருக்களுக்கான சாதிப் பெயர் நீக்கம்]வும் ஒன்று என்பதையும் இவர்கள் அறிவார்கள்.

அறிந்திருந்தும் எதிர்த்துக் குரல் எழுப்பிடக் காரணம், 100% அரசியல் மட்டுமே!
                                            
                                                     *   *   *   *   *
***கோபால்சாமி துரைசாமி(G. D. Naiduமார்ச் 231893 -சனவரி 41974) அவர்கள் பலரால் ஜி. டி. நாயுடு என்று அறியப்படுகிறார். இவர் தமிழகத்தின் அறிவியல் மாமேதைகளுள் ஒருவர். இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளைச் செய்தவர்- விக்கிப்பீடியா.