எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 15 நவம்பர், 2025

காங்கிரஸ் ‘ஒட்டுண்ணி’க் கட்சி! ஒட்டவே ஒட்டாத உண்ணி[உயிர்]யா மோடியின் ‘பாஜக’?!

தேர்தல் என்றால், போட்டியிடும் கட்சிகளில் ஒன்று ஊழல் செய்தோ செய்யாமலோ வெற்றி பெறுதல் என்பது வழக்கமான நிகழ்வு.

வென்ற கட்சியின் தலைவன் மனிதப் பண்பு உள்ளவனாக இருந்தால், வெற்றியைத் தன் கட்சியின் அல்லது தன்னுடைய சாதனையாக்கிக் பெருமிதப்படுவானே தவிர, தோல்வியுற்ற கட்சிக்காரர்களை இழிவுபடுத்தமாட்டான்.

இழிவுபடுத்துபவன் இழி பிறவி.


பீகார் தேர்தலில் தோற்ற காங்கிரஸ் கட்சியை ‘ஒட்டுண்ணிக் கட்சி’ என்று எகத்தாளமாகப் பேசி, அதை இழிவுபடுத்தியிருக்கிறார் நம் பெருமதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி.

ஒட்டுண்ணி என்பது, பிறிதொரு உயிரைச் சார்ந்திருந்து வாழுகிற ஓர் உயிரினம். ‘பேன்’ ஓர் உதாரணம். தலை மயிரில் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை உறிஞ்சி வாழ்கிறது அது. 

பீகார் தேர்தலில் தோற்ற காங்கிரஸ் கட்சியை மோடி ‘ஒட்டுண்ணி’ என்றது இந்த அடிப்படையில்தான். அதாவது, ஏதேனும் ஒரு அரசியல் கட்சியுடன் ஒட்டி உறவாடித்தான் அதனால் அரசியல் செய்ய முடியும் என்கிறார் அரசியல் அறிஞர் மோடி.

அண்மைக் கால அரசியல் சூழலில் எந்தவொரு கட்சியும்[மோடியின் பாஜக உட்பட] தேர்தல் காலங்களில் தனித்தியங்குவது சாத்தியமே இல்லை. அதனால்.....

 ‘பாஜக’ உட்பட அனைத்துக் கட்சிகளுமே ஒட்டுண்ணிகள்தான்.

ஓர் ஒட்டுண்ணிக் கட்சி[பாஜக]யின் தலைவனாக இருந்துகொண்டு மோடி இப்படிப் பேசக் காரணம் அவருக்குள்ள அகம்பாவமா, அறியாமையா?