16 வயதுக்குள்ளான ஒரு காதல் ஜோடி, நம் பரம்பரை எதிரியின் நாட்டிலிருந்து அடைக்கலம் தேடி இந்தியா வந்தது என்பது https://www.bbc.com/tamil/articles/c62q234n6ypo செய்தி.
பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என்பதால், அதுகள் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைகளில் உள்ள சதுப்பு நிலப் பகுதியைக் கடந்து இந்தியாவின் ‘ரான் ஆஃப் கட்ச்’ பகுதியில் உள்ள காதிர் தீவின் ‘ரத்தன்பார்’ கிராமத்திற்கு வந்ததுகளாம்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு சீர்குலைந்துள்ள நிலையில் அவர்கள் இங்கு வந்தது, காதல் மோகம், அபாயகரமான எல்லைகளையும் கடக்கவல்லது என்பதை உணர்த்துவதாக வியந்துரைக்கிறது ‘பிபிசி’.
திடகாத்திரமான ஓர் ஆணின் பாதுகாப்புடன் செல்லும் பெண் பிள்ளைகளையே கடத்தி, வன்புணர்வு செய்து, சீரழித்துச் சிதைக்கிற காமுகர்களின் கண்ணில் படாமல் இந்தச் சிறுமி தப்பிப் பிழைப்பாளா? என்பது நம் இமாலயக் கேள்வி.
காதலோ காமமோ இப்படியொரு கெட்ட உணர்வுடன், மனிதர்களை நாயாய்ப் பேயாய் அலையவிடுகிற அந்த ஆண்டவன், இந்தப் பச்சிளம் காதல் பைத்தியங்களைக் காத்தருள வேண்டும் என்பது நம் கோரிக்கை.
நீங்களும் உங்களுக்கான கடவுளிடம் கோரிக்கை வையுங்களேன்.

