எனது படம்
தமிழர்கள் தமிழ்ப் பற்றாளர்களாக இருந்தால் மட்டும் போதாது; இந்தி ஆதிக்கத்தைத் தகர்க்க, தமிழ் வெறியர்களாக ஆவது[பிற மொழியாளரும்தான்] மிக அவசியம். இந்தி வெறியர்களின் கொட்டத்தை அடக்கக் கடுமையான போராட்டங்கள் தேவைப்படலாம்.

ஞாயிறு, 12 அக்டோபர், 2025

நோயாளியின் மனச்சோர்வால் அதிகரிக்கும் சர்க்கரை அளவு!

மீபத்தில் நீரிழிவு நோய் குறித்து உலகம் முழுக்க ஒரு பெரிய ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

நீரிழிவு நோயில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதில், முக்கியமான காரணிகளைக் கண்டறிவதற்கான சோதனையில் ஏராளமான நீரிழிவு நோயாளிகள் பங்கேற்றார்கள்.

அந்த ஆராய்ச்சியில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருப்பவர்கள், அதன் அளவு கட்டுக்குள் இல்லாதவர்கள் என்று நோயாளிகளை இரு பிரிவாக்கினார்கள்.

உலகம் முழுதும் உள்ள இரண்டு விதமான நோயாளிகளிலும், அந்த இரண்டு நிலைகளுக்கும் காரணமானவை எவை என ஆய்வு நடத்தப்பட்டது.

நீரிழிவு நோய்க்கான மருந்தைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதுதான், சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் காரணிகளில் முக்கியமானதாக இருக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கு, இந்த ஆராய்ச்சியின் முடிவு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

நீரிழிவு நோய்க்கான மருந்தைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்ட நோயாளிகளுக்கு[மிகப் பலர்]க்கூட, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இல்லை என்பதே அதற்கான காரணமாக இருந்தது.

தொடர்ந்து ஆராய்ந்தபோது அவர்கள் கண்டறிந்த உண்மை:

தீராத மனச்சோர்வுடன் இருக்கும் நீரிழிவு நோயாளி, முறையாக நீரிழிவு நோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொண்டாலும், சர்க்கரையின் அளவு குறைவதற்கு மாறாக அதிகரிக்கிறது.

எனவே, இப்போதெல்லாம் நீரிழிவு நோய்க்கு மருந்து அளிப்பதோடு, நோயாளியின் மனச் சோர்வைப் போக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

* * * * *

https://healthandbeautymonthly.com/?p=4239