“..... சூஃபி பாதை என் அம்மாவையும் என்னையும் ஆன்மீக ரீதியாக உயர்த்தியது. அது எங்களுக்குச் சிறந்த பாதை என்று நாங்கள் உணர்ந்தோம். எனவே, நாங்கள் சூஃபி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம். எங்களைச் சுற்றியுள்ள யாரும் எங்களின் மதமாற்றத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. நாங்கள் இசைக்கலைஞர்கள். அது எங்களுக்கு அதிகச் சமூகச் சுதந்திரத்தை அனுமதித்தது” என்று சொல்லியிருக்கிறார், திலீப்குமாராக இருந்து உலகப்புகழ் இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர். ரஹ்மான்.
"என் தங்கையின் ஜாதகத்தைக் காட்ட[திருமணம் தொடர்பாக] அம்மாவும் நானும் ஒரு ஜோதிடரிடம் சென்றோம், அவர் 'அப்துல் ரஹ்மான்' மற்றும் 'அப்துல் ரஹீம்' என்ற பெயர்களைப் பரிந்துரைத்தார். 'ரஹ்மான்' என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆக, எனக்கு முஸ்லிம் பெயரை வைத்தது ஒரு இந்து ஜோதிடர்"[நல்ல வேளை கருப்பனார், முனியப்பனார், மண்ணாங்கட்டி, சுண்ணாம்புக்கட்டி என்பதான பெயரெல்லாம் சிபாரிசு பண்ணல] என்று உளறிக்கொட்டியிருக்கிறார்.
தம்பி ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களே,
ஜோதிடத்தின் பெயரால் மக்களை முட்டாள்களாக்கிப் பிழைப்பு நடத்துபவர்கள் ஜோதிடர்கள். அவர்களின் ஒருவன் புளுகி வைத்ததை நம்பியது உனக்குச் சிந்திக்கும் அறிவு இல்லை என்பதன் அடையாளம்.
ஜோதிடர்கள் முட்டாள்கள் என்பது பற்றியோ, அவனை நம்பிய நீ படுமுட்டாள் என்பதைப் பற்றியோ எங்களுக்குக் கவலையில்லை. இந்த உண்மையைப் பலர் அறிய வெளியே சொல்லி, ஆகச் சிறந்த இசையமைப்பாளன் என்ற வகையில் உன் ரசிகர்களாக உள்ள ஆயிரக்கணக்கானவர்களையும் மூட்டாள்களாக ஆக்குகிறாயே அதுதான் எங்களைப் பெரிதும் கவலைப்படச் செய்கிறது.
புகழ்ப் போதையில் இந்தவொரு தவற்றைச் செய்திருக்கிறாய். இருப்பினும், உன் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவிப்பது பெரிதும் வரவேற்கத்தக்கதாக அமையும்.
வருந்துவதாக அறிவிப்புச் செய்வாயா தம்பி ரஹ்மான்?
* * * * *
கூடுதல் தகவல்களுக்கு:

