சாமியைத் தரிசனம் பண்ணிப் பரப்புரையைத் தொடங்கினாராம் எடப்பாடியார்.
திருநீறு பூசி, அதில் பொட்டு வைத்து, பரிவட்டம் கட்டி, கிரீடமும் சூடிப் பெருமாள் சாமியைப் பயபக்தியுடன் தரிசனம் பண்ணியதால், அந்தச் சாமி 100% வெற்றி தேடித்தரும் என்பதில் சந்தேகமே இல்லை. அப்புறம் எதற்கு மக்களிடையே பரப்புரை குரைப்பு உரையெல்லாம்?
சாமியைவிடவும் சக்தி வாய்ந்தது, மக்கள் உட்பட வேறு எதுவும் இல்லை. கும்பிடு போட்டுவிட்டுச் சும்மா இருக்கலாம். எல்லாம் பெருமாள் சாமி பார்த்துக்கொள்வார்.
அவர் மக்களின் கனவில் காட்சியளித்தோ, அசரீரியாகவோ "எடப்பாடியாருக்கே உங்கள் ஓட்டு" என்று உத்தரவிடுவார்.
அவரின் உத்தரவுக்கிணங்க மக்கள் வாக்களிப்பார்கள். புரட்சித் தமிழர் தேர்தல் போட்டியில் வென்று தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார்.
அரியணை ஏறிய பிறகு, மறவாமல் பெருமாள் கோயில் உண்டியலில் கட்டுக்கட்டாகப் பணம்[கறுப்போ வெள்ளையோ] போட்டு அவருக்கு நன்றி சொல்வது பு. தமிழரின் கடமை.
அப்புறம்?
அப்புறம் என்ன, முதல்வராகிவிட்டால், உண்டியலில் போட்ட பணத்தை வட்டியோடு சேர்த்துச் சென்றாயப் பெருமாள் உரிய முறையில் திருப்பித் தருவார்.
அவர் அதைச் செய்யத் தவறினால், வடபுலத்து முதலாளிகளிடம் கேட்டு வாங்கி ஈடு செய்யலாம்.
சென்றாயப் பெருமாள் போற்றி! வெல்க... வாழ்க எடப்பாடியார்!!
